6 - ம் வகுப்பு கணிதம் - இயற்கணிதம்
- இயற்கணிதம் தகவல்களைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் எழுத வழிவகுக்கிறது
- ஏதேனும் ஓர் எண் × 1 = அதே எண் n×1 = n
எடுத்துக்காட்டு:a+b = b+a
இங்கு a மற்றும் b என்ற இரண்டு மாறிகள் உள்ளன.a என்ற மாறிக்கு ஒரே எண்ணை இரண்டு பக்கமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் b என்ற மாறிக்கு இரண்டு பக்கமும் ஒரே எண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் a மற்றும் b ஒரே எண்ணாக இருக்க வேண்டியதில்லை.
அதியன் மற்றும் முகிலன் இருவரும் உடன்பிறந்தவர்கள். அதியனின் வயது p. முகிலன் அதியனை விட 6 வயது மூத்தவன் என்பதை இயற்கணிதக் கூற்றாக எழுதுக. அதியனின் வயது 20 எனில் முகிலனின் வயது என்ன?
அதியனின் வயது = p
முகிலனின் வயது = p+6 (இயற்கணிதக் கூற்று)
p = 20 எனில், முகிலனின் வயது = 20 + 6
= 26 வயது
Comments
Post a Comment