Skip to main content

புவியியல் - மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பரவல்



       Population - density and distribution
       மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பரவல்

மக்கள் தொகை வளர்ச்சி


  • பிறப்பு விகிதத்திற்கும், இறப்பு விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் என அழைக்கப்படுகிறது
  • பிறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 பெண்களுக்கு ஓராண்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகும்
  • இறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1,000 மக்களில் ஓராண்டில் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கை ஆகும்
  • தமிழ்நாட்டில், மக்கள் தொகையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 1.1% ஆகும்


மக்கள்தொகை பரவல்


  • புவியில், மக்கள் பரவிக் காணப்படும் நிலையினையே மக்கள்தொகை பரவல் என்கிறோம்
  • தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் அதிக அளவான 6.96% சென்னை மாவட்டம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர், வேலூர், சேலம் மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டுள்ளன
  • மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம் பெரம்பலூர் (.069%) ஆகும்


மக்கள் அடர்த்தி


  • மக்கள் அடர்த்தி என்பது ஒரு பரப்பில் உள்ள மக்களின் சராசரி எண்ணிக்கையை அளவிடுவது ஆகும்
  • ஒரு சதுர கிலோமீட்டருக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள்தொகை அடர்த்தி எனப்படும்
  • மக்கள் தொகை அடர்த்தி அதிகமுள்ள நாடு வங்காளதேசம் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1069 மக்கள் வாழ்கின்றனர்
  • மக்கள்தொகை அடர்த்தி குறைவாக உள்ள நாடு மங்கோலியா ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1.7 மக்கள் வாழ்கின்றனர்


மக்கள்தொகை பரவல் மற்றும் அடர்த்தியை பாதிக்கும் காரணிகள்

1.இயற்கைக் காரணிகள்

       i)புவித்தோற்றம்
       ii)காலநிலை
       iii)வள ஆதாரங்கள்

i)புவித்தோற்றம்


  • சமமான நிலப்பரப்பு உள்ள பகுதிகளில் அதிக அடர்த்தி காணப்படும்
  • எடுத்துக்காட்டு: இந்தியாவின் கங்கைச் சமவெளி
  • மலைகளைப் போன்ற உயரமான நிலத்தோற்றம் உள்ள பகுதிகளில் குறைந்த அடர்த்தி காணப்படும்
  • எடுத்துக்காட்டு: இமயமலை


ii)காலநிலை


  • பயிர்கள் வளர்வதற்குப் போதுமான மழையளவு மற்றும் வெப்பம் நிலவும் காலநிலை மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதற்கு காரணமாக உள்ளது
  • எடுத்துக்காட்டு: இந்தியா
  • தீவிரமான காலநிலைப் பகுதிகளில் மக்கள் அடர்த்தி நெருக்கமற்று காணப்படும்
  • எடுத்துக்காட்டு: மிக அதிக வெப்பமுள்ள சஹாரா பாலைவனம் மற்றும் மிக அதிக குளிர் பகுதியாகிய கிரீன்லாந்து


iii)வள ஆதாரங்கள்


  • கனிமங்கள், எரிபொருள்கள், காடுகள், மீன் வள ஆதாரங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்கள் அடர்த்தி அதிகமாகக் காணப்படும்
  • வளங்கள் குறைவான பகுதிகளில், மக்கள் நெருக்கமற்று காணப்படுகின்றனர்
  • எடுத்துக்காட்டு: ஆப்பிரிக்காவில் உள்ள சாஹேல் பகுதி


2.மனித காரணிகள்

        i)அரசியல்
        ii)சமுதாயம்
        iii)பொருளாதாரம்

i)அரசியல்


  • நிலையான அரசாங்கம் உள்ள நாடுகளில் மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது
  • எடுத்துக்காட்டு: சிங்கப்பூர்
  • நிலையற்ற அரசாங்கம் நடைபெறும் நாடுகளில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து செல்வதால் மக்கள் அடர்த்தி குறைவாக காணப்படும்
  • எடுத்துக்காட்டு: ஆப்கானிஸ்தான்


ii)சமுதாயம்


  • தங்கள் பாதுகாப்பிற்காக மக்கள் குழுக்களாக நெருக்கமாக வாழ்கின்ற பகுதியில் அதிக அடர்த்தி காணப்படும்
  • எடுத்துக்காட்டு: அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  • மக்களுள் சில கூட்டங்கள் தனித்து வாழ்வதால் குறைவான அடர்த்தி காணப்படுகிறது
  •  எடுத்துக்காட்டு: ஸ்காண்டி நேவியர்கள்


iii)பொருளாதாரம்


  • நல்ல வேலைவாய்ப்புகள் உள்ள இடங்களில் குறிப்பாக பொருளாதாரம் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ள (டோக்கியோ) மற்றும் குறைவான வளர்ச்சி அடைந்துள்ள (மும்பை) நாடுகளிலுள்ள நகரங்களில் மக்களடர்த்தி அதிகமாகக் காணப்படும்
  • குறைவாக வேலை வாய்ப்பு உள்ள பகுதிகளில் மக்கள் அடர்த்தி குறைவாகக் காணப்படும்
  • எடுத்துக்காட்டு: அமேசான் மழைக்காட்டுப் பகுதிகள்




Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...