Skip to main content

6 - ம் வகுப்பு அறிவியல் - செல்லின் அமைப்பு



              செல்லின் அமைப்பு

செல்


  • செல் என்பது ஒரு உயிரினத்தின் அடிப்படை அமைப்பும், செயல் அலகும் ஆகும்
  • செல்களை நேரடியாக பார்ப்பதற்கு நுண்ணோக்கி என்னும் கருவி பயன்படுகிறது
  • தாவரங்கள், விலங்குகள், மனித உடல் ஆகிய அனைத்தும் செல்களால் ஆனவை
  • செல்லை முதன் முதலில் கண்டறிந்தவர் இராபர்ட் ஹூக் (கி.பி.1665)
  • செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர் இராபர்ட் பிரௌன்

செல்லின் வகைப்பாடுகள்

      1.புரோகேரியாட்டிக் செல்
      2.யூகேரியாட்டிக் செல்

1.புரோகேரியாட்டிக் செல்

  • சவ்வினால் சூழப்பட்டுள்ள நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு மட்டுமே கொண்டுள்ள செல் புரோகேரியாட்டிக் செல் எனப்படும்
  • எடுத்துக்காட்டு: பாக்டீரியா 

2.யூகேரியாட்டிக் செல்

  • செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட உட்கரு உட்பட அனைத்து நுண்ணுறுப்புகளையும் கொண்டுள்ள செல் யூகேரியாட்டிக் செல் எனப்படும்
  • எடுத்துக்காட்டு: தாவர செல், விலங்கு செல்

விலங்கு செல்

பிளாஸ்மா படலம்


  • இது செல்லைச் சுற்றி காணப்படும் செல்லுக்கு வடிவம் கொடுக்கும் படலம் ஆகும்
  • செல்லுக்கு தேவையான பொருட்களைத் தேர்வு செய்து செல்லுக்கு உள்ளேயும், வெளியேயும் கடத்துகிறது
  • செல்லுக்கு பாதுகாப்பு அளிக்கிறது

புரோட்டோபிளாசம்

  • இது பிளாஸ்மா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ் ஆகும்
  • சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது புரோட்டோபிளாசம் ஆகும்
  • புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர் ஜே.இ.பர்கின்ஜி
  • புரோட்டோ என்றால் முதன்மை என்றும், பிளாசம் என்றால் கூழ் போன்ற அமைப்பு என்றும் பொருள்

சைட்டோபிளாசம்

  • இது பிளாஸ்மா படலத்துக்கும், உட்கருவுக்கும் இடைப்பட்ட புரோட்டோபிளாசத்தின் பகுதி ஆகும்
  • இதனுள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் ஆகியவை காணப்படுகின்றன
  • செல்லுக்குள் ஊட்டச்சத்துக்கள் பரவுவதற்கு உதவுகிறது

உட்கரு

  • இது செல்லின் முக்கிய பகுதி ஆகும்
  • செல்லின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்துவது உட்கரு ஆகும். எனவே இது செல்லின் கட்டுப்பாட்டு மையம் என அழைக்கப்படுகிறது
  • இது கோள வடிவில் காணப்படும். இது செல்லின் நடுவில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்
  • உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி, குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியவை இதனுள் காணப்படுகிறது
  • ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு பண்புகளை கடத்துகிறது 

மைட்டோகாண்ட்ரியா

  • இது நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுகிறது.எனவே இது செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுகிறது

கோல்கை உறுப்புகள்

  • இது உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரக்கிறது
  • லைசோசோம்களை உருவாக்குகிறது
  • நாம் உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தை பிரித்து எடுக்கிறது
  • இது தாவர செல்லில் டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுகிறது

எண்டோபிளாச வலை

  • செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இது பயன்படுகிறது

ரிபோசோம்கள்


  • இது புரதத்தை உற்பத்தி செய்கிறது.எனவே இது செல்லின் புரதத் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது

லைசோசோம்கள்

  • செல்லின் உள்ளே நுழையும் நுண்கிருமிகளை அழிக்க உதவுகிறது. எனவே இது செல்லின் தற்கொலைப் பைகள் என அழைக்கப்படுகிறது
  • இது செல்லுக்கு உள்ளேயும், வெளியேயும் செரித்தல் வேலையைச் செய்கிறது

சென்ட்ரோசோம்

  • இது விலங்கு செல்களில் மட்டுமே காணப்படும்
  • இது புதிய செல்களை உருவாக்குகிறது

நுண் குமிழ்கள்

  • சத்துநீரை சேமிப்பது, செல்லின் உள் அழுத்தத்தை ஒரே மாதிரியாக வைத்திருப்பது ஆகிய வேலைகளைச் செய்கிறது

தாவர செல்

  • தாவரங்களில் செல்சுவர் காணப்படுவதால் விலங்குகளை விடத் தாவரம் இறுகி கடினமாக காணப்படுகிறது

செல்சுவர்

  • செல்லுலோஸ் என்னும் பொருளினால் ஆன செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர் எனப்படும் 
  • செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது 
 கணிகங்கள்

  • இது தாவர செல்லுக்கு மட்டுமே உரிய நுண்ணுறுப்பு ஆகும்
  • தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது
  • மலர் மற்றும் கனிகளுக்கு நிறத்தை அளிக்கிறது
  • இவற்றில் நிறமிகள் காணப்படுகிறது
  • நிறமிகளின் அடிப்படையில் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை

        1. குளோரோபிளாஸ்ட்
        2. குரோமோபிளாஸ்ட்
        3. லியூக்கோபிளாஸ்ட்

1. குளோரோபிளாஸ்ட்

  • குளோரோஃபில் - பச்சை நிற நிறமி காணப்படுகிறது
  • இவை தாவரங்களின் தண்டு, இலைகளுக்கு பச்சை நிறத்தைத் தருகிறது

2.குரோமோபிளாஸ்ட்

  • கரோட்டின் - ஆரஞ்சு நிற நிறமி
  • சாந்தோஃபில் - மஞ்சள் நிற நிறமி
  • தாவரங்களின் பூக்கள், கனிகளுக்கு நிறத்தைத் தருகிறது

3.லியூக்கோபிளாஸ்ட்

  • தாவரத்தின் வேர் பகுதிகளிலும், தரைக்கீழ் தண்டு பகுதிகளிலும் காணப்படுகிறது

தகவல் துளிகள்

  • மனித உடலில் காணப்படும் செல்களின் எண்ணிக்கை சுமார் 6,50,00,000 ஆகும்
  • மனித உடலில் உள்ள எலும்புகள் ஈரப்பசையற்ற, சிறப்பு வகைச் செல்களால் ஆனவை
  • இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனவை என்பதை கண்டறிந்தவர் ஆன்டன் வான் லூவன் ஹாக்(1675)
  • விலங்கு செல்லில் காணப்படும் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்
  • விலங்கு செல்லில் காணப்படும் மிக கடினமான செல் எலும்பு செல் ஆகும்
  • இரத்த சிவப்பணுக்கள் என்பவை உட்கரு இல்லாத விலங்கு செல்கள் ஆகும்


















Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...