6 - ம் வகுப்பு அறிவியல் - அளவீடுகள்
நீளம்
- ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும்
- நீளத்தின் அலகு மீட்டர்
1 சென்டிமீட்டர்=10 மில்லி மீட்டர்1 மீட்டர்=100 சென்டிமீட்டர்1 கிலோமீட்டர்=1000 மீட்டர்
- ஒரே மாதிரியான அளவீட்டு முறைக்காக, உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள் பொதுவான அலகுகளை ஏற்றுக்கொண்டனர். இந்த முறையானது பன்னாட்டு அலகு முறை அல்லது SI அலகு முறை எனப்படுகிறது
நீளத்தின் SI அலகு மீட்டர்நிறையின் SI அலகு கிலோகிராம்காலத்தின் SI அலகு வினாடிபரப்பளவின் அலகு மீ2பருமனின் அலகு மீ3
பருமன்
திடப்பொருளின் பருமன்
- நீளம், அகலம் என்ற இருவகையான நீளங்களைப் பயன்படுத்தி பரப்பைக் கணக்கிடலாம்
பரப்பளவு = நீளம் × அகலம்கனசதுரத்தின் பருமன் = l×b×hகனசதுரத்தின் பருமனின் அலகு கன செ.மீ அல்லது செ.மீ3
ஒழுங்கற்றத் திடப்பொருளின் பருமனைக் கண்டறிதல்
- ஒரு பருப்பொருள் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்கிறதோ அதுவே அதன் பருமன் ஆகும்
- பூமியின் பரப்பில் எடை என்பது நிறைக்கு நேர்தகவில் இருக்கும். பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு என்ற போதிலும் இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும். ஆனால் எடை குறையும். நிலவில் ஈர்ப்பு விசை புவியை போல ஆறில் ஒரு பங்கு தான். ஆகவே நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில் ஆறில் ஒரு பங்கு ஆகும்
நிறை மற்றும் எடை
- நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவே ஆகும்.எடை என்பது நிறையின் மேல் செயல்படும் புவியீர்ப்பு விசை ஆகும்.
நிறையின் SI அலகு கிலோகிராம்
- ஓடோமீட்டர் என்பது தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும்
- மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள், 1790 ல் பிரெஞ்சுக்காரர்களால் உருவாக்கப்பட்டது
- நீளத்தை அளக்கத் தற்காலத்தில் பயன்படும் அளவுகோல், 16 ஆம் நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் என்ற அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது
- பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான ஒரு படித்தர மீட்டர் கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த மீட்டர் கம்பியின் நகல் ஒன்று டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது
- 1 கிலோகிராம் என்பது பிரான்சில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தால் 1889 ல் நிறுவப்பட்ட பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையால் ஆன ஒரு உலோக தண்டின் நிறைக்கு சமம்
Comments
Post a Comment