Skip to main content

6 - ம் வகுப்பு கணிதம் - எண்கள்



    6 - ம் வகுப்பு கணிதம் - எண்கள்



தொடரி மற்றும் முன்னி


  • ஓர் எண்ணுடன் 1ஐக் கூட்டினால் கிடைப்பது அந்த எண்ணின் தொடரி ஆகும்
  • ஓர் எண்ணிலிருந்து 1ஐக் கழித்தால் கிடைப்பது அந்த எண்ணின் முன்னி ஆகும்


ஓர் இலட்சத்தில் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?
100000/1000 = 100
1 இலட்சம் = 100 ஆயிரங்கள்

பெரிய எண்களின் இடமதிப்பு
98,47,056

6 - ன் இடமதிப்பு 6×1 = 6 (ஆறு)
5 - ன் இடமதிப்பு 5×10 = 50(ஐம்பது)
0 - ன் இடமதிப்பு 0×100 = 0(பூஜ்யம்)
7  - ன் இடமதிப்பு 7×1000 = 7000(ஏழாயிரம்)
4 - ன் இடமதிப்பு 4×10000 = 40000(நாற்பதாயிரம்)
8 - ன் இடமதிப்பு 8×100000 = 800000(எட்டு இலட்சம்)
9 - ன் இடமதிப்பு 9×1000000 = 9000000(தொண்ணூறு இலட்சம்)

98,47,056 என்ற எண்ணுருவானது தொண்ணூற்று எட்டு இலட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து ஐம்பத்தாறு என்பதாகும்


ஒரு பொருட்காட்சியில் 1வது,2வது,3வது மற்றும் 4வது நாட்களில் விற்ற நுழைவுச் சீட்டுகள் முறையே 1,10,000,75,060,25,700 மற்றும் 30,606. நான்கு நாட்களிலும் மொத்தமாகவிற்பனை செய்யப்பட்ட மொத்த நுழைவுச்சீட்டுகள் எத்தனை?

முதல் நாள் விற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை = 1,10,000
இரண்டாம் நாள் விற்ற நுழைவுச்சீட்டுகளின் எண்ணிக்கை = 75,060
மூன்றாம் நாள் விற்ற நுழைவுச்சீட்டுகளின் எண்ணிக்கை = 25,700
நான்காம் நாள் விற்ற நுழைவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை = 30,606
நான்கு நாட்களில் மொத்தம் விற்ற நுழைவுச் சீட்டுகளின் எண்ணிக்கை = 2,41,366



ஓர் ஆண்டில், ஒரு மொத்த காகித விற்பனை நிறுவனம் 7,50,000 குறிப்பேடுகளில் 6,25,600 குறிப்பேடுகளை விற்பனை செய்துள்ளது. விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கையைக் காண்க.

மொத்தக் குறிப்பேடுகளின் எண்ணிக்கை = 7,50,000
விற்ற குறிப்பேடுகளின் எண்ணிக்கை = 6,25,600
விற்பனை ஆகாத குறிப்பேடுகளின் எண்ணிக்கை = 1,24,400


ஒரு கைபேசிக் கடையில், ஒரு மாதத்தில் விற்பனையான கைப்பேசிகளின் எண்ணிக்கை 1250. ஒவ்வொரு மாதமும் அதே எண்ணிக்கையில் விற்பனையானால் இரண்டு ஆண்டுகளில் விற்பனையாகும் மொத்த கைப்பேசிகளின் எண்ணிக்கையைக் காண்க.

ஒரு மாதத்தில் விற்பனையான கைப்பேசிகளின் எண்ணிக்கை = 1250
                       1 ஆண்டு         = 12 மாதங்கள்
                       2 ஆண்டுகள் = 2× 12 = 24 மாதங்கள்
24 மாதத்தில் விற்பனையான மொத்த கைப்பேசிகளின் எண்ணிக்கை =1250×24=30,000
2 ஆண்டுகளில் விற்பனையான மொத்த கைப்பேசிகளின் எண்ணிக்கை =30,000



ஓர் அரசு திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 500 பெண்களுக்கு ரூ. 10,00,000 ஆனது சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு பெண்ணுக்கும் கொடுக்கப்பட்ட தொகையைக் காண்க.

500 பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகை = ரூ.10,00,000
ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தொகை = 10,00,000÷500 =2000




சுருக்குக: 24+2×8÷2-1

           = 24+2×4-1
          = 24+8-1
           =31


சுருக்குக:20+(8×2+(6×3-10÷5))

          =20+(8×2+(18-10÷5)
          =20+(8×2+(18-2))
           =20+(16+16)
           =20+32
           =52


இயல் எண்கள் மற்றும் முழு எண்கள்

  • மிகச் சிறிய இயல் எண் 1 ஆகும்
  • மிகச் சிறிய முழு எண் 0 ஆகும்
  • ஒவ்வோர் எண்ணிற்கும் தொடரி உண்டு
  • ஒவ்வோர் எண்ணிற்கும் முன்னி உண்டு. முழு எண் W ல் எண் 1 க்கு முன்னி 0 உண்டு. ஆனால் 1 க்கு இயல் எண் N ல் முன்னி இல்லை. 0 க்கு முழு எண்  W ல் முன்னி இல்லை



முழு எண்களின் பண்புகள்



1.கூட்டல் மற்றும் பெருக்கலின் பரிமாற்றுப் பண்பு


இரண்டு எண்களைக் கூட்டும் போது (அல்லது பெருக்கும்போது) அவ்வெண்களின் வரிசை அவற்றின் கூடுதலைப் (அல்லது பெருக்கலை) பாதிக்காது. இது கூட்டல் (அல்லது பெருக்கல்)ன் பரிமாற்றுப் பண்பு எனப்படும்

43+57 = 57+43
12×15 = 15×12

2. கூட்டல் மற்றும் பெருக்கலின் சேர்ப்புப் பண்பு

பல எண்களைக் கூட்டும் போது அல்லது பெருக்கும் போது அவ்வெண்களின் வரிசை பற்றி கருத்தில் கொள்ளத் தேவையில்லை. இது கூட்டலின் அல்லது பெருக்கலின் சேர்ப்புப் பண்பு எனப்படும்

(43+57)+25 = 43+(57+25)
12×(15×7) = (12×15)×7

3. கூட்டல் மற்றும் கழித்தல் மீதான பெருக்கலின் பங்கீடு


ஓர் எண்ணை இரண்டு எண்களின் கூடுதலோடு பெருக்கிக் கிடைக்கும் பெருக்குத் தொகையை, இரண்டு பெருக்குத் தொகைகளின் கூடுதலாக குறிப்பிட முடியும்.

ஓர் எண்ணை இரண்டு எண்களுக்கு இடையேயான வித்தியாசத்தை பெருக்கிக் கிடைக்கும் பெருக்குத் தொகையை இரண்டு பெருக்குத் தொகையின் வித்தியாசமாக குறிப்பிட முடியும். இது கூட்டல் மற்றும் கழித்தல் மீதான பெருக்கலின் பங்கீட்டு பண்பு எனப்படும்

37×(100+2) = (37×100)+(37×2)
37×(100-2) = (37×100)-(37×2)

4. கூட்டல் மற்றும் பெருக்கல் சமனி


எந்த ஓர் எண்ணுடனும் பூஜ்ஜியத்தைக் கூட்டும் போது அதே எண் கிடைக்கும். எந்த ஓர் எண்ணையும் 1 ஆல் பெருக்கும்போது அதே எண் கிடைக்கும். எனவே 0 கூட்டல் சமனி எனவும், 1 பெருக்கல் சமனி எனவும் அழைக்கப்படும்








Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...