Rivers in India
இந்திய ஆறுகள்
முதன்மை ஆறுகள்
- மலைகள் மிக அதிகமாக மழையைப் பெறுவதால் ஆறுகள் உருவாகி கிளைஆறுகளுடன் சேர்ந்து முதன்மை ஆறாக உருவாகின்றன
- மலைகளிலிருந்து வண்டல் படிவுகளை சமவெளிகளிலும், டெல்டா பகுதிகளிலும் படிய வைக்கிறது
துணை ஆறுகள்
- மலைப்பகுதியில் உருவாகிய ஆறு முதன்மை ஆற்றுடன் ஒன்று சேர்வதால் துணை ஆறுகள் என்று அழைக்கப்படுகின்றன
- எடுத்துக்காட்டு:
- யமுனை ஆறு கங்கையின் துணையாறு
- பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகள் காவிரியின் துணையாறுகள்
கிளை ஆறுகள்
- முதன்மை ஆறு கடலில் சேருகின்ற பகுதியில் பல கிளைகளாக பிரிவது கிளை ஆறுகள் எனப்படும்
- எடுத்துக்காட்டு:
டெல்டா(Delta)
- ஆற்றின் முகத்துவாரத்தில் காணப்படும் முக்கோண வடிவிலான வண்டல் படிவுகள் டெல்டா எனப்படும்
கழிமுகம்(Estuary)
- ஆற்று முகத்துவாரத்தில் ஓதங்களின் காரணமாக ஆற்றின் நல்ல நீரும், கடலின் உப்பு நீரும் ஒன்றாகக் கலக்கும் பகுதி கழிமுகம் எனப்படும்
- இப்பகுதி டெல்டா போலில்லாமல் ஆழமாக இருக்கும்
- எடுத்துக்காட்டு: நர்மதை மற்றும் தபதி ஆற்றின் கழிமுகப் பகுதிகள்
இந்திய ஆறுகள்
- இந்திய ஆறுகள் இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளன
1.இமயமலையில் உருவாகும் ஆறுகள்
2.தீபகற்ப ஆறுகள்
1.இமய மலையில் உருவாகும் ஆறுகள்
- இமய மலையில் உருவாகும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகள் பனி உறைந்த மலைகளில் உருவாகின்றன
- இந்த ஆறுகள் வற்றாத ஆறுகளாகும். இவை பருவமழையிலிருந்தும், பனி உருகுவதாலும் நீரைப் பெறுகின்றன
- வற்றாத ஆறுகளாக இருப்பதால் நீர்ப்பாசனத்திற்கு உதவுகின்றன
- இவைகள் சமவெளியில் ஓடுவதால் போக்குவரத்திற்கு உதவுகின்றது
தீபகற்ப ஆறுகள்
- தீபகற்ப பீடபூமியில் உள்ள மலைகளில் இருந்து மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதை மற்றும் தபதி ஆறுகள் உருவாகின்றன
- இவை பருவ காலங்களில் மட்டுமே ஓடுகின்றன
- இவை சீரற்ற பீடபூமியில் ஓடுவதால் போக்குவரத்திற்கு பயன்படுவதில்லை
சிந்து
- இதன் நீளம் 3100 கிலோமீட்டர்
- பரப்பளவு 3,21,290 சதுரகிலோமீட்டர்
- கைலாஷ் மலைத்தொடரில் உருவாகிறது
- அரபிக்கடலில் கலக்கிறது
- இந்தியா,பாகிஸ்தான் பயனடைகிறது
- இது ஆசியாவிலேயே நீளமான நதியாகும்
- துணை ஆறுகள்
2.செனாப்
3.ரவி
4.பீஸ்
5.சட்லஜ்
- இது பாகிஸ்தானின் தேசிய நதி ஆகும்
கங்கை
- இதன் நீளம் 2480 கிலோமீட்டர்
- பரப்பளவு 3,37,000 சதுர கிலோமீட்டர்
- கங்கோத்ரியில் உருவாகிறது
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- உத்திரப்பிரதேசம்,பீகார், மேற்குவங்காளம் பயனடைகிறது
- மேற்கு வங்காளத்தில் ஹுக்ளி எனவும்,வங்கதேசத்தில் பத்மா எனவும் அழைக்கப்படுகிறது
- இது இந்தியாவின் தேசிய நதி ஆகும்
- துணை ஆறுகள்
1.யமுனை
2.கோசி
3.கோமதி
4.காக்ரா
5.கண்டகி
யமுனை
- இதன் நீளம் 1370 கிலோமீட்டர்
- பரப்பளவு 3,59,000 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம் யமுனோத்ரி
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம் பயனடைகிறது
பிரம்மபுத்திரா
- இதன் நீளம் 725 கிலோ மீட்டர்
- பரப்பளவு 2,40,000 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம்: ஆங்சி பனியாறு,மானசரோவர் ஏரி
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- வடகிழக்கு மாநிலங்கள் பயனடைகிறது
காவிரி
- இதன் நீளம் 800 கிலோமீட்டர்
- பரப்பளவு 87,900 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம் குடகுமலை
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- கர்நாடகம், தமிழ்நாடு பயனடைகிறது
- கர்நாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள்
1.கபினி
2.ஹேமாவதி
3.ஹாரங்கி
4.லட்மண தீர்த்தம்
5.ஆர்க்காவதி
6.சிம்சா
7.சொர்ணவதி
- தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள்
1.பவானி
2.அமராவதி
3.நொய்யல்
4.திருமணிமுத்தாறு
- காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள்
1.மேட்டூர் அணை
2.கிருஷ்ணராஜசாகர் அணை
3.கல்லணை
4.மேலணை
- காவிரியில் உள்ள அருவிகள்
1.கர்நாடகா -சிவசமுத்திர அருவி
2.தமிழ்நாடு -ஒகேனக்கல் அருவி
கோதாவரி
- இதன் நீளம் 1465 கிலோமீட்டர்
- பரப்பளவு 3,12,812 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம் நாசிக் குன்றுகள்
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- ஆந்திரப்பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதி, ஒடிசா பயனடைகிறது
கிருஷ்ணா
- இதன் நீளம் 1400 கிலோமீட்டர்
- பரப்பளவு 2,59,000 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம் மகாபலேஸ்வரர் மலை
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் பயனடைகிறது
- துணை ஆறுகள்
1.துங்கபத்திரை
2.கொய்னா
3.பீமா
4.மலபிரபா
5.கடபிரபா
6.யெர்லா
7.முஷி
8.துத்கங்கா
9.திந்தி
- அணைகள்
1.ஸ்ரீசைலம் அணை
2.நாகர்ஜுனசாகர் அணை
3.அலமட்டி அணை
நர்மதை
- இதன் நீளம் 1312 கிலோமீட்டர்
- பரப்பளவு 98,796 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம் அமர்கண்டாக் மலை
- அரபிக்கடலில் கலக்கிறது
- மத்தியப்பிரதேசம்,மகாராஷ்டிரா பயனடைகிறது
தபதி
- இதன் நீளம் 724 கிலோமீட்டர்
- பரப்பளவு 65,145 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம் பெட்டூல்
- அரபிக்கடலில் கலக்கிறது
- மத்தியப்பிரதேசம்,மகாராஷ்டிரா பயனடைகிறது
மகாநதி
- இதன் நீளம் 858 கிலோ மீட்டர்
- பரப்பளவு 1,41,600 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம் அமர்கண்டா பீடபூமி
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா பயனடைகிறது
- ஹிராகுட் அணை இவ்வாற்றில் அமைந்துள்ளது
வைகை
- இதன் நீளம் 240 கிலோ மீட்டர்
- பரப்பளவு 7000 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம் மேற்கு தொடர்ச்சி மலை
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- தமிழ்நாடு பயனடைகிறது
- துணை ஆறுகள்
1.சுருளியாறு
2.தேனியாறு
3.வரட்டாறு
4.வராக நதி
5.மஞ்சளாறு
6.நாகலாறு
7.மருத நதி
8.சிறுமலையாறு
9.சாத்தையாறு
- அணைகள்
1.தேக்கடி(பெரியாறு தேக்கம்)
2.வைகை அணைக்கட்டு
3.பேரணை
4.விரகனூர் மதகு அணை
5.பார்த்திபனூர் அணைக்கட்டு
பெரியாறு
- இதன் நீளம் 244 கிலோ மீட்டர்
- பரப்பளவு 5,398 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம் கார்டமன் மலை
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- தமிழ்நாடு,கேரளா பயனடைகிறது
தாமிரபரணி
- இதன் நீளம் 123 கிலோமீட்டர்
- பரப்பளவு 4,400 சதுர கிலோமீட்டர்
- உருவாகுமிடம் அகத்தியர் மலை
- வங்காள விரிகுடாவில் கலக்கிறது
- தமிழ்நாடு பயனடைகிறது
- துணையாறுகள்
2.சேர்வலாறு
3.மணிமுத்தாறு
4.கடனாநதி
5.பச்சையாறு
6.சிற்றாறு
notes taken very nice
ReplyDelete