பண்டைத் தமிழகம்
- ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னாட்டின் பெரும்பகுதி சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது
- நாடு சுதந்திரம் பெற்ற பின் தமிழ் மொழி பேசப்படும் மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது.அதற்கு 1967 - ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்
- தென்னாட்டின் தென்பகுதியைப் பாண்டியர்களும், மேற்குப்பகுதியை சேரர்களும் ,வடகிழக்குப் பகுதியைச் சோழர்களும் ஆண்டு வந்துள்ளனர்
மூன்று சங்கங்கள்
- பாண்டியர்களின் தலைநகர் தென்மதுரையில் தமிழ் வளர்த்த தலைச்சங்கம் கூடியது
- கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய அரசில், தமிழ் வளர்த்த புலவர்கள் கூடும் இடைச்சங்கம் நடைபெற்றது
- மதுரை மூதூரில் தமிழ் வளர்த்த புலவர்களின் கடைச்சங்கம் நடைபெற்றது
- தமிழ் மொழியின் வளத்தைப் பெருக்கும் இலக்கியம் வளர்த்த தலை, இடை, கடைச் சங்கங்கள் மூன்றும் தலைமுறை பலவாகப் பாண்டியர் தலைமையில் நடைபெற்றது
வரலாற்றுக் காலம்
- சங்ககாலம் என்பது கடைச்சங்கத்தில் புலவர்கள் அவ்வப்போது கூடி தமிழ் ஆய்வு செய்த காலம் ஆகும்
- தற்காலத்தில் சங்க இலக்கியம் என கிடைத்துள்ள நூல்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும்.அவற்றில் உள்ள செய்யுட்களை கபிலர், பரணர், ஔவையார், நக்கீரர் போன்ற பல நூறு புலவர்கள் இயற்றியுள்ளனர்.அவற்றின் மூலம் தமிழ் மக்களின் நாகரிகம், பழக்க வழக்கம், பண்பாடு, ஆட்சி முறை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்
- கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய இலக்கண நூல் தொல்காப்பியம்
- சங்க காலத்தில் அனைத்து சமயத்தாரும் வியந்து போற்றும் அளவிற்கு இருந்த நூல் திருக்குறள்
- தமிழ் மொழி தமிழ் இலக்கண வரம்பு கொண்டு வளர்ந்த தன்மையால் செந்தமிழ் என அழைக்கப்படுகிறது
- பிற மொழிகளின் துணை தேவையின்றி தமிழ் வளரும் திறன் பெற்றிருப்பதால் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்றும் அழைக்கப்படுகிறது
- அக்காலத்தில் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, முசிறி, தொண்டி, வஞ்சி முதலான பல துறைமுகங்கள் இருந்தன
- தமிழ்நாடு,மேற்கிலும் கிழக்கிலும் இருந்த எகிப்து, ரோம், சீனம் போன்ற பல நாடுகளுடன் பண்டமாற்று வணிகம் செய்துவந்தது
- சங்க காலத்தில் தமிழ் புலவர்கள் நிலத்தை ஐந்து இயற்கைப் பிரிவாகப் பிரித்துள்ளனர்
- மலைகளும், அது சார்ந்த நிலமும் குறிஞ்சி எனப்படும்
- காடுகளும், அது சார்ந்த நிலமும் முல்லை எனப்படும்
- கடலும், கடற்கரைப் பகுதியும் நெய்தல் எனப்படும்
- நீர் வளத்துடன் வயல் சூழ்ந்த பகுதி மருதம் எனப்படும்
- கடும் வறட்சிக்கு உள்ளாகித் திரிந்த நிலம் பாலை எனப்படும்
Comments
Post a Comment