Skip to main content

புவியியல் - இந்திய ஆறுகள்


                  Rivers in India              

                இந்திய ஆறுகள்


முதன்மை ஆறுகள்

  • மலைகள் மிக அதிகமாக மழையைப் பெறுவதால் ஆறுகள் உருவாகி கிளைஆறுகளுடன் சேர்ந்து முதன்மை ஆறாக உருவாகின்றன
  • மலைகளிலிருந்து வண்டல் படிவுகளை சமவெளிகளிலும், டெல்டா பகுதிகளிலும் படிய வைக்கிறது


துணை ஆறுகள்

  • மலைப்பகுதியில் உருவாகிய ஆறு முதன்மை ஆற்றுடன் ஒன்று சேர்வதால் துணை ஆறுகள் என்று அழைக்கப்படுகின்றன
  • எடுத்துக்காட்டு: 
  • யமுனை ஆறு கங்கையின் துணையாறு
  • பவானி, அமராவதி, நொய்யல் ஆகிய ஆறுகள் காவிரியின் துணையாறுகள்


கிளை ஆறுகள்

  • முதன்மை ஆறு கடலில் சேருகின்ற பகுதியில் பல கிளைகளாக பிரிவது கிளை ஆறுகள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு: 
          ஹூக்ளி ஆறு

டெல்டா(Delta)


  • ஆற்றின் முகத்துவாரத்தில் காணப்படும் முக்கோண வடிவிலான வண்டல் படிவுகள் டெல்டா எனப்படும்


கழிமுகம்(Estuary)


  • ஆற்று முகத்துவாரத்தில் ஓதங்களின் காரணமாக ஆற்றின் நல்ல நீரும், கடலின் உப்பு நீரும் ஒன்றாகக் கலக்கும் பகுதி கழிமுகம் எனப்படும்
  • இப்பகுதி டெல்டா போலில்லாமல் ஆழமாக இருக்கும்
  • எடுத்துக்காட்டு: நர்மதை மற்றும் தபதி ஆற்றின் கழிமுகப் பகுதிகள்


இந்திய ஆறுகள்


  • இந்திய ஆறுகள் இரண்டாகப் பிரிக்கப் பட்டுள்ளன

      1.இமயமலையில் உருவாகும் ஆறுகள்
      2.தீபகற்ப ஆறுகள்

1.இமய மலையில் உருவாகும் ஆறுகள்


  • இமய மலையில் உருவாகும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகள் பனி உறைந்த மலைகளில் உருவாகின்றன
  • இந்த ஆறுகள் வற்றாத ஆறுகளாகும். இவை பருவமழையிலிருந்தும், பனி உருகுவதாலும் நீரைப் பெறுகின்றன
  • வற்றாத ஆறுகளாக இருப்பதால் நீர்ப்பாசனத்திற்கு உதவுகின்றன
  • இவைகள் சமவெளியில் ஓடுவதால் போக்குவரத்திற்கு உதவுகின்றது


தீபகற்ப ஆறுகள்


  • தீபகற்ப பீடபூமியில் உள்ள மலைகளில் இருந்து மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, நர்மதை மற்றும் தபதி ஆறுகள் உருவாகின்றன
  • இவை பருவ காலங்களில் மட்டுமே ஓடுகின்றன
  • இவை சீரற்ற பீடபூமியில் ஓடுவதால் போக்குவரத்திற்கு பயன்படுவதில்லை


சிந்து


  • இதன் நீளம் 3100 கிலோமீட்டர்
  • பரப்பளவு 3,21,290 சதுரகிலோமீட்டர்
  • கைலாஷ் மலைத்தொடரில் உருவாகிறது
  • அரபிக்கடலில் கலக்கிறது
  • இந்தியா,பாகிஸ்தான் பயனடைகிறது
  • இது ஆசியாவிலேயே நீளமான நதியாகும்
  • துணை ஆறுகள்
      1.ஜீலம்
      2.செனாப்
      3.ரவி
      4.பீஸ்
      5.சட்லஜ்

  • இது பாகிஸ்தானின் தேசிய நதி ஆகும்


கங்கை


  • இதன் நீளம் 2480 கிலோமீட்டர்
  • பரப்பளவு 3,37,000 சதுர கிலோமீட்டர்
  • கங்கோத்ரியில் உருவாகிறது
  • வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  • உத்திரப்பிரதேசம்,பீகார், மேற்குவங்காளம் பயனடைகிறது
  • மேற்கு வங்காளத்தில் ஹுக்ளி எனவும்,வங்கதேசத்தில் பத்மா எனவும் அழைக்கப்படுகிறது
  • இது இந்தியாவின் தேசிய நதி ஆகும்
  • துணை ஆறுகள்

      1.யமுனை
      2.கோசி
      3.கோமதி
      4.காக்ரா
      5.கண்டகி

யமுனை


  • இதன் நீளம் 1370 கிலோமீட்டர்
  • பரப்பளவு 3,59,000 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம் யமுனோத்ரி
  • வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  • டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம் பயனடைகிறது


பிரம்மபுத்திரா


  • இதன் நீளம் 725 கிலோ மீட்டர்
  • பரப்பளவு 2,40,000 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம்: ஆங்சி பனியாறு,மானசரோவர் ஏரி
  • வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  • வடகிழக்கு மாநிலங்கள் பயனடைகிறது


காவிரி

  • இதன் நீளம் 800 கிலோமீட்டர்
  • பரப்பளவு 87,900 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம் குடகுமலை
  • வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  • கர்நாடகம், தமிழ்நாடு பயனடைகிறது
  • கர்நாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள்

      1.கபினி
      2.ஹேமாவதி
      3.ஹாரங்கி
      4.லட்மண தீர்த்தம்
      5.ஆர்க்காவதி
      6.சிம்சா
      7.சொர்ணவதி

  • தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள்

       1.பவானி
       2.அமராவதி
       3.நொய்யல்
       4.திருமணிமுத்தாறு

  • காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள்

        1.மேட்டூர் அணை
        2.கிருஷ்ணராஜசாகர் அணை
        3.கல்லணை
        4.மேலணை

  • காவிரியில் உள்ள அருவிகள்

        1.கர்நாடகா -சிவசமுத்திர அருவி
        2.தமிழ்நாடு -ஒகேனக்கல் அருவி

கோதாவரி


  • இதன் நீளம் 1465 கிலோமீட்டர்
  • பரப்பளவு 3,12,812 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம் நாசிக் குன்றுகள்
  • வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  • ஆந்திரப்பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதி, ஒடிசா பயனடைகிறது


கிருஷ்ணா


  • இதன் நீளம் 1400 கிலோமீட்டர்
  • பரப்பளவு 2,59,000 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம் மகாபலேஸ்வரர் மலை
  • வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  • மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் பயனடைகிறது
  • துணை ஆறுகள்

       1.துங்கபத்திரை
       2.கொய்னா
       3.பீமா
       4.மலபிரபா
       5.கடபிரபா
       6.யெர்லா
       7.முஷி
       8.துத்கங்கா
       9.திந்தி

  • அணைகள்

        1.ஸ்ரீசைலம் அணை
        2.நாகர்ஜுனசாகர் அணை
        3.அலமட்டி அணை

நர்மதை


  • இதன் நீளம் 1312 கிலோமீட்டர்
  • பரப்பளவு 98,796 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம் அமர்கண்டாக் மலை
  • அரபிக்கடலில் கலக்கிறது
  • மத்தியப்பிரதேசம்,மகாராஷ்டிரா பயனடைகிறது


தபதி


  • இதன் நீளம் 724 கிலோமீட்டர்
  • பரப்பளவு 65,145 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம் பெட்டூல்
  • அரபிக்கடலில் கலக்கிறது
  • மத்தியப்பிரதேசம்,மகாராஷ்டிரா பயனடைகிறது


மகாநதி


  • இதன் நீளம் 858 கிலோ மீட்டர்
  • பரப்பளவு  1,41,600 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம் அமர்கண்டா பீடபூமி
  • வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  • சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா பயனடைகிறது
  • ஹிராகுட் அணை இவ்வாற்றில் அமைந்துள்ளது


வைகை


  • இதன் நீளம் 240 கிலோ மீட்டர்
  • பரப்பளவு 7000 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம் மேற்கு தொடர்ச்சி மலை
  • வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  • தமிழ்நாடு பயனடைகிறது
  • துணை ஆறுகள்

      1.சுருளியாறு
      2.தேனியாறு
      3.வரட்டாறு
      4.வராக நதி
      5.மஞ்சளாறு
      6.நாகலாறு
      7.மருத நதி
      8.சிறுமலையாறு
      9.சாத்தையாறு

  • அணைகள்

       1.தேக்கடி(பெரியாறு தேக்கம்)
       2.வைகை அணைக்கட்டு
       3.பேரணை
       4.விரகனூர் மதகு அணை
       5.பார்த்திபனூர் அணைக்கட்டு

பெரியாறு


  • இதன் நீளம் 244 கிலோ மீட்டர்
  • பரப்பளவு 5,398 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம் கார்டமன் மலை
  • வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  • தமிழ்நாடு,கேரளா பயனடைகிறது


தாமிரபரணி


  • இதன் நீளம் 123 கிலோமீட்டர்
  • பரப்பளவு 4,400 சதுர கிலோமீட்டர்
  • உருவாகுமிடம் அகத்தியர் மலை
  • வங்காள விரிகுடாவில் கலக்கிறது
  • தமிழ்நாடு பயனடைகிறது
  • துணையாறுகள்
       1.காரையாறு
       2.சேர்வலாறு
       3.மணிமுத்தாறு
       4.கடனாநதி
       5.பச்சையாறு
       6.சிற்றாறு




Comments

Post a Comment

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...