6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்
- ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும்
- விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும்
விகிதங்களின் பண்புகள்
- விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல
- விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம்
- விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும்
- விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது
20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க
20/5 = 4/1 =4:1
500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க
500/250 = 2/1 =1
மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாதவியும் வாங்கிய மேசைகளின் விலைகளின் விகிதத்தை எளிய வடிவில் காண்க
900/750 = 6/5 = 6:5
40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க
1 மணி = 60 நிமிடங்கள்
40 நிமிடத்திற்கும் 60 நிமிடத்திற்கும் இடையே உள்ள விகிதம் =40:60
=40/60 =2/3 =2:3
சமான விகிதங்கள்
- தொகுதி மற்றும் பகுதியை ஒரே எண்ணால் பெருக்கவோ அல்லது வகுக்கவோ செய்தால் சமான விகிதங்களைப் பெறலாம்
குமரனிடம் ரூ. 600 உள்ளது. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையில் 2: 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவரில் யாருக்கு அதிகமாக் கிடைக்கும்? எவ்வளவு?
விமலாவிற்கு கிடைக்கும் தொகை = 600×2/5 =240
யாழினிக்கு கிடைக்கும் தொகை = 600×3/5 =360
விமலாவிற்கு ரூ.240 ம் யாழினிக்கு ரூ.360 ம் கிடைக்கும். எனவே விமலாவை விட யாழினிக்கு அதிகமாகக் கிடைக்கும்
விகிதச் சமம்
- இரண்டு விகிதங்கள் சமமாக இருந்தால் a/b = c/d விகிதச் சமம் எனப்படும். இதனை a:b :: c:d
- எனக் குறிப்பிடலாம்
விகித சமன் விதி
- இரண்டு விகிதங்கள் விகிதச் சமத்தில் இருந்தால், a மற்றும் c என்பன விகித சம அறுதிகள் எனவும் b மற்றும் d என்பன இடை விகித சமன் எனவும் அழைக்கப்படுகின்றன. விகித சம அறுதிகளின் பெருக்கற்பலன் = இடைவிகித சமன்களின் பெருக்கற்பலன். இரண்டு விகிதங்கள் சமம் எனில் a/b = c/d --->ad = bc என்பது விகித சமனின் குறுக்குப் பெருக்கல் ஆகும்
ஓரலகு முறை
- ஓர் அலகின் மதிப்பைக் கணக்கிட்டு அதிலிருந்து தேவையான அலகுகளின் மதிப்பைக் கண்டறியும் முறை ஓரலகு முறை எனப்படும்
பாரி, 5 இறகுப் பந்துகளை ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் வாங்க விரும்புகிறான். ஒரு பெட்டி (12 பந்துகள்) பந்துகளின் விலை ரூ.180 எனில், பாரி 5 பந்துகளை வாங்க எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
ஒரு பெட்டி பந்துகளின் விலை = ரூ.180
12 பந்துகளின் விலை = ரூ.180
1 பந்தின் விலை =180/12 =15
5 பந்துகளின் விலை =5×15=75
ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை அது பயன்படுத்தும்?
40 நிமிடத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் =3 அலகுகள்
1 நிமிடத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் =3/40 அலகுகள்
120 நிமிடத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் =3/40×120 =9 அலகுகள்
இரண்டு மணி நேரத்தில் சூடேற்றி பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு 9 அலகுகள்
Comments
Post a Comment