சமுதாயமும் பள்ளியும்
- சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும் அடிப்படை முதலீடு கல்வி ஆகும்.எனவே அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது
- சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம் பள்ளி ஆகும்
- பள்ளி சமுதாய நிறுவனங்களுள் ஒன்று
- பள்ளி சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது
- குழந்தைகள் வருங்காலச் சமுதாயத்தின் குடிமக்கள். எனவே பொறுப்பும், ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள இளைஞர்களை உருவாக்க பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன
- ஒழுங்கு, கட்டுப்பாடு, சமத்துவம், கூட்டுறவு மனப்பான்மை, சேர்ந்து வாழும் முறை, உதவி மனப்பான்மை, ஒத்துணர்வு ஆகிய நல்லொழுக்க நெறிமுறைகளை குழந்தைகளுக்கு பள்ளியிலிருந்து கற்பிக்கப்படுகிறது
- பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சமுதாயத்தோடு இணைந்து செயல்படும் போது அவர்கள் மாணவர் சமுதாயம் என்றும், வளரிளம் பருவத்தினர் என்றும், இளைஞர் சமுதாயம் என்றும் அழைக்கப்படுகின்றனர்
Comments
Post a Comment