Transport including surface transport and communication
இந்தியா-போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
இந்திய போக்குவரத்து அமைப்பு
- பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை உற்பத்தி இடத்திற்கும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைக்கும் எடுத்துச்செல்ல போக்குவரத்து உதவுகிறது
- சமுதாய பிணைப்பை முன்னேற்றவும், பொருளாதார செழிப்பை விரைவுபடுத்தவும் நெருக்கமான போக்குவரத்து வழித்தடங்கள் முக்கியமானவை
சாலைப் போக்குவரத்து
- இந்திய சாலை வழிப் போக்குவரத்து 3.314 மில்லியன் கிலோ மீட்டர் நீளம் கொண்டு உலகின் இரண்டாவது பெரிய சாலை போக்குவரத்தாக அமைந்துள்ளது
கிராமச் சாலைகள்
- பல்வேறு கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் சாலை ஆகும்
- கிராம பஞ்சாயத்தால் பராமரிக்கப்படுகிறது
- இந்தியாவில் 26,50,000 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமச் சாலைகள் காணப்படுகின்றன
மாவட்டச் சாலைகள்
- கிராமங்களை மாவட்டத்தின் தலைநகரங்களுடன் இணைக்கின்றன
- மாநகராட்சிகளும், நகராட்சிகளும் பராமரிக்கின்றன
- இந்தியாவில் மாவட்டச் சாலைகள் 4,67,763 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது
மாநில நெடுஞ்சாலைகள்
- பல்வேறு மாவட்ட தலைநகரங்களை மாநிலத்தின் தலைநகரத்துடன் இணைக்கிறது
- மாநில பொதுப்பணித் துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன
- மாநில நெடுஞ்சாலைகள் 1,31,899 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது
தேசிய நெடுஞ்சாலைகள்
- மாநிலத் தலைநகரங்களை தேசிய தலைநகரத்துடன் இணைக்கும் சாலைகள்
- மத்திய பொதுப்பணித் துறை பராமரிக்கிறது
- 92,851 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன
- எடுத்துக்காட்டு:
- தேசிய நெடுஞ்சாலையில் குறைவான நீளமுடையது NH47A.இது 5.9 கிலோ மீட்டர் நீளமுடையது. எர்ணாகுளம் - கொச்சி துறைமுகத்தை இணைக்கிறது
- அதிக நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH7. இது உத்திரப் பிரதேசத்திலுள்ள வாரணாசியிலிருந்து, கன்னியாகுமரி வரை செல்கிறது. இதன் நீளம் 2,369 கிலோமீட்டர் ஜபல்பூர்,நாக்பூர், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய மாநகரங்களை இணைக்கிறது
தங்க நாற்கர சிறப்பு நெடுஞ்சாலைகள்
- இவை ஏறத்தாழ 14,846 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது
- இதில் அடங்கியுள்ள முக்கிய வழிகள்
1.ஆறுவழி சிறப்புச் சாலைகள்
- சுமார் 5846 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது
- சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய மாநகரங்களை இணைக்கிறது
2.வட தென் பகுதிகளை இணைக்கும் சாலைகள்
- ஸ்ரீநகரையும், கன்னியாகுமரியையும் இணைக்கிறது
- கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் சில்சார் - போர்பந்தரை இணைக்கிறது
- இவற்றின் மொத்த நீளம் 7300 கிலோ மீட்டர்
3.விரைவுவழிச் சாலைகள்
- 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமான நீளமான ஆறு வழிச்சாலைகளாகும்
- எடுத்துக்காட்டு:
4.எல்லையோரச் சாலைகள்
- நம் நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ளது
- 1960-ம் ஆண்டு அமைக்கப்பட்ட எல்லையோர அமைப்பு (Border Roads Organisation) இச்சாலைகளை பராமரிக்கிறது
- 46,780 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலைகள் கடினமான நில அமைப்புகளில் உள்ளது
5.பன்னாட்டு நெடுஞ்சாலை
- இது நம் நாட்டை அண்டை நாடுகளுடன் இணைக்கிறது
ரயில் போக்குவரத்து
- ரயில் போக்குவரத்து முதன்முதலில் 1853-ம் ஆண்டு தொடங்கப்பட்டது
- முதல் நீராவி ரயில் மும்பைக்கும் - தானேக்கும் இடையே 1853 - ம் ஆண்டு 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டது
- போபால் - சதாப்தி ரயில் இந்தியாவிலேயே அதிவிரைவு ரயில் ஆகும். இது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் போபால் சந்திப்பு- புதுடெல்லி இடையே செல்கிறது
- இந்திய ரயில் போக்குவரத்து துறை உலகளவில் நான்காவது இடத்தையும், ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது. இது குறுக்கிலும், நெடுக்கிலுமாக 63,273 கிலோமீட்டர் 7025 ரயில் நிலையங்களை இணைக்கிறது
பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் - சென்னை
குழாய் வழிப் போக்குவரத்து
- எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தளங்களிலிருந்து சுத்திகரிக்கப்படாத எண்ணெய் மற்றும் இயற்கை வாயுவை சுத்திகரிப்பு ஆலைகளுக்கும், இரசாயன உரத் தொழிலகங்களும், அனல்மின் நிலையங்களுக்கும் எடுத்துச் செல்ல பயன்படுகிறது
நீர்வழிப் போக்குவரத்து
- நீர்வழிப் போக்குவரத்து இரு வகைப்படும் அவை
1.உள்நாட்டு போக்குவரத்து
2.கடல்வழி போக்குவரத்து
1.உள்நாட்டு போக்குவரத்து
- நீர்வழிப் போக்குவரத்து மொத்தம் 14, 500 கிலோ மீட்டர் தூரம் நடைபெறுகிறது.அதில் 5685 கிலோ மீட்டர் தூரம் ஆறுகளிலும், 400 கிலோ மீட்டர் தூரம் கால்வாய்களிலும் எந்திரப்படகுகள் மூலம் நடைபெறுகிறது
2.கடல் வழிப் போக்குவரத்து
- இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் 7516 கிலோமீட்டர் ஆகும். இதில் 13 பெரிய துறைமுகங்களும், 187 நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்களும் அமைந்துள்ளன
- இந்தியாவில் நான்கு முக்கிய கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன
1.இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் - விசாகப்பட்டினம்
2.கார்டன் ரீச் தொழிற்சாலை - கொல்கத்தா
3.மேசகான்டாக் - மும்பை
4.கொச்சி கப்பல் கட்டும் தளம் - கொச்சி
வான்வழிப் போக்குவரத்து
- டாட்டா ஏர்லைன்ஸ் 1946 -ம் ஆண்டு ஏர் இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டது
- பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டர் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தின் கடல் சார்ந்த பணிகளுக்கு ஹெலிகாப்டர் சேவையை அளிக்கிறது
தகவல் தொடர்பு
- தகவல்கள், எண்ணங்கள், கருத்துக்களின் பரிமாற்றம் இவற்றை உள்ளடக்கியதே தகவல் தொடர்பு எனப்படும்
- தனிநபர் தகவல் தொடர்பு என்பது இரு நபர்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொள்வதாகும்
1.அஞ்சல்
2.தந்தி
3.தொலைபேசி
4.கைபேசி
5.பிரதிகள்
மக்கள் தொடர்பு சாதனம்
- மக்கள் தொடர்பு சாதனம் என்பது ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்கள் தகவல்களை பெறுவதாகும்
1.வானொலி
2.தொலைக்காட்சி
3.செய்தித்தாள்
4.இணையதளம்
- இந்தியாவில் 1927 - ம் ஆண்டு முதல் வானொலி ஒலிபரப்பப்பட்டது
- 1936 - ம் ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957 முதல் ஆகாசவாணி என்றும் அழைக்கப்படுகிறது
Comments
Post a Comment