Skip to main content

இயந்திரவியல் மற்றும் பருப்பொருட்களின் பண்புகள்

         Mechanics and Properties of Matter

     இயந்திரவியல் மற்றும் பருப்பொருளின்                                பண்புகள்

  • குறிப்பிட்ட நிறை மற்றும் பருமனை உடைய பொருள் பருப்பொருளாகும்
  • திட, திரவ, வாயு நிலைகளில் பருப்பொருட்கள் காணப்படுகின்றன
  • வெறும் அயனியாக்கப்பட்ட அணுக்கருக்களாலான பருப்பொருளின் நான்காம் நிலை பிளாஸ்மா எனப்படும்
  • பருப்பொருளின் ஒவ்வொரு நிலைக்கும் சில தனிப் பண்புகள் உள்ளன
  • எடுத்துக்காட்டு:
       i)திடப்பொருளுக்கு பருமனும்,வடிவமும்,      மீட்சிப்பண்பும் உண்டு   
  ii)ஒரு வளிமமானது அதனை உள்ளடக்கிய மூடிய கொள்கலனின் பருமனைக் கொண்டிருக்கும்
       iii)ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் திரவம் நிலையான பருமனைப் பெற்றிருக்கும். ஆனால் அதற்கு வடிவம் இல்லை
  • இந்த மாறுபட்ட பண்புகளுக்கான காரணிகள்
       i)அணுவிடை அல்லது மூலக்கூறிடை விசை
       ii)வெப்பத்தினால் நிகழும் மூலக்கூறுகளின்  சீரற்ற இயக்கம் அல்லது கிளர்ந்தெழுதல்

மீட்சிப் பண்பு

  • நிலையான பொருளின் மீது புறவிசை ஒன்றை செயல்படுத்தினால் துகள்களின் இடையே சார்பு இடப்பெயர்ச்சி ஏற்படும்
  • புறவிசையானது பொருளின் நீளம், பருமன், வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்
  • இம்மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய புறவிசை உருக்குலைவிக்கும் விசை என்று அழைக்கப்படுகிறது
  • இதுபோன்ற ஒரு விசையை உணரும் பொருள் உருக்குலைந்த பொருள் எனப்படும்
  • உருக்குலைவிக்கும் விசைகள் நீக்கப்பட்டால் பொருளானது தனது தொடக்க நிலையை அடைவதற்கு அப்பொருளில் தோன்றும் விசை மீள்விசை எனப்படும்
  • தன்மீது செயல்படுத்தப்பட்ட உருக்குலைவிக்கும் விசைகள் நீக்கப்பட்டவுடன் தனது தொடக்க நிலையை மீண்டும் பெறும் பொருளின் தன்மை பொருளின் மீட்சிப் பண்பு எனப்படும்
  • எடுத்துக்காட்டு: எஃகு அதிக மீட்சித்தன்மை உடையதால்,சுருள்வில்கள் எஃகினால் செய்யப்படுகின்றன

தகைவு
  • உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயல்படும் மீள்விசை, தகைவு எனப்படும்
          தகைவு=மீள்விசை/ பரப்பு
  • இதன் அலகு Nm-2, பரிமாண வாய்ப்பாடு ML-1T2

திரிபு

  • ஒரு பொருளில் ஏற்பட்ட பரிமாண மாற்றத்திற்கும் அதன் தொடக்க நிலை பரிமாணத்திற்கும் இடையேயான தகவு திரிபு எனப்படும்
       திரிவு=பரிமாணத்தில் மாற்றம் /        தொடக்கநிலை பரிமாணம்

  • இதற்கு அலகு இல்லை

மீட்சி எல்லை

  • நிரந்தர உருக்குலைவு ஏற்படும் எல்லை மீட்சி எல்லை எனப்படும்

ஹுக் விதி

  • மீட்சி எல்லைக்குள் ஒரு பொருளின் திரிபானது அதை ஏற்படுத்தக் கூடிய தகைவுக்கு நேர்தகவில் உள்ளது
  • தகைவு/திரிபு= மாறிலி.இது மீட்சிக் குணகம் எனப்படும்
  • இதன் அலகு Nm-2, பரிமாண வாய்ப்பாடு ML-1T-2

மூவகை மீட்சிக் குணகங்கள்

       i)யங் குணகம்
       ii)பருமக் குணகம்
       iii)விறைப்புக் குணகம்

i)யங் குணகம்

  • பொருளொன்றின் நீட்சித் தகைவுக்கும், நீட்சித் திரிபுக்கும் உள்ள தகவு யங் குணகம் (q) எனப்படும்
  • நீட்சித் தகைவு = விசை / பரப்பளவு = F/A
  • நீட்சித் திரிபு = நீளத்தில் மாற்றம் / தொடக்க நீளம் = dl/l 

        யங் குணகம் = நீட்சித் தகைவு / நீட்சித் திரிபு
        q = Fl/Adl

ii)பருமக் குணகம்

  • பொருளொன்றின் பருமத் தகைவுக்கும்,பருமத் திரிபுக்கும் உள்ள தகவு பருமக் குணகம் (k) எனப்படும் 
  • பருமத் தகைவு = விசை / பரப்பளவு = F/A
  • பருமத் திரிபு = பரும மாறுபாடு / தொடக்க பருமன் = - dv/v
  • பருமக் குணகம் = பருமத் தகைவு / பருமத் திரிபு

            k = - pv/dv  ;       p = F/A

iii)விறைப்புக் குணகம் 

  • சறுக்குப் பெயர்ச்சித் தகைவுக்கும், சறுக்குப் பெயர்ச்சிக் கோணத்திற்கும் இடையே உள்ள தகவு விறைப்புக் குணகம் (n) எனப்படும்
  • சறுக்குப் பெயர்ச்சித் தகைவு = F/A
  • விறைப்புக் குணகம் = சறுக்குப் பெயர்ச்சித் தகைவு / சறுக்குப் பெயர்ச்சிக் கோணம்

            n = F/Aθ

நீர்மத் தம்பத்தின் அழுத்தம்

  • ஓரலகு பரப்பில் செயல்படும் விசை, அழுத்தம் எனப்படும்
  • அழுத்தம் = நீர்மத்தின் எடை / குறுக்குவெட்டுப் பரப்பு
  • நீர்மத்தின் எடை w = நீர்மத்தின் நிறை × g = Ahρg
A என்பது குறுக்கு வெட்டுப் பரப்பு
h என்பது நீர்மத் தம்பத்தின் உயரம்
ρ என்பது நீர்மத்தின் அடர்த்தி
  • அழுத்தம் p = hρg

பாஸ்கல் விதி

  •  நீர்மத்தில் ஓரிடத்தில் ஏற்படும் அழுத்தத்தின் மாற்றமானது சிறிதும் மாறாமல் மற்ற அனைத்துப் பாகங்களுக்கும் பரவுகின்றது

பாகுநிலை

  • நீர்ம ஏடுகளின் சார்பு இயக்கத்தை எதிர்க்கும் நீர்மத்தின் தன்மையே பாகுநிலை எனப்படும்
  • நீர்மங்களின் பாகுநிலை வளிமங்களின் பாகுநிலையை விட அதிகம்

பாகியல் எண்

  • ஓரலகு பரப்புள்ள செங்குத்தாக ஓரலகுத் திசைவேகச் சரிவைக் கொண்ட இரண்டு நீர்ம ஏடுகளுக்கிடையே தொடுகோட்டின் திசையில் செயல்படும் பாகுநிலை விசையின் எண் மதிப்பு பாகியல் எண் எனப்படும்
F = η 
 η என்பது பாகியல் எண்
  • η - ன் அலகு Nsm-2,பரிமாண வாய்ப்பாடு ML-1T-1

நீர்மத்தின் மொத்த ஆற்றல்

i)அழுத்த ஆற்றல்

  • ஓரலகு நிறையுள்ள நீர்மத்தின் அழுத்த ஆற்றல் = pax / axρ= p / ρ

ii)இயக்க ஆற்றல்

  • ஓரலகு நிறையுள்ள நீர்மத்தின் இயக்க ஆற்றல் = (1/2)mv2 / m =v2/2

iii)நிலை ஆற்றல்

  • ஓரலகு நிறையுடைய நீர்மத்தின் நிலை ஆற்றல் = mgh / m = gh
  • ஓரலகு நிறையுடைய இயக்கத்திலுள்ள நீர்மத்தின் மொத்த ஆற்றல் = p / ρ +v2/ 2 + gh

பெர்னௌலியின் தேற்றம்

  • அமுக்க இயலாத,பாகுநிலையற்ற, ஓரலகு நிறையுள்ள நீர்மத்தின் வரிச்சீர் ஓட்டத்தில், அழுத்த ஆற்றல், இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல் ஆகியவற்றின் கூட்டுத்தொகை மாறாததாக இருக்கும்
P / ρ + v2/ 2 + gh = மாறிலி
  • திண்மப் பொருட்கள் நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன
காரணம்
  • திண்மப் பொருள்களின் துகள்கள்
i) மிக நெருக்கமாகவும், வரிசையாகவும் அடுக்கப்பட்டுள்ளன
ii) வலுவான கவர்ச்சி விசையினால் இணைக்கப்பட்டுள்ளன
iii)துகள்கள் போதுமான இயக்க ஆற்றலை பெற்றிருப்பதால் அவை நிலையான இடத்திலிருந்து அதிர்வுறவும்,சுழலவும் முடியும்
iv)தன்னிச்சையாக நகர முடியாது
  • திண்மங்களில் துகள்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைவாக இருப்பதால் நிலையான கனஅளவைப் பெற்றுள்ளன
  • திரவங்கள் நிலையான வடிவத்தைப் பெற்றிருப்பதில்லை
காரணம்
  • திரவத்தில் பருப்பொருளின் துகள்கள்
i) ஒழுங்கான வரிசை அமைவைப் பெற்றிருக்கவில்லை
ii) வலிமை குறைந்த கவர்ச்சி விசையால் இணைக்கப்பட்டுள்ளது
iii)திண்மத் துகள்களை விட அதிக இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன
iv)ஒன்றோடொன்று மோதலில் ஈடுபட்டு ஊடகம் முழுவதும் எளிதில் நகரும்
  • திரவத்தில் துகள்கள் சற்று இடைவெளியில் அமைந்திருப்பதால் நிலையான கனஅளவைப் பெற்றுள்ளன
  • வாயுக்கள் நிலையான வடிவத்தைப் பெற்றிருக்கவில்லை
காரணம்
i) ஒன்றோடொன்று நெருக்கமின்றி ஆனால் ஒன்றுக்கொன்று அதிக இடைவெளியில் பரப்பப்பட்டுள்ளன
ii)எந்த நிலையான கட்டுப்பாட்டிலும் இல்லை
iii) திரவத்தை விட வலிமை குறைந்த கவர்ச்சி விசையைப் பெற்றுள்ளன
iv)அதிக இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது மற்றும் தன்னிச்சையாக எல்லாத் திசைகளிலும் நகர முடியும்

  • வாயுக்களில் உள்ள துகள்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதனால் நிலையான கனஅளவைப் பெற்றிருப்பதில்லை

பருப்பொருளின் நிலை மாற்றம்

  • பருப்பொருள்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற இயலும்

i) திண்மம் உருகி திரவமாகிறது
ii) திரவம் ஆவியாகி வாயுவாகிறது
iii) வாயு குளிர்வுற்று திரவமாகிறது
iv) திரவம் உறைந்து அல்லது திண்மமாகி திடப்பொருளாகிறது

உருகுதல்

பொருள்           உருகுநிலை/°C
ஆக்சிஜன்             -219
சோடியம்                   98
இரும்பு                   1540
வைரம்         ‌           3550

கொதித்தல்

பொருள்             கொதிநிலை/°C
ஆக்ஸிஜன்               -183
சோடியம்                      890
இரும்பு                        2900
வைரம்                         4832

  • நீரின் சாதாரண கொதிநிலை 100° C ஆக இருந்த போதிலும், மலை உச்சியில் 90° C  வெப்பநிலையிலும், பிரஷர் குக்கரில் 120° C  வெப்பநிலையிலும் நீர் கொதிக்கிறது
  • 0° C = 273.16K (or) 273K

பாயில் விதி

  • மாறா வெப்பநிலையில், கொடுக்கப்பட்டுள்ள நிறையுள்ள ஒரு நல்லியல்பு வாயுவின் அழுத்தமானது அதன் கனஅளவிற்கு எதிர்விகிதத் தொடர்புடையது

இயைபு சார்ந்து பருப்பொருளின் வகைகள்

1.தனிமம்
2.சேர்மம்

Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...