Skip to main content

புவியியல் - இயற்கைப் பேரழிவுகள்-பேரிடர் மேலாண்மை


   Natural Calamities - Disaster Management

   இயற்கைப் பேரழிவுகள் - பேரிடர்             மேலாண்மை


பேரிடர் மேலாண்மை 


  • பேரிடர் மேலாண்மை என்பது தடுத்தல், தணித்தல், தயார்நிலை, எதிர்கொள்ளல் மற்றும் மீட்டல் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும் 


1.நிலநடுக்கம் 


  • புவித் தட்டுகளின் நகர்வால் புவியின் ஒரு பகுதியில் திடீரென ஏற்படும் நில அதிர்வை நிலநடுக்கம் என்கிறோம்
  • நிலநடுக்கம் புவித் தட்டுகளில் எல்லைகளில் ஏற்படுகிறது 
  • புவியின் உட்புறத்தில் நிலநடுக்கம் தோன்றுமிடத்தை நிலநடுக்க மையம் என்கிறோம்
  • நிலநடுக்க மையத்திற்கு செங்குத்தாக புவியின் மேற்பரப்பில் காணப்படும் இடம் மையப்புள்ளி ஆகும்
  • நிலநடுக்கம் சீஸ்மோக்ராப் என்ற கருவியால் பதிவுசெய்யப்படுகிறது.இது ரிக்டர் அளவையில் அளக்கப்படுகிறது
  • உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடு இந்தோனேசியா


2.ஆழிப்பேரலை (சுனாமி)


  • நிலநடுக்கம், கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளை ஆழிப்பேரலை ஆகும்
  • ஆழிப்பேரலையானது 10 - 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700 - 800 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது


3.கலவரம்


  • பல்வேறு இனம், மதம், அரசியல், பொருளாதார மற்றும் சமூக காரணிகளால் கலவரம் ஏற்படுகிறது
  • ஏப்ரல் 11,2015 - ல் பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வின்படி 198 நாடுகளின் பட்டியலில் உள்ள சகிப்புத் தன்மையில்லா நாடுகளில் சிரியா, நைஜீரியா, ஈராக்கிற்கு  அடுத்ததாக இந்தியா உள்ளது


4.தீ


  • வெப்பமான மற்றும் வறண்ட காலத்தில் அடர்ந்த மரங்கள் காணப்படும் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுகிறது
  • தீப்புகை காற்றில் பரவும் போது சுவாசம் தொடர்பான இடர்பாடுகள் ஏற்படுகின்றன


பேரிடர் அபாயநேர்வு குறைப்பு


  • பேரிடரின் இயல்பான காரணங்களை ஆய்வு மற்றும் மேலாண்மை செய்து முறையான பயிற்சியும், முயற்சியும் செய்து பேரிடரின் அபாய நேர்வை குறைப்பதே இதன் நோக்கமாகும்.இடரின் குறைப்பு,மக்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் குறைப்பு,நிலம் மற்றும் சுற்றுச்சூழலில் அறிவுத்திறனுடைய மேலாண்மை மற்றும் முன்னேற்றமான தயார் நிலை ஆகியவை இதன் கருத்தில் அடங்கும்
  • பேரிடர் அபாய நேர்வு குறைப்பில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன
          i)தணித்தல்
          ii)ஆரம்ப முன்னெச்சரிக்கை அமைப்பு
          iii)பேரிடர் வரும் முன் தயார் நிலை
          iv)மீட்பு
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ம் நாள் உலக பேரிடர் குறைப்பு நாள் என கொண்டாடப்பட்டு வருகிறது

Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...