Skip to main content

6-ம் வகுப்பு அறிவியல்- பொருள்களைப் பிரித்தல்




              பொருள்களைப் பிரித்தல்

திண்மக் கலவைகளை பிரிக்கும் முறைகள்


  • திண்மக் கலவைகளை கையால் தெரிந்தெடுத்தல், தூற்றுதல், சலித்தல் மற்றும் காந்தப் பிரிப்பு முறைகளைப் பயன்படுத்திப் பிரிக்கலாம்

கையால் தெரிந்தெடுத்தல்
  • நிறம்,அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களைப் பிரித்தல் கையால் தெரிந்தெடுத்தல் எனப்படும்
  • கலவை குறைந்த அளவில் இருந்தால் மட்டுமே கையால் தெரிந்தெடுத்தல் முறையைப் பயன்படுத்த முடியும்

தூற்றுதல்

  • விவசாயிகள் பதருடன் கூடிய தானியத்தை காற்றடிக்கும் போது முறத்தில் எடுத்துச் சற்று உயரத்திலிருந்து மெதுவாகக் கொட்டும் போது தானியம் கனமாக இருப்பதால், கீழே விழுந்து குவியலாகச் சேரும். பதர் இலேசானதாக இருப்பதால் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு சற்றுத் தள்ளி விழும். இவ்வாறு தானியங்களைப் பிரித்தெடுக்கும் முறை தூற்றுதல் எனப்படும்
  • கலவையில் உள்ள பகுதிப் பொருள்கள் இலேசானதாக இருந்தால், அவற்றை தூற்றுதல் முறையில் பிரிக்கலாம்

சலித்தல்

  • மாவிலிருந்து அரைபடாத பொருட்கள், குருணை, தவிடு, புழு, வண்டு ஆகியவற்றை சலித்தல் முறையில் பிரித்தெடுக்கலாம். மாவு சல்லடைத் துளைகளின் வழியே கீழே சென்று விடும். பெரிய துகள்கள் சல்லடையிலேயே தங்கிவிடும்
  • கட்டுமானப் பணிகளின் போது, மணலிலிருந்து கற்களைப் பிரித்தெடுக்க சல்லடையைப் பயன்படுத்தி சலிக்கலாம்
  • கலவையில் உள்ள பகுதிப் பொருள்களின் பருமனளவு வேறுபட்டால் மட்டுமே அவற்றை சலித்தல் முறையில் பிரிக்க முடியும்

காந்தப் பிரிப்பு முறை

  • காந்தத்தால் கவரப்படும் பொருள்கள் கலவையின் பகுதியாக இருந்தால், அவற்றை காந்தப் பிரிப்பு முறையைப் பயன்படுத்தி பிரித்தெடுக்கலாம்


நீர்மங்களில் கரையாத திண்மப் பொருட்களைப் பிரிக்கும் முறைகள்

  • நீரில் கரையாத திண்மப் பொருள்களையும், ஒன்றைவிட மற்றொன்று கனமான பகுதிப் பொருள்களைக் கொண்ட கலவைகளையும் தெளிய வைத்தல், தெளிய வைத்து இறுத்தல், வடிகட்டுதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தி பிரிக்கலாம்

தெளிய வைத்தல்

  • திண்மப் பொருளும், திரவப்பொருளும் கலந்த கலவையை ஒரு முகவையில் சிறுது நேரம் அசையாமல் வைத்து, திரவத்தின் அடியில் திண்மப் பொருளைப் படியச் செய்யும் முறை தெளிய வைத்தல் எனப்படும்
  • மேலே உள்ள திரவம் தெளிந்த திரவம் (supernatant liquid )எனப்படும்
  • எடுத்துக்காட்டு: மணலும்,நீரும் சேர்ந்த கலவை


தெளிய வைத்து இறுத்தல்

  • தெளிய வைத்த கலவை ஒன்றிலிருந்து, தெளிவான திரவப் பொருளை மட்டும் மற்றொரு கலனுக்கு கண்ணாடிக்குச்சியின் உதவியுடன் மாற்றுதல் தெளிய வைத்து இறுத்தல் எனப்படும்

வடிகட்டுதல்

  • தெளிய வைத்து இறுத்தல் முறையில் பிரிக்கப்பட்ட நீரை பருத்தி துணியைப் பயன்படுத்தி வடிகட்டும் போது தெளிந்த நீர் கிடைக்கிறது. ஏனெனில் துணியில் உள்ள இழைகளுக்கு இடையே துளைகள் இருப்பதனால் அதன் வழியாக நீர் கீழே சென்று விடுகிறது. மணல் துகள்கள் துணியிலேயே தங்கிவிடுகின்றன


நீர்மங்களில் கரைந்துள்ள திண்மப் பொருட்களைப் பிரிக்கும் முறைகள்

  • நீர்மங்களில் கரைந்துள்ள திண்மப் பொருட்களை ஆவியாதல், ஆவி சுருங்கி நீர்மமாதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தி பிரிக்கலாம்

ஆவியாதல்

  • வெப்பப்படுத்தும் போது ஒரு நீர்மமானது ஆவியாக மாறும் நிகழ்ச்சி ஆவியாதல் எனப்படும்
  • ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் 3.5 கிராம் உப்பு கரைந்துள்ளது. கடல்நீரில் நாம் உண்ணும் உப்பு மட்டுமில்லாமல் 50க்கும் மேற்பட்ட கனிமங்கள் உள்ளன

ஆவி சுருங்கி நீர்மமாதல்

  • ஒரு பொருளின் ஆவி, குளிர்ச்சி அடையும் போது நீர்மமாக மாறுகிறது. இந்நிகழ்ச்சி ஆவி சுருங்கி நீர்மமாதல் எனப்படும்
  • பெட்ரோல், மண்ணெண்ணெயிலிருந்து நாப்தலின் வரை 86 வகையான பொருட்கள் கச்சா எண்ணெய் என்ற கலவையில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது
  • காற்று பல வாயுக்கள் சேர்ந்த கலவையாகும்















Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...