மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்
- அணுக்கள் மூலக்கூறுகள், செல் நுண்ணுறுப்புகள், செல்கள், திசுக்கள், உறுப்புகள், உறுப்பு மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது உயிரினம் ஆகும்
மனித உறுப்பு மண்டலத்தின் அமைப்பு /செயல்பாடுகள்
- நமது உடலில் பத்து உறுப்பு மண்டலங்கள் காணப்படுகின்றன
1. தோலுறுப்பு மண்டலம்
- நமது உடலின் மிக கனமான உறுப்பு தோல் ஆகும்.நமது உடல் எடையில் ஏறக்குறைய ஏழு கிலோ தோல் உள்ளது
- தோல்லுறுப்பு மண்டலத்தில் தோல், உரோமம், நகம், வியர்வைச் சுரப்பிகள் மற்றும் எண்ணெய் சுரப்பிகள் ஆகியவை காணப்படுகின்றன
தோலின் பணிகள்
- உடலின் உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது
- இது வியர்வையை சுரப்பதன் மூலம் ஒரு கழிவு நீக்க உறுப்பாக செயல்படுகிறது
- ஒரு உணர் உறுப்பாக செயல்படுகிறது
- வைட்டமின் D -யை தயாரிக்க உதவுகிறது
2. செரிமான மண்டலம்
- செரிக்கப்பட்ட உணவு மூலக்கூறுகள் உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் மூலம் கடத்தப்படுகிறது
- செரிக்கப்படாத உணவு வெளியேற்றப்படுகிறது
3. சுவாச மண்டலம்
- வெளியிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு இரத்த ஓட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கடத்துகிறது
- உணவுப்பொருள் எரிக்கப்படுவதற்கு ஆக்சிஜன் பயன்படுகிறது. இவ்வினையின் போது கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது
4. எலும்பு மண்டலம்
- எலும்பு மண்டலத்தில் எலும்புகள், திசுக்களாலான குருத்தெலும்புகள், தசைநார்கள் ஆகியவை காணப்படுகின்றன
- நமது உடலில் 206 எலும்புகள் காணப்படுகின்றன
எலும்பு மண்டலத்தின் பணிகள்
- எலும்பு மண்டலம் நமது உடலிற்கு வடிவத்தை அளிப்பதோடு இயக்கத்திற்கும் உதவுகிறது
- மூளை, இதயம், நுரையீரல் போன்ற உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது
- இரத்த வெள்ளையணுக்கள், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகள் ஆகியவை எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகிறது
5. தசை மண்டலம்
- தசை மண்டலத்தில் மூன்று வகையான தசைகள் உள்ளன
1. எலும்புத் தசைகள் (வரியுடைத் தசைகள்)
2. மென் தசைகள் (வரியற்ற தசைகள்)
3. இதயத் தசைகள்
- எலும்புத் தசைகள் எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன
- மென் தசைகள் இரத்த குழாய்களின் சுவர்களிலும்,உள்ளீடற்ற உறுப்புகளான இரைப்பை, குடல் ஆகியவற்றின் சுவர்களிலும் காணப்படுகின்றன
- இதயத் தசைகள் இதயத்தில் மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பு தசை ஆகும்
தசை மண்டலத்தின் பணிகள்
- எலும்புத் தசைகள் உடலுக்கு உருவத்தை அளிக்கவும், உடல் உறுப்புகள் இயங்குவதற்கும் உதவுகிறது
- நம் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளத் தேவையான வெப்பத்தை உற்பத்தி செய்கிறது
- பிற தசைகள், உள் உறுப்புகளின் இயக்கத்திற்கு உதவுகிறது
6. இரத்த ஓட்ட மண்டலம்
- உடலின் பல பகுதிகளுக்குத் தேவையான பொருள்களை இரத்தத்தின் மூலம் கடத்தும் பணியை செய்கிறது
- இரத்த ஓட்ட மண்டலம் இதயம் மற்றும் ரத்தக் குழாய்களால் ஆனது. இதன் வழியாக இரத்தம் செல்கிறது
- இதயம் தசை நார்களால் ஆன சுருங்கி விரியும் தன்மை உடைய ஒரு உறுப்பு ஆகும்
- இதயம் இரத்தத்தை அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது. மீண்டும் அவை அனைத்து பாகங்களிலிருந்தும் இரத்தத்தைப் பெறுகிறது
- இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் சிவப்பு நிறமி ஹீமோகுளோபின் ஆகும். இது இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது
- நண்டு, கல் இறால் ஆகியவற்றின் இரத்தம் நீல நிறமாகக் காணப்படும்
- கரப்பான் பூச்சியின் இரத்தம் நிறமற்றதாக காணப்படும்
இரத்த ஓட்ட மண்டலத்தின் பணிகள்
- உணவூட்டப் பொருட்கள், உயிர்வளி, கழிவுப் பொருள்கள், ஹார்மோன்களை இரத்தம் கடத்துகிறது
- உடலின் வெப்பநிலையையும், நீரின் அளவையும் கட்டுப்படுத்துகிறது
- இரத்தக்குழாய்கள் மூன்று வகைப்படும்
1. தமனிகள்7. நரம்பு மண்டலம்
2. சிரைகள்
3. இரத்தத் தந்துகிகள்
- நரம்பு மண்டலம் மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகளால் ஆனது
- நரம்பு மண்டலம் இரு வகைப்படும்
1. மைய நரம்பு மண்டலம்
2. வெளிப்புற நரம்பு மண்டலம்
- மைய நரம்பு மண்டலம் மூளை, தண்டுவடத்தினால் ஆனது
- வெளிப்புற நரம்பு மண்டலம் மூளை நரம்புகள், தண்டுவட நரம்புகளால் ஆனது
8. நாளமில்லா சுரப்பி மண்டலம்
- நாளமில்லா சுரப்பி மண்டலம் சுரக்கும் வேதிப்பொருள் ஹார்மோன்கள் எனப்படும்
- ஹார்மோன்கள் இரத்தத்தின் மூலம் அவை செயல்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது
- ஹார்மோன்கள் உடற்செயலியல் வேலைகளை ஒழுங்குபடுத்துகிறது
9. கழிவு நீக்க மண்டலம்
- கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவும் மண்டலம் கழிவுநீக்க மண்டலம் எனப்படும்
- கழிவு நீக்க மண்டலத்தில் ஒரு ஜோடி சிறுநீரகம், ஒரு ஜோடி சிறுநீர் நாளம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்புறவழி ஆகியவை காணப்படுகிறது
10. இனப்பெருக்க மண்டலம்
- ஆண்களில் காணப்படும் விந்தகங்கள் மற்றும் பெண்களில் காணப்படும் அண்டகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது இனப்பெருக்க மண்டலம் ஆகும்
இந்திய மருத்துவத்தில் மனித உடல் நலம் பேணல்
சித்த மருத்துவம் (தமிழ் மருத்துவம்)
- சித்தர்களின் பொதுவான கருத்து உணவே மருந்து மருந்தே உணவு என்பது ஆகும்
- சித்த மருத்துவத்தின் தந்தை அகத்தியர்
- சித்த மருந்து தயாரிப்பதற்கு ஏறக்குறைய 1200 மூலிகைகள் பயன்படுகின்றன
ஆயுர்வேத மருத்துவம்
- நமது உடல் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளினால் ஆனது. இவற்றின் சமநிலையில் ஏற்படும் பாதிப்புகளை சீர்படுத்துவது ஆயுர்வேதத்தின் நோக்கமாகும்
நோய்கள், குறைபாடுகள் மற்றும் தடுப்பு முறைகள்
நீரிழிவு நோய்
- அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான ஆற்றலை அளிப்பது குளுக்கோஸ் ஆகும்
- நாம் உண்ணும் உணவு உடைந்து குளுக்கோஸாக மாறுகிறது
- கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் என்ற ஹார்மோன் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது
- இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவு 80 - 120 மில்லி கிராம் / டெசிபலை விட அதிகமானால் அந்த மனிதனுக்கு நீரிழிவு நோய் உள்ளது என தெரிந்து கொள்ளலாம்
- நீரிழிவு நோய்க்கு காரணம் உடற்பயிற்சி இல்லாமை, முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் இன்சுலின் பற்றாக்குறை ஆகியவை ஆகும்
- நீரிழிவு நோயால் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய் ஆகியவை ஏற்படுகிறது
உடற்பயிற்சியின் பயன்கள்
- இதயத் தசைகள், நுரையீரல் உள்ளிட்ட உடலின் பல பாகங்களை வலிமைப்படுத்துகிறது
- தேவையற்ற கலோரி எரிக்கப்படுவதால் உடல் எடை சீராகிறது. உடல் பருமன் தடுக்கப்படுகிறது
- இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது
- இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது
- இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது
உணவு பதப்படுத்துதல்
- உணவுப் பொருட்களை நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் வைத்திருக்கும் முறை உணவு பதப்படுத்துதல் எனப்படும்
உலர்த்துதல்
- இம்முறையில் உணவில் உள்ள நீர் உலர வைக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது
- எடுத்துக்காட்டு
- அறுவடை செய்த தானியங்களை சூரிய ஒளியில் உலர வைத்தல்
வெப்பப்படுத்துதல்
- இம்முறையில் உணவில் உள்ள நுண்ணுயிர்கள் அழிக்கப்பட்டு, நொதிகளின் இயல்பும் மாற்றப்படுகிறது
- பாலை 70° C முதல் 75° C வெப்பநிலை வரை குறிப்பிட்ட நேரம் வரை காய்ச்சி பின்பு வேகமாக குளிரச் செய்து சேமித்தல் பாஸ்டியர் முறை எனப்படும்
குளிரூட்டுதல்
- இறைச்சி, மீன் போன்றவற்றை மிகக் குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது அதிலுள்ள நீரில் செயல் தடுக்கப்படுகிறது. அதனால் நுண்ணுயிர் வளர்ச்சியும், செயல்பாடும் தடைபடுகிறது
உப்பு சேர்த்தல்
- உணவுப் பொருட்களில் உப்பு சேர்ப்பதன் மூலம் உணவில் உள்ள நீர் சவ்வூடு பரவல் முறையில் வெளியேறுகிறது
- இறைச்சி, மீன், நெல்லிக்காய், புளி, மாங்காய், எலுமிச்சை போன்றவை உப்பு சேர்த்தல் மூலம் பதப்படுத்தப்படுகிறது
சர்க்கரை சேர்த்தல்
- உணவுப்பொருட்களில் சர்க்கரையை சேர்ப்பதன் மூலம் சர்க்கரை நீரில் கரைந்து உணவுப் பொருட்களில் நீரற்ற நிலையை உருவாக்குகிறது
கதிர்வீச்சு முறை
- X - கதிர்கள் அல்லது காமா கதிர்கள் அல்லது புற ஊதாக் கதிர்கள் மூலம் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை நீக்கும் முறை கதிர்வீச்சு முறை எனப்படும்
Comments
Post a Comment