Skip to main content

இயற்பியல் - ஒளி


            


                        Light
                       ஒளி


  • ஒளி என்பது ஆற்றலின் ஒரு வடிவம்
  • ஒளி மின்காந்த அலை வடிவத்தில் செல்கின்றது


எதிரொளிப்பு விதிகள்


  • படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் படு புள்ளிக்கு வரையப்படும் குத்துக்கோடு ஆகிய இம்மூன்றும் ஒரே தளத்தில் அமைகின்றன
  • படு கோணமும் எதிரொளிப்பு கோணமும் சமம்

கோளக ஆடிகள்

  • எதிரொளிக்கும் பகுதி கோளக வடிவில் உள்ள ஆடிகள் கோளக ஆடிகள் எனப்படும்
  • கோளக ஆடியில், எதிரொளிக்கும் பகுதி கோளத்தின் மையத்தை நோக்கி இருந்தால் அவை குழி ஆடிகள் எனப்படும்
  • கோளக ஆடியில், எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருந்தால் அவை குவி ஆடிகள் எனப்படும்
  • கோளக ஆடி எந்த உள்ளீடற்ற கோளத்தின் ஒரு பகுதியாக அமைகிறதோ, அந்தக் கோளத்தின் மையம் வளைவு மையம் எனப்படும்
  • கோளக ஆடியின் வடிவியல் மையம் ஆடி மையம் எனப்படும்
  • ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் செங்குத்துக் கோடு முதன்மை அச்சு எனப்படும்
  • ஆடி மையத்திற்கும் வளைவு மையத்துக்கும் இடையே உள்ள தொலைவு வளைவு ஆரம் எனப்படும்
  • முதன்மை அச்சுக்கு இணையாக வரும் கதிர்கள், கோளக ஆடியில் பட்டு எதிரொளிக்கப்பட்ட பின் எந்தப் புள்ளியில் குவிகின்றதோ அல்லது எந்தப் புள்ளியில் இருந்து விரிந்து செல்வது போல் உள்ளதோ அந்த புள்ளி முக்கியக் குவியம் எனப்படும்
  • ஆடி மையத்திற்கும், முக்கியக் குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு குவியத்தொலைவு எனப்படும்
  • வளைவு ஆரத்திற்கும், குவியத் தொலைவிற்கும் இடையே உள்ள தொடர்பு R=2f

மெய் பிம்பம்


  • பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள், எதிரொளிப்புக்குப்பின் உண்மையாகவே சந்தித்தால் அதனால் உருவாகும் பிம்பம் மெய் பிம்பம் எனப்படும்
  • மெய் பிம்பம் எப்போதும் தலை கீழாகவே இருக்கும். அதை திரையில் வீழ்த்த முடியும்


மாய பிம்பம்

  • பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப்பின் சந்திக்காமல், பின்னோக்கி நீட்டப்படும்போது சந்தித்தால் அதனால் உருவாகும் பிம்பம் மாயபிம்பம் எனப்படும்
  • மாயபிம்பம் எப்போதும் நேரான பிம்பமாக இருக்கும். அதை திரையில் வீழ்த்த முடியாது

ஆடிச் சமன்பாடு

  • பொருளின் தொலைவு(u), பிம்பத்தின் தொலைவு(v), குவியத்தொலைவு(f) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு ஆடிச் சமன்பாடு எனப்படும்
           1/f=1/u+1/v

நேரியல் உருப்பெருக்கம்(m)


  • பொருளின் அளவை விட பிம்பத்தின் அளவு எவ்வளவு மடங்கு பெரியதாக உள்ளது என்பதைக் குறிக்கும் அளவீடு கோளக ஆடியின் உருப்பெருக்கம் எனப்படும்
  • பிம்பத்தின் அளவிற்கும், பொருளின் அளவிற்கும் இடையே உள்ள தகவு உருப்பெருக்கம் எனப்படும்
  • பிம்பத்தின் தொலைவு மற்றும் பொருளின் தொலைவைக் கொண்டும் உருப்பெருக்கத்தை கணக்கிடலாம்


ஒளிவிலகல்

  • ஒளிபுகும் ஓர் ஊடகத்தில் இருந்து மாறுபட்ட அடர்த்தியுடைய மற்றொரு ஒளிபுகும் ஊடகத்திற்கு ஒளி செல்லும் போது அதன் பாதையில் மாறுபாடு ஏற்படுகிறது. இவ் விலகலுக்கு ஒளியின் திசைவேகத்தில் ஏற்படும் மாறுபாடே காரணமாகும்
  • ஊடகத்தின் தன்மையைப் பொறுத்து ஒளியின் திசைவேகம் மாறுபடும்
  • அடர் குறை ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் அதிகமாகவும், அடர் மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாகவும் இருக்கும்
  • வெற்றிடத்தில் ஒளியின் வேகம் ஏறக்குறைய 3,00,000 கி.மீ/வி ஆகும்

ஒளிவிலகல் விதிகள்

  • படுகதிர், விலகுகதிர், படு புள்ளியில் இரு ஒளிபுகும் ஊடகங்களுக்கு இடையில் தளத்திற்கு வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன
  • ஒளிவிலகலின் ஸ்நெல் விதி:
  • கொடுக்கப்பட்ட இரு ஊடகங்களுக்கு குறிப்பிட்ட நிற ஒளியின் படு கோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு ஒரு மாறிலி ஆகும்
         Sin i/sin r=மாறிலி
         i என்பது படுகோணம்
         r  என்பது விலகு கோணம்

ஒளிவிலகல் எண்

  • ஒளிவிலகல் எண் என்பது காற்று அல்லது வெற்றிடத்தில்ஒளியின் திசைவேகத்திற்கும், ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையேயுள்ள தகவு ஆகும்

             µ=காற்று அல்லது வெற்றிடத்தில் 
                 ஒளியின் திசைவேகம்/ஊடகத்தில் 
                 ஒளியின் திசைவேகம்

முழு அக எதிரொளிப்பு


  • மாறுநிலை கோணத்தை விட படு கோணம் அதிகமாக உள்ளபோது விலகு கதிர் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் r>90°ஆக இருக்கும்  போது ஒளிவிலகல் ஏற்படாது.மேலும்        ஒளிக்கதிர் அதே ஊடத்திலேயே முழுவதுமாக எதிரொளிக்கப்படும்


ஒளியிழைகள்


  • ஒளியிழைகள் என்பவை நெருக்கமாக பிணைக்கப்பட்டபல இழைகளினால் (அல்லது குவார்ட்ஸ் இழைகள்) உருவாக்கப்பட்ட இழைக்கற்றைகள் ஆகும்
  • ஒவ்வொரு இழையும் உள்ளகம்(core) மற்றும் பாதுகாப்பு உறை(cladding) ஆகிய பகுதிகளினால் ஆனவை
  • பாதுகாப்பு உறையின் ஒளிவிலகல் எண்ணை விட உள்ளக பொருளின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருக்கும்
  • ஒரு முனையில் அனுப்பப்படும் ஒலிச்சைகை நெடுகிலும் பல முழு அக எதிரொளிப்பிற்கு உட்பட்டு, இறுதியாக மற்றொரு முனையில் வெளியேறும்
  • நீண்ட தொலைவுகளுக்கு ஒலி, ஒளிச் சைகைகளை அனுப்ப ஒளியிழைகள் பயன்படுகின்றன
  • இழை ஒளியியலின் தந்தை என அழைக்கப்படுபவர் இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் கபானி


















Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...