Skip to main content

6 - ம் வகுப்பு சமூக அறிவியல் - வரலாற்றுக்கு முற்பட்ட காலம்


            வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

  • நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்து காலவரிசைப்படி கூறுவது வரலாறு எனப்படும்
  • மக்கள் வாழ்ந்த காலம், அக்கால நிகழ்வுகள், உணவு முறை, பண்பாடு, பழக்கவழக்கம், ஆட்சிமுறை, கலை, இலக்கியம் போன்றவற்றைப் பற்றி அறிய உதவும் எழுதப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் ஆகியவை வரலாற்று ஆதாரங்கள் எனப்படும்
  • வரலாற்றினை இரு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். அவை
1. வரலாற்றுக் காலம்
2. வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
1. வரலாற்றுக் காலம்

  • அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலம் வரலாற்றுக் காலம் எனப்படும்
  • இலக்கியங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள் ஆகியவை எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் எனப்படும்

2. வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

  • அக்காலத்தைச் சார்ந்த பொருட்கள், சிதைவுகள், கற்கள், மரங்கள், விலங்குகளின் கொம்புகள், எலும்புகள், கற்கருவிகள், மண்டை ஓடுகள், படிமங்கள் ஆகியவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிய உதவும் ஆதாரங்கள் ஆகும்
  • வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை 4 காலங்களாக வகைப்படுத்தலாம்
1. பழைய கற்காலம் (கி.மு.10,000 ஆண்டுகளுக்கு முன்)
2. புதிய கற்காலம் (கி.மு.10,000 - கி.மு.4000)
3. செம்புக் கற்காலம் (கி.மு.3000 - கி.மு.1500)
4. இரும்புக் காலம் (கி.மு.1500 - கி.மு.600)
  • ஆதி மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தை இரண்டாகப் பிரிக்கலாம்
i)பழைய கற்காலம்
ii) புதிய கற்காலம்
i)பழைய கற்காலம்

  • மனிதன் காடுகளில் வாழ்ந்தான். மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும் குகைகளிலும் தங்கினான்
  • ஆதிமனிதன் சிக்கிமுக்கிக் கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்
  • ஆதிமனிதன் இலை தழைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல் ஆகியவற்றை உடையாகப் பயன்படுத்தினான்
  • கரடு முரடான கற்கள்,மரக்கிளைகள்,எலும்புகள், விலங்குகளின் கொம்புகள் ஆகியவற்றை கருவிகளாகப் பயன்படுத்தினான்
  • ஆதிமனிதன் காடுகளில் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள், விலங்குகளின் இறைச்சி ஆகியவற்றை உண்டான்

முக்கிய தோற்றங்களின் ஆண்டுகள்
  1. பூமியின் தோற்றம் - 460 கோடி ஆண்டுகளுக்கு முன்
  2. மனிதனின் தோற்றம் - 40,000 ஆண்டுகளுக்கு முன்
  3. வேளாண்மை தோன்றிய காலம் - சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்
  4. நகரங்களின் தோற்றம் - 4700 ஆண்டுகளுக்கு முன்
இந்தியாவில் பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ள இடங்கள்
  1. மத்திய பிரதேசம் - சோன் ஆற்றுப்படுகை,பிம்பேட்கா,ம்ஹேஸ்வா
  2. ராஜஸ்தான் - லூனி ஆற்றுச் சமவெளி
  3. ஆந்திரப் பிரதேசம் - கர்னூல் குகைகள், ரேணிகுண்டா
  4. தமிழ்நாடு - வடமதுரை, அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்
2. புதிய கற்காலம்

  • மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த படி நிலையை புதியகற்காலம் எனலாம்
  • ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்தான்
  • அக்கால மனிதன் செதுக்கப்பட்ட நயமான, கூர்மையான கற்கருவிகளைப் பயன்படுத்தினான்
  • அக்காலத்தில் முக்கிய மாற்றம் உணவு உற்பத்தி ஆகும்
  • அக்காலத்தில்தான் சக்கரமும் உருவாக்கப்பட்டது
  • முதலில் பயன்படுத்திய உலோகம் செம்பு
  • மண் குடிசைகளை அமைத்தான்
புதிய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ள இடங்கள்
  • திருநெல்வேலி, தான்றிக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம்

3. செம்புக் கற்காலம்

  • செம்பினால் கருவிகள் செய்து பயன்படுத்தியதால் அக்காலம் செம்பு கற்கருவிகள் காலம் என்று குறிப்பிடப்படுகிறது
  • ஹரப்பா நகர நாகரிகம் இக்காலத்தைச் சேர்ந்தது
  • அக்காலத்தில் மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் மேல் வண்ண ஓவியங்கள் வரைந்தனர்

4. இரும்புக் காலம்

  • இரும்பினால் கருவிகள் செய்த காலம் இரும்புக் காலம் எனப்படும்
  • இக்காலத்தில் வீட்டுச் சாமான்களும், பயிர்த்தொழில் கருவிகளும் இரும்பினால் செய்யப்பட்டன
  • வேதகால நாகரிகம் இரும்புக் காலத்தைச் சேர்ந்தது

உலோகக் கலவைகள்
இரும்பு + குரோமியம் = சில்வர்
செம்பு + வெள்ளீயம் = வெண்கலம்
செம்பு + துத்தநாகம் = பித்தளை
இரும்பு + மாங்கனீசு = எஃகு










Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...