Skip to main content

இயற்பியல் - ஒலி


                   Sound
                   ஒலி

  • ஒலி என்பது ஒரு ஆற்றலாகும்
  • ஒலிகள் பொருட்கள் அதிர்வடைவதனால் உருவாகின்றன
  • மனிதனின் செவிகளால் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் நெடுக்கம் மற்றும் ஆற்றல் கொண்ட ஒலி அலைகளை மட்டுமே கேட்டுணர முடியும்

ஒலி ஏற்படுதல்


  • ஒரு பொருளில் வேலை செய்யப்படும்போது அதிர்வுகள் உருவாகின்றன
  • அதிர்வுகள் என்பவை ஒரு துகளில் ஏற்படும் முன்னும் பின்னுமான நகரும் இயக்கமாகும்
  • இயந்திர ஆற்றல் ஒரு பொருளை அதிர்வடையச் செய்கிறது
  • இவ் அதிர்வுகள் நம் செவியை வந்தடையும் போது நாம் ஒலியை உணர்கிறோம்

ஒலி அலைகள் பரவுதல்

i)ஒலி அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவை
  • ஒலி அலைகள் வெற்றிடத்தில் பரவாது
  • ஒலி அலைகள் பரவுவதற்கு காற்று, நீர்,எஃகு போன்ற பொருள்கள் தேவை
ii)ஒலி ஒரு அலை
  • ஒரு பொருள் அதிர்வடையும் போது, அந்த பொருளுக்கு அருகிலுள்ள துகளானது  தனது சமநிலைப்புள்ளியிலிருந்து விலக்கப்படுகிறது
  • இத்துகள் அருகிலுள்ள துகள் மீது ஒரு விசையை செலுத்தி அதன் காரணமாக அருகிலுள்ள துகள் தனது ஓய்வு நிலையில் இருந்து நகர்ந்து செல்கிறது
  •  அருகிலுள்ள துகளை இடப்பெயர்ச்சி அடைய செய்த பின்னர் முதல் துகள் தனது பழைய நிலையை அடைகிறது
  • ஒலி நமது செவியை அடையும் வரை இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது
  • ஊடகத்தில் உள்ள அனைத்து துகள்களுமே தங்களது சமநிலை புள்ளியிலிருந்து அதிர்வு எனப்படும் முன்னும் பின்னுமான இயக்கத்தை மேற்கொள்கின்றன. இதனால் அதிர்வானது முன்னோக்கிச் செல்கின்றது. இவ்வாறு முன்னோக்கிச் செல்லும் அதிர்வே அலை எனப்படும்

iii)ஒலி அலைகள் நெட்டலைகள்
  • முன்னும் பின்னுமாக அதிர்வுறும் ஒலி ஒரு நெட்டலை ஆகும். ஊடகத்தில் உள்ள துகள்கள் நெடுக்கமும், நெகிழ்ச்சியும் அடையும் போது தான் அதன் வழியே ஒலி அலைகள் செல்ல முடியும்
  • நெடுக்கம் என்பது துகள்கள் அருகருகே இருக்கும் பகுதி ஆகும்
  • நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதியாகும். அங்கு துகள்கள் விலகி காணப்படும்
  • ஒலி என்பது எந்திரவியல் நெட்டலைக்கு எடுத்துக்காட்டு ஆகும்

ஒலி அலையின் பண்புகள்
1.வீச்சு
  • ஒலி அலையானது ஒரு ஊடகத்தின் வழியே செல்லும்போது, அந்த ஊடகத்தின் துகள்கள் நடுநிலைப் புள்ளியிலிருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும்
  • அதிர்வுறும் பொருளின் வீச்சு அதிகமாக இருந்தால், ஒலி உரத்த ஒலியாகவும், பொருளின் வீச்சு குறைவாக இருந்தால் அது மென்மையான ஒலியாகவும் இருக்கும்
  • வீச்சு A என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது
  • இதன் SI அலகு மீட்டர்
2.அதிர்வெண்
  • அதிர்வடையும் பொருள் ஒரு வினாடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கை அதன் அதிர்வெண் எனப்படும்
  • இது n என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது
  • இதன் SI அலகு ஹெர்ட்ஸ்(Hz)
  • 20 Hz முதல் 20000 Hz வரை அதிர்வெண்கள் கொண்ட   ஒலி அலைகளை மட்டுமே மனிதனின் செவிகள் கேட்டுணர முடியும். இவ்வதிர்வெண்கள் செவியுணர் அதிர்வெண் நெடுக்கம் எனப்படும்
  • 20 Hz -க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட  ஒலிகள் குற்றொலிகள் எனப்படும்
  • 20000Hz - க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலிகள் மிகையொலி அல்லது மீயொலி எனப்படும். இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் உணர முடியாது
3.அலைவுக்காலம்
  • அதிர்வுறும் துகள், ஒரு முழுமையான அதிர்விற்கு எடுத்துக்கொள்ளும் காலம் அலைவுக்காலம் எனப்படும்
  • இது T என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது
  • இதன் SI அலகு வினாடி
4.அலை நீளம்
  • அதிர்வுறும் துகள் ஒன்று, ஓர் அதிர்விற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் ஊடகத்தில்        அலை பரவும் தொலைவு அலைநீளம்                  எனப்படும்
  • ஒரு ஒலி அலையில்,இரண்டு நெருக்கங்கள் மற்றும் நெகிழ்வுகளின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவு ஒரு அலைநீளம் எனப்படும்
  • அலைநீளம் λ என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது
  • இதன் SI அலகு மீட்டர்
5.ஒலியின் திசைவேகம்(v)
  • ஒரு வினாடி நேரத்தில், ஒலி அலை கடக்கும் தொலைவு ஒலியின் திசைவேகம் எனப்படும்
  • இதன் SI அலகு மீட்டர்/வினாடி

ஒலிகளை வேறுபடுத்துதல்
  • ஒலிகளைக் கீழ்க்காணும் காரணிகளைக் கொண்டு ஒன்றிலிருந்து மற்றொன்றாக வேறுபடுத்தலாம்

        1. ஒலிஉரப்பு மற்றும் ஒலிச்செறிவு
        2.சுருதி
        3.தரம்

1. ஒலிச்செறிவு
  • ஒரே அதிர்வெண் கொண்ட இரண்டு ஒலிகள் உரப்பு பண்பு மூலம் வேறுபடுத்தப்படுகிறது
  • ஒரு ஒலி உரத்ததா அல்லது மென்மையானதா என்பது அதன் வீச்சை பொறுத்து அமையும்
  • ஒலியின் உரப்பு பண்பானது அதன் செறிவைச் சார்ந்திருக்கும்
  • ஓரலகு காலத்தில் ஓரலகு பரப்பின் வழியே அலை பரவும் திசைக்கு செங்குத்தாகச் செல்லும் ஆற்றலின் அளவு செறிவு எனப்படும்
  • ஓரிடத்தில் கேட்கும் ஒலியின் செறிவு கீழ்க்கண்ட காரணிகளைச் சார்ந்திருக்கும்
       1. ஒலி மூலத்தின் வீச்சு 
      2. ஒலிமூலத்திற்கும் கேட்பவருக்கும்              இடையே உள்ள தொலைவு
      3. ஒலி மூலத்தின் பரப்பு 
     4. ஊடகத்தின் அடர்த்தி
      5. ஒலி மூலத்தின் அதிர்வெண்
  • ஒலியின் செறிவு டெசிபல் என்ற அலகால் அளவிடப்படுகிறது 
2.சுருதி
  • சுருதி என்பது ஒலி கனத்ததா அல்லது கீச்சலானதா என்பதை அறிய உதவும் பண்பாகும்
  • அதிக சுருதி கொண்ட ஒலிகள் கீச்சலானதாகவும், குறைந்த சுருதி கொண்ட ஒலிகள் கனத்ததாகவும் இருக்கும்
3.தரம்
  • இரண்டு வெவ்வேறு இசைக்கருவிகளினால் எழுப்பப்பட்ட, ஒரே மாதிரியான உரப்பு மற்றும் சுருதியை கொண்ட இரண்டு ஒலிகளை வேறுபடுத்துவதற்கு தரம் என்ற பண்பு பயன்படுகிறது
  • ஒரே ஒரு அதிர்வெண்ணைக் கொண்ட ஒலி தொனி (tone) எனப்படும்
  • பல்வேறு தொனிகளின் தொகுப்பு இசைக் குறிப்பு (note) எனப்படும்
ஒலியின் வேகம்
  • மீட்சித் தன்மை கொண்ட ஊடகத்தின் வழியே பரவும் பொழுது, ஒலியானது ஓரலகு காலத்தில் கடந்த தொலைவு ஒலியின் வேகம் எனப்படும்
  • வேகம்=கடந்த தொலைவு/காலம்
  • வாயுவில் ஒலியின் வேகம் கீழ்க்கண்ட காரணிகளைச் சார்ந்திருக்கும்
          1.ஊடகத்தின் அழுத்தம்
          2.ஊடகத்தின் வெப்பநிலை
          3.ஊடகத்தின் அடர்த்தி
          4.வாயுவின் தன்மை
  • திடப்பொருளில் ஒலியின் வேகம் கீழ்க்கண்ட காரணிகளைச் சார்ந்திருக்கும்
          1.ஊடகத்தின்  நீட்சியில் பண்பு
          2.ஊடகத்தின் வெப்பநிலை
          3.ஊடகத்தின் அடர்த்தி
  • ஒலியின் வேகம் திடப் பொருளை விட வாயுவில் மிகக் குறைவாக இருக்கும்
  • எந்த ஒரு ஊடகத்திலும் வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒலியின் வேகமும் அதிகரிக்கும்

ஒலி எதிரொலித்தல்

எதிரொலித்தல் விதிகள்

  • ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படு கோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்கும்
  • ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன
















Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...