Skip to main content

7 - ம் வகுப்பு சமூக அறிவியல் - தக்காண அரசுகள்



        தக்காண அரசுகள்



  • இந்தியாவின் தெற்குப்பகுதி தக்காணம் அல்லது தட்சணபதம் என அழைக்கப்படுகிறது
  • சாளுக்கியர்கள் (கி.பி. 6 - 12 நூற்றாண்டுகள்)
  • சாளுக்கியர்களின் ஆட்சி காலத்தை மூன்று விதமாகப் பிரிக்கலாம்

1.முற்கால மேலைச் சாளுக்கியர் (கி.பி. 6 - 8 நூற்றாண்டுகள்)
2. பிற்கால மேலைச் சாளுக்கியர் (கிபி 10 - 12 நூற்றாண்டுகள்)
3. கீழைச் சாளுக்கியர் (கி.பி. 7 - 12 நூற்றாண்டுகள்)
1.முற்கால மேலைச் சாளுக்கியர்

  • கி.பி. 6 - ம் நூற்றாண்டில் இன்றைய கர்நாடக மாநிலம் அமைந்துள்ள பகுதியில் சாளுக்கியர்கள் தங்களது அரசாட்சியை ஏற்படுத்தினர்
  • தற்போது பதாமி என்றழைக்கப்படும் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வாதாபி அவர்களுடைய தலைநகரமாய் விளங்கியது
  • முதலாம் புலிகேசி (கி.பி. 543 - 566) வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர்

2. பிற்கால மேலைச் சாளுக்கியர்

  •  பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தொடங்கிய அரசர் இரண்டாம் தைலப்பா (கிபி 973 - 997)

3. கீழைச் சாளுக்கியர்

  • கீழைச் சாளுக்கிய மரபைத் தொடங்கிய மன்னர் விஷ்ணுவர்த்தன் ஆவார்
  • குலோத்துங்கச் சோழன் கீழைச் சாளுக்கிய நாட்டினை சோழப் பேரரசுடன் இணைத்து சோழ நாட்டு மன்னர் ஆனார்

சாளுக்கியர்களின் பங்களிப்பு

  • இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவரான இரவிகீர்த்தி, ஐஹோலே கல்வெட்டுகளைப் படைத்தவராவார்
  • 70க்கும் மேற்பட்ட கோயில்களை ஐஹோலேவில் கட்டினர். இதனால் ஐஹோலே 'இந்தியக் கோயில் கட்டடக்கலையின் தொட்டில்' என சிறப்பிக்கப்படுகிறது

இராட்டிரகூடர்கள் (கி.பி. 8 - 10 ம் நூற்றாண்டுகள்)

  • வட இந்தியாவிலிருந்த ரத்தோர்களின் வழிவந்தோரே இராட்டிரகூடர்கள் ஆவார்
  • இராட்டிரகூடர் என்னும் சொல்லிற்கு, இராட்டினம் என்னும் (நாட்டின் சிறிய) பகுதியினை ஆளுகை செய்யும் உரிமை பெற்றவர்கள் எனப் பொருளாகும்
  • புகழ்பெற்ற எல்லோராவின் கைலாசநாதர் குடைவரைக்கோயிலை உருவாக்கியவர் முதலாம் கிருஷ்ணர்
  • மும்பைக்கு அருகில் உள்ள எலிஃபண்டா குகைக்கோயிலைக் கட்டிமுடித்தவர்கள் இராட்டிரகூடர்கள் ஆவர்
  • அமோகவர்ஷன் என்ற மன்னர் கன்னட மொழியில் 'கவிராச மார்கம்' என்ற இலக்கியத்தைப் படைத்துள்ளார்

வாரங்கலை ஆண்ட காகத்தியர்(கி.பி. 12 - 14 நூற்றாண்டுகள்)

  • கல்யாணியை ஆண்ட மேலைச் சாளுக்கியர்களிடம் குறுநில அரசர்களாக இருந்தவர்கள் காகத்தியர்கள் ஆவர்

தேவகிரியை ஆண்ட யாதவர்கள் (கி.பி. 12 - 14 ம் நூற்றாண்டுகள்)

  • தேவகிரியை ஆட்சிசெய்த யாதவர்கள் தங்களை புராண நாயகனான கிருஷ்ண பகவானின் வழி வந்தோர் எனக் கூறிக் கொண்டனர்







    Comments

    Popular posts from this blog

    6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

            Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

    6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

    6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

    6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                                Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...