Skip to main content

6 - ம் வகுப்பு சமூக அறிவியல் - பொருளாதாரம்



                        பொருளாதாரம்


  • மனிதன் கண்ட முதல் தொழில் பயிர்த்தொழில் ஆகும்
  • மழை, குளிர், வெயில் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குகைகளில் வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் வீடு கட்டி வாழத்தொடங்கினான். நகரங்களும் உருவாகியது
  • மனிதன் தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ள ஆடைகள், காலணிகள், மிதிவண்டிகள், மகிழ்வுந்துகள், வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல பொருட்களைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்கிறான்
  • உழவர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் பங்காற்றி நாட்டின் வருமானத்தைப்  பெருக்குகின்றனர். எனவே இது நாட்டு வருவாய் எனப்படும்
  • தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் தனிநபர் வருமானம் எனப்படும்
  • உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு ஆகிய மூன்றும் பொருளாதாரத்தின் அடிப்படை ஆகும்
  • வாங்குவதும், விற்பதும் நடைபெறும் இடம் சந்தை எனப்படும்
  • மக்கள் சந்தையில் இருந்து பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்வது நுகர்ச்சி எனப்படும்
  • பொருட்களை வாங்கி விற்பதற்கு வணிகம் என்று பெயர். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
  • பொருட்கள் உற்பத்தியாகும் இடங்களில் இருந்து வணிகர்கள் சந்தைக்கு எடுத்து வந்து விற்கிறார்கள். மொத்தமாக பொருட்களை வாங்கி விற்பவர்கள் பெரும் வணிகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சிறிய அளவில் வாங்கி விற்பவர்கள் சிறு வணிகர்கள் அல்லது வியாபாரி என அழைக்கப்படுகின்றனர்
  • தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு ஆகியவையும் பெருகிக்கொண்டே செல்கிறது. இதுவே பொருளாதார வளர்ச்சி எனப்படும்
  • நமது நாட்டில் பொருளாதாரத்திற்காக அறிஞர் அமர்த்தியாசென் நோபல் பரிசினைப் பெற்றுள்ளார்


Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...