சிந்துவெளி நாகரிகம்
- ஆதிமனிதன் கல்லைப் பயன்படுத்திய காலம் கற்காலம் எனப்படும்
- மனிதனுக்கு முதன்முதலில் தெரிந்த உலோகம் செம்பு (தாமிரம்)
- ஆதிமனிதன் செம்பு, கல் ஆகிய இரண்டையும் பயன்படுத்திய காலம் செம்புக்கற்காலம் எனப்படும்
- அக்காலத்தில்தான் இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகமான சிந்து வெளி(ஹரப்பா) நாகரிகம் உருவானது
ஹரப்பா
- ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்று பொருள்
- சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் இந்த நாகரிகம் இந்தியாவில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது
- ஹரப்பா நாகரிகத்தைப் போன்ற நகரங்களின் இடிபாடுகள் மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன்,லோத்தல் போன்ற வேறு பல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன
- மொஹஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்று பொருள்
பெருங்குளம்
- சிந்துவெளி நகரங்களின் கோட்டைப் பகுதியில் கட்டமைப்பு நுணுக்கங்கள் மிக்க குளம் அமைக்கப்பட்டிருந்தது
கட்டடங்கள்
- வீடுகள் வரிசையாகவும், ஒழுங்காகவும், நேர்த்தியுடனும் கட்டப்பட்டிருந்தன
பயன்பாட்டு அறிவியல்
- கட்டடத் தொழில், நிலம் தேறுதல்,மனை அளவீடு, கால் கோளுதல், தரமான கட்டுமானப் பொருட்களை தேர்ந்தெடுத்தல், வடிவ கணித அமைப்பு பற்றி அறிதல் ஆகிய பயன்பாட்டு அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்திருந்தனர்
சிந்துவெளி மக்களின் வாழ்க்கை முறை
- மக்கள் கடல்வழி வாணிகம் செய்து உலோகங்கள், விலையுயர்ந்த கற்கள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பயன்பாட்டுப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர்
மண்பாண்டம்
- சக்கரத்தைப் பயன்படுத்தி சட்டி, பானைகள் செய்யப்பட்டிருந்தன. அவை பளபளப்பாகவும், வண்ணங்கள் பூசப்பட்டும் இருந்தன
தொழில்
- சிந்துவெளியில் பயிர்த் தொழிலாளர், கைத்தொழிலாளர், வணிகர், நெசவாளர், மண்பாண்டம் செய்வோர், உலோக வேலை செய்வோர் எனப் பலவகைப்பட்ட மக்கள் காணப்பட்டனர்
- விவசாயம் மக்களின் முக்கியத் தொழில் ஆகும்
- கோதுமை, பார்லி போன்றவற்றை விளைவித்தனர். மிஞ்சிய தானியங்களைக் களஞ்சியங்களில் சேமித்து வைத்தனர்
உடைகள்
- மக்கள் பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர்
அணிகலன்கள்
- தங்கம், வெள்ளி, தந்தம், விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை அணிகலன்கள் செய்ய பயன்படுத்தினர்
- ஏழை மக்கள் கிளிஞ்சல், தாமிரம் போன்றவற்றால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தனர்
கலைகள்
- சிந்துவெளி மக்கள் டெராகோட்டா எனப்படும் சுடுமண் பாண்டம் செய்வதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்
சமயம்
- பசுபதி என்ற சிவனையும், பெண் கடவுளையும், லிங்கம், சூலம், மரம் ஆகியவற்றையும் வணங்கினர்
Comments
Post a Comment