Skip to main content

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்


            
               Divisors and Factors
               வகுத்திகள், காரணிகள்

  • கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss)

வகுத்திகள்

  • ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும்
  • 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும்
  • பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2
  • பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,.......

காரணிகள்

  • ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும்
  • பகா எண்களுக்கு காரணிகள் இல்லை
  • இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும்

வகுபடுந்தன்மை
2 - ஆல் வகுபடுந்தன்மை

  • 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும்

5 - ஆல் வகுபடுந்தன்மை

  • 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும்

10 - ஆல் வகுபடுந்தன்மை

  • 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியமாக இருந்தால் அது 10 - ல் வகுபடும்

4 - ஆல் வகுபடுந்தன்மை

  • ஓர் எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் (1,10 - ம் இலக்கங்கள்) 4 - ன் மடங்காக  இருந்தால் அந்த எண் 4 - ஆல் வகுபடும்

8 - ஆல் வகுபடுந்தன்மை

  • ஓர் எண்ணின் கடைசி மூன்று இலக்கங்கள் 8 - ன் மடங்காக இருந்தால் அந்த எண் 8 - ஆல் வகுபடும்

9 - ஆல் வகுபடுந்தன்மை

  • ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9 - ன் மடங்காக இருந்தால் அந்த எண் 9 - ஆல் வகுபடும்
எடுத்துக்காட்டு
1. 45 என்ற எண் 9 - ஆல் வகுபடுமா?
45 = 10+10+10+10+5
      =(9+1)+(9+1)+(9+1)+(9+1)+5
9 - ஐ கழித்தால் மீதி இருப்பது = 1+1+1+1+5
                                                            =4+5=9
கடைசி 9 - ஐயும் கழித்தால் மீதி = 0
ஃ 45,9 - ஆல் வகுபடும்

2. 123,9 - ஆல் வகுபடுமா?
123 = 100+10+10+3
        =(99+1)+(9+1)+(9+1)+3
        =(99+1)+(9+9+2)+3
9 அல்லது 9-ன் மடங்குகளைக் கழித்தால் மீதி இருப்பது = 1+2+3 = 6
ஃ 123 என்ற எண் 9-ஆல் வகுபடாது

3. 558 = 5+5+8 = 18
                          =1+8 = 9
                 9 - ஆல் வகுபடும்

4. 971 = 9+7+1 = 17
                          =1+7 = 8
                    9 - ஆல் வகுபடாது
5. 54000 = 5+4+0+0+0 = 9
                    9 - ஆல் வகுபடும்

3 - ஆல் வகுபடுந்தன்மை

  • ஓர் எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 3 - ன் மடங்காக இருந்தால் அந்த எண் 3 - ஆல் வகுபடும்

11 - ஆல் வகுபடுந்தன்மை

  • ஓர் எண்ணின் ஒற்றை இட எண்களின் இலக்கங்களின் கூடுதலுக்கும், இரட்டை இட எண்களின் இலக்கங்களின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம் 0 ஆகவோ அல்லது 11 - ன் மடங்காகவோ இருந்தால் அந்த எண் 11 - ஆல் வகுபடும்

பகாக் காரணிப்படுத்துதல்
  • எந்த ஓர் எண்ணையும் ஒன்றுக்கு மேற்பட்ட பகா எண்களின் பெருக்கலாக எழுதும் முறை பகாக் காரணிப்படுத்துதல் எனப்படும்

மீப்பெரு பொது வகுத்தி(G.C.D)

  • வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி எனப்படும்
  • எடுத்துக்காட்டு
30,42 - ன் மீப்பெரு பொ.வ
 முறை - 1: பொது மடங்கு முறை
30-ன் வகுத்திகள் = 1,2,3,5,6,10,15,30
42-ன் வகுத்திகள் = 1,2,3,6,7,14,21,42
பொது வகுத்திகள் = 1,2,3,6
30,42-ன் மீப்பெரு பொ.வ = 6
 முறை - 2: காரணி முறை
30-ன் காரணிகள் = 2×3×5
42-ன் காரணிகள் = 2×3×7
மீப்பெரு பொது வகுத்தி என்பது இரண்டுக்கும் பொதுவான காரணிகள்
30,42-ன் மீப்பெரு பொ.வ = 2×3 = 6

மீச்சிறு பொது மடங்கு(L.C.M)

  • வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு எனப்படும்
  • எடுத்துக்காட்டு
16,24 - ன் மீச்சிறு.பொ.ம
முறை - 1: பொது மடங்கு முறை
16 - ன் மடங்குகள் = 16,32,48,64,80,96,112,128,144,160,.......
24 - ன் மடங்குகள் = 24,48,72,96,120,144,168,.....
16,24 - ன் பொது மடங்குகள் = 48,96,144,....
(மீச்சிறு.பொ.ம என்பது பொது மடங்குகளில் மிகவும் சிறியது)
16,24 - ன் மீச்சிறு.பொ.ம = 48
முறை - 2: காரணி முறை
16 - ன் காரணிகள் = 2×2×2×2
24 - ன் காரணிகள் = 2×2×2×3
மீச்சிறு.பொ.ம என்பது இரண்டுக்கும் பொதுவான காரணிகள் × விடுபட்ட காரணிகள்
16,24 - ன் மீச்சிறு.பொ.ம = 48
சார்பகா எண்கள்

  • இரு எண்களின் மீப்பெரு பொது வகுத்தி 1 எனில் அவ்விரு எண்களும் சார்பகா எண்கள் எனப்படும்

மீப்பெரு.பொ.வ, மீச்சிறு.பொ.ம ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு

1. 36,156 என்ற இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 12 எனில் அவற்றின் மீச்சிறு பொது.ம காண்க
முதல் எண் = 36
இரண்டாவது எண் = 156
மீப்பெரு.பொ.வ = 12
மீச்சிறு பொ.ம = இரு எண்களின் பெருக்கற்பலன்/மீப்பெரு பொ.வ
                              = (36×156)/12
                              =468
2. இரு எண்களின் மீப்பெரு பொ.வ 3, மீச்சிறு பொ.ம 72, ஒரு எண் 24 எனில் மற்றொரு எண் ணைக் காண்க
ஒரு எண் = 24
மீப்பெரு பொ.வ = 3
மீச்சிறு பொ.ம =72
மற்றொரு எண் = (மீப்பெரு பொ.வ×மீச்சிறு பொ.ம)/ஒரு எண்
                                =(3×72)/24
                                =9








Comments

  1. முழுக்கள்என்றால் என்ன 5 paints

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...