மின்னியல்
- படிம எரிபொருட்களான நிலக்கரி, எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயு ஆகியவற்றை எரித்து நீரை சூடாக்கி மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் அனல் மின் நிலையங்கள் எனப்படும்
- அணுமின் நிலையங்களில் யுரேனியம் என்ற தனிமம் பிளக்கப்படும் போது வெளிப்படும் வெப்பத்தைக் கொண்டு நீர் சூடேற்றப்படுகிறது
- வேகமாகச் செல்லும் நீரைக் கொண்டு டர்பைன்களை சுழற்சி மின்னாற்றலை உற்பத்தி செய்யும் நிலையங்கள் நீர்மின் நிலையங்கள் எனப்படும்
- காற்றாலைகளில் மிகப்பெரிய காற்றாடிகள் மூலம் காற்றாற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
- இந்தியாவில் காற்றாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இங்கு 5000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது
- பெரும்பாலான காற்றாலைகள் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளது
மின்கலம்
- வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஓர் அமைப்பு மின்கலம் எனப்படும்
- லூயி கால்வானி என்பவர் முதன் முதலாக மின்கலத்தை உருவாக்கினார். இது அலசாண்ரோ வோல்டா என்பவரால் மேம்படுத்தப்பட்டது
- சூரிய மின்கலன்கள் ஒளி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன
- டார்ச் விளக்குகள், விளையாட்டுப் பொம்மைகள், கைக்கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள் போன்ற குறைந்த அளவு மின் ஆற்றல் தேவைப்படும் கருவிகளில் மின் ஆற்றலைப் பெற மின்கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன
மின்கலன்களின் வகைகள்
1.முதன்மை மின்கலன்கள்2.துணை மின்கலன்கள்
1. முதன்மை மின்கலன்கள்
- இவற்றை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது
- மின்கலன்கள் பயன்படுத்தப்படும் போது அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் மீண்டும் இவற்றை பயன்படுத்த முடியாது
- எடுத்துக்காட்டு
- கடிகாரங்கள், டார்ச் விளக்குகள், டிஜிட்டல் கடிகாரங்கள், கணக்கிடும் கருவி (Calculator) ஆகியவற்றில் பயன்படும் மின்கலன்கள்
2. துணை மின்கலன்கள் (சேமிப்பு மின்கலன்கள்)
- இவற்றை மின்னேற்றம் செய்து பலமுறை பயன்படுத்தலாம்
- எடுத்துக்காட்டு
- தானியங்கிகள், கைப்பேசிகள், அவசரகால விளக்குகள் ஆகியவற்றில் பயன்படுத்தும் மின்கலன்கள்
மின்சுற்று
- மின்சுற்று என்பது மின்கலத்தின் நேர் முனையிலிருந்து எதிர்முனைக்கு மின்னூட்டம் செல்லும் தொடர்ச்சியான மூடிய பாதையாகும்
- கால்வனா மீட்டர் என்பது மின் சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தை கண்டறிய பயன்படும் கருவியாகும்
- மின் விலாங்கு மீன் என்பது மின்சாரத்தை உருவாக்கவல்ல மீன் ஆகும். இது தற்காப்புக்காகவும், தனது இரையைப் பிடிக்கவும் வலிமையான மின்சாரத்தை உருவாக்கித் தாக்கக்கூடியது.இவ்வகை மீன்கள் அமேசான் நதியின் தூய நீரிலும், அமெரிக்காவில் உள்ள ஓரினோக்கொ நதிப்படுகையிலும் வாழ்கின்றன
கடத்திகள்
- தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்கும் பொருட்கள் கடத்திகள் எனப்படும்
- எடுத்துக்காட்டு
- தாமிரம் இரும்பு போன்ற உலோகங்கள், மனித உடல், புவி
மின்காப்புப் பொருட்கள்
- தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்காத பொருட்கள் மின்காப்பு பொருட்கள் எனப்படும்
- எடுத்துக்காட்டு
- பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு
- மின்னோட்டத்தினால் உருவாகும் வெப்ப விளைவை அடிப்படையாகக் கொண்டு மின் வெந்நீர் கொதிகலம், மின் சலவைப் பெட்டி, மின்விளக்கு, ரொட்டி சுடும் மின் அடுப்பு ஆகியவை இயங்குகின்றன
- மின் வெப்ப சாதனங்களில் நிக்ரோம் கம்பிச் சுருள் காணப்படும். இவற்றின் வழியே மின்னோட்டம் பாயும் போதுஅதிக அளவு வெப்பம் அடையும். இந்த வெப்பம் உணவை சமைக்கவும், நீரைச் சூடாக்கவும் பயன்படுகிறது
- மின் விளக்கில் உள்ள மின்னிழையின் வழியே மின்னோட்டம் பாயும்போது நன்றாக சூடேற்றப்பட்டு பிரகாசமான ஒளியைத் தரும்
- நிக்கல் மற்றும் குரோமியம் சேர்ந்த உலோகக் கலவை நிக்ரோம் எனப்படும்
மின் உருகு இழை
- அதிகப்படியான மின்னோட்டம் செல்லும்போது சாதனங்கள் சேதம் அடையாமல் இருக்க மின் உருகுஇழை பயன்படுத்தப்படுகிறது
- மின்னோட்டத்தால் ஏற்படும் வெப்ப விளைவின் அடிப்படையில் மின் உருகுஇழை செயல்படுகிறது
மின்னோட்டத்தின் காந்த விளைவு
- 1820 - ம் ஆண்டு கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட் என்பவர் மின்காந்த விளைவைக் கண்டறிந்தார்
- மின்னோட்டம் செல்லும் கம்பியைச் சுற்றி காந்தப்புலம் தோன்றும்
மின் காந்தம்
- மின்னோட்டம் பாயும்போது பொருள் காந்தமாக்கப்பட்டால் அது மின்காந்தம் எனப்படும்
- மின்மோட்டார், தந்திக் கருவி, தொலைபேசி, மின்சாரமணி போன்ற சாதனங்களில் மின்காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன
Comments
Post a Comment