Skip to main content

7 - ம் வகுப்பு சமூக அறிவியல் - வட இந்திய அரசுகள் - இராசபுத்திரர்கள்


 வட இந்திய அரசுகள் - இராசபுத்திரர்கள்


  • வரலாற்றினை எளிய முறையில் புரிந்து கொள்வதற்காக வரலாற்றாளர்கள், வரலாற்றினை, காலத்தின் அடிப்படையில் பண்டைய காலம், இடைக்காலம் மற்றும் நவீன காலம் எனப் பிரித்துள்ளனர்
  • கி.பி.8 - ம் நூற்றாண்டு முதல் கி.பி.18 - ம் நூற்றாண்டு வரை உள்ள காலம் இடைக்காலம் எனப்படும்
  • கி.பி. 8 - ம் நூற்றாண்டு முதல் கி.பி.13 - ம் நூற்றாண்டு வரை உள்ள காலம் இடைக்காலம் எனப்படும்
  • கி.பி.13 - ம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 - ம் நூற்றாண்டு வரை உள்ள காலம் பிந்தைய இடைக்காலம் எனப்படும்

இராசபுத்திரர்கள் காலம் (கி.பி.647 - கி.பி.1200)

  • 36 வகை இராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தார்கள். அவர்களில் வலிமை பெற்ற இராசபுத்திரர்கள்
1. அவந்தியை ஆட்சி செய்த பிரதிகாரர்கள்
2. வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள்
3. ஆஜ்மீர், டெல்லியை ஆண்ட சௌகான்கள்
4. டெல்லியை ஆட்சி செய்த தோமர்கள்
5. கனோஜ் பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்கள்
6. மேவார் பகுதியை ஆட்சி செய்த சிசோதியர்கள் அல்லது குகிலர்கள்
7. பந்தல்கண்டை ஆட்சி செய்த சந்தேலர்கள்
8. மாளவத்தை ஆட்சி செய்த பரமாரர்கள்
9. வங்காளத்தை ஆட்சி செய்த சேனர்கள்
10. குஜராத்தை ஆட்சி செய்த சோலங்கிகள்
பிரதிகாரர்கள் (கி.பி 8 -11 நூற்றாண்டுகள்)

  • பிரதிகாரர்கள் கூர்ஜர மரபினர். எனவே இவர்கள் கூர்ஜர பிரதிகாரர்கள் என அழைக்கப்படுகின்றனர்
  • பிரதிகார மரபைத் தோற்றுவித்தவர் முதலாம் நாகப்பட்டர் (கி.பி 725 - 740)
  • பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் விளங்கியவர் மிகிரபோசர்
  • பிரதிகாரர்களின் கடைசி மன்னர் இராஜ்யபாலா ஆவார்

பாலர்கள் (கி.பி 8 - 12 நூற்றாண்டுகள்)

  • பாலர் மரபைத் தொடங்கியவர் கோபாலர் (கி.பி 765 - 769)
  • பாலர் மரபின் கடைசி மன்னர் கோவிந்தபாலர் ஆவார்

டெல்லியை ஆண்ட தோமர்கள்

  • கனோஜ் பகுதியில் இருந்த பிரதிகாரர்களிடம் திறை செலுத்திய அரசர்கள் தோமர்கள் ஆவர்
  • பின்னர் இவர்கள் தனியரசை ஏற்படுத்தி டெல்லி நகரை  கி.பி.736 ல் நிறுவினார்கள்

டெல்லி மற்றும் ஆஜ்மீர் பகுதியில் ஆட்சி செலுத்திய சௌகான்கள்

  • கனோஜ் பகுதியை ஆண்ட பிரதிகாரர்களுக்குத் திறை செலுத்துபவர்களாக இருந்தவர்கள் சௌகான்கள் ஆவர்

கனோஜ் பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்கள் (கி.பி. 1090 - 1194)

  • பிரதிகாரர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் கனோஜ் பகுதியில் தெளிவற்ற சூழல் நிலவியது. இதனைப் பயன்படுத்தி ரத்தோர்கள் கனோஜ் அரசைக் கைப்பற்றினர்

பந்தல்கண்ட் பகுதியை ஆட்சி செய்த சந்தேலர்கள்

  • பிரதிகாரர்களின் ஆட்சியில் இருந்த பந்தல்கண்ட் பகுதியை கி.பி.9 - ம்  நூற்றாண்டில் தனியரசாக சந்தேலர்கள் அமைத்தனர்
  • சந்தேலர்களின் கடைசி அரசர் பாரமால்
  • கலிஞ்சார் கோட்டை இவர்களது முக்கிய கோட்டையாகும்
  • கஜுராஹோவில் பல அழகிய கோயில்களை இவர்கள் கட்டினார்கள். இவைகளுள் கந்தர்ய மகாதேவர் ஆலயம் (கி.பி. 1050) புகழ் பெற்றதாகும்

மேவாரை ஆட்சி செய்த சிசோதியர்கள் அல்லது குகிலர்கள் 

  • சிசோதிய மரபினைத் தொடங்கியவர் பாபாரவால்

மாளவம் பகுதியை ஆண்ட பரமாரர்கள்

  • பரமாரர்கள் கி.பி. 10 - ம் நூற்றாண்டில் தம்மைச் சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டனர்

கலை மற்றும் கட்டடக்கலை

  • கஜுராஹோ நகரின் ஆலயங்களும், புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராஜா கோயிலும், கோனார்க்கில் உள்ள சூரியக்கோயிலும், அபுமலையில் கட்டப்பட்டுள்ள தில்வாரா ஆலயமும் இராசபுத்திரர்களின் கோயில் கட்டிடக் கலையின் சிறப்பான எடுத்துக்காட்டுகளாகும்
  • ஜெய்ப்பூர், உதய்பூர் நகர அரண்மனைகளும், சித்தூர், மாண்டு, ஜோத்பூர், குவாலியர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கோட்டைகளும் இராசபுத்திரர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்







Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...