Skip to main content

6 - ம் வகுப்பு தமிழ் - புதுமைகள் செய்யும் தேசமிது



6 - ம் வகுப்பு தமிழ் - புதுமைகள் செய்யும் தேசமிது

பாரதம் அன்றைய நாற்றங்கால்

பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடலை எழுதியவர் - தாராபாரதி
இவரது இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.கவி ஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு,விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.


தமிழ்நாட்டில் காந்தி

1919 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் முதன்முறையாகச் சென்னைக்கு வந்தார். அப்போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதனை எதிர்த்து பெரிய போராட்டத்தை நடத்த காந்தியடிகள் திட்டமிட்டார்.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியடிகள் தமிழ்நாட்டுக்கு வந்தார். மதுரைக்கு செல்லும் வழியில் உழவர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருப்பதை கண்டார். அவர்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருந்தனர். அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி, மேல் சட்டை, பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகள் அணிவதா? என்று சிந்தித்தார். அன்று முதல் வேட்டியும், துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் தமிழை கற்க தொடங்கியுள்ளார். ஜி. யு. போப் எழுதிய தமிழ்க்கையேடு அவரை மிகவும் கவர்ந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும்.




வேலு நாச்சியார்

இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலு நாச்சியார். தாய்மொழியாகிய தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார். சிலம்பம், குதிரை ஏற்றம், வாள்போர்,வில் பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்.


நால்வகைச் சொற்கள்

தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள்  தரும். ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்
எடுத்துக்காட்டு:ஈ,பூ,மை, கல், கடல், தங்கம்

இலக்கண அடிப்படையில் சொற்கள் நான்கு வகைப்படும்

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்


பெயர்ச்சொல்

ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்
எடுத்துக்காட்டு: பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்

வினைச்சொல்

வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச் சொல் எனப்படும்
எடுத்துக்காட்டு: வா, போ, எழுது, விளையாடு

இடைச்சொல்

பெயர்ச் சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச் சொல் ஆகும். இது தனித்து இயங்காது
எடுத்துக்காட்டு:
உம் - தந்தையும் தாயும்
கு - தம்பிக்கு
ஐ - திருக்குறளை

உரிச்சொல்

பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்
எடுத்துக்காட்டு:
மா - மாநகரம்
சால - சாலச்சிறந்தது




Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...