Skip to main content

புவியியல் - மண் வளம், கனிம வளம் மற்றும் இயற்கை வளங்கள்



Soil,Minerals and Natural resources

மண் வளம், கனிம வளம் மற்றும் இயற்கை வளங்கள்


இயற்கை வளங்கள்

  • அன்றாட வாழ்வின் தேவைகளை நிறைவு செய்ய இயற்கையிலிருந்து பெறப்படும் அனைத்து பொருட்களும் இயற்கை வளங்கள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு:
  நிலம், காற்று, நீர், சூரிய ஒளி, மண்,     கனிமங்கள் ,நிலக்கரி, கச்சா எண்ணெய்,         தாவரங்கள் ,விலங்குகள்
  • இயற்கை வளங்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்
      1.புதுப்பிக்கத்தக்க வளங்கள்
      2.புதுப்பிக்க இயலாத வளங்கள்


1.புதுப்பிக்கத்தக்க வளங்கள்

  • புதுப்பிக்கத்தக்க வளம் என்பது இயற்கை கரிம வளம் ஆகும்
  • உயிரிகளின் பெருக்கத்தின் காரணமாகவோ அல்லது மற்ற இயற்கை செயல்பாடுகளின் காரணமாகவோ கிடைக்கக்கூடிய காலத்தை பொறுத்து திருப்பி நிறைவு செய்கின்றது
  • எடுத்துக்காட்டு: வேளாண் பயிர்கள் மீண்டும் உற்பத்தியாவதற்கு குறைந்த காலத்தையே எடுத்துக் கொள்கின்றன


மண் வளம்

  • மண் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளமாகும்
  • மண்ணில் அடங்கியுள்ள பொருட்கள்
       1.மட்கிய தாவரங்கள்
       2.விலங்கின பொருட்கள்
    3.சிலிக்கா, களிமண், சுண்ணாம்பு போன்ற  கனிமங்கள்
 4.இலை மட்கு எனப்படும் உயிர்ச்சத்து பொருட்கள்

  • மண்ணில் அதிகமாக இருக்க வேண்டிய சத்துப் பொருட்கள் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பேட் ஆகும்
  • மண்ணில் மிக நுண்ணிய அளவில் இருக்க வேண்டிய சத்துப் பொருட்கள் கந்தகம் ,குளோரின், செம்பு, மாங்கனிஸ், மாலிப்டினம் இரும்பு, துத்தநாகம் ஆகும்
  • இந்தியாவில் உள்ள மண்ணை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்
      1.வண்டல் மண்
      2.கரிசல் மண்
      3.செம்மண்
      4.சரளை மண்
      5.மலை மண்
      6.வறண்ட பாலைவன மண்
 

1.வண்டல் மண்

  • ஆற்றுப்படுகைகள், வெள்ளப்பெருக்குச் சமவெளி, கடற்கரைச் சமவெளி போன்றவற்றில் ஆறுகளால் படிய வைக்கப்படும் படிவுகள் வண்டல் மண் எனப்படும்
  • வண்டல் மண் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது
       i)காதர் மண்
       ii)பாங்கர்மண்

  • காதர் மண் என்பது புதியதாக படிய வைக்கப்படும் வெளிர்நிறத்துடன் கூடிய வண்டல் மண் ஆகும்
  • பாங்கர் மண் களிமண் கூடிய வண்டல் மண் ஆகும்
  • வண்டல் மண்ணை படிய வைக்கும் ஆறுகள் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, சட்லஜ், கங்கை, யமுனை, கட்டக், காக்ரா
  • வண்டல் மண் நெல், கோதுமை, கரும்பு, பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிடுவதற்கு ஏற்ற மண் ஆகும்
  • கங்கை-பிரம்மபுத்திரா தாழ்ந்த ஆற்றுச் சமவெளி சணல் பயிரிட பயன்படுகிறது 
  • பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், பீகார் ,மேற்கு வங்காளம் ஆகியவற்றில் வண்டல் மண் காணப்படுகிறது


2.கரிசல் மண்

  • தீப்பாறைகள் சிதைறுவதால் உருவாகிறது
  • கோதாவரி, நர்மதை, தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் காணப்படுகிறது
  • சுண்ணாம்பு, இரும்பு, பொட்டாசியம் ,அலுமினியம், கால்சியம், மெக்னீசியம் ,கார்பனேட்டுகளை அதிகம் கொண்டதாக உள்ளது. ஆனால் பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் உயிரிப்பொருட்கள் இன்றி காணப்படுகின்றது
  • ஈரப்பதத்தை தேக்கி வைக்கும் சிறப்புத்தன்மை பெற்றதால் புகையிலை, எண்ணெய்வித்துகளான கடுகு, சூரியகாந்தி மற்றும் பழங்கள், காய்கறிகள் விளைவதற்கு ஏற்றதாக உள்ளது
  • பருத்தி, நெல், கோதுமை, சோளம், தினை வகைகள், கரும்பு ஆகிய பயிர்கள் விளைய ஏற்றதாகவும் உள்ளது
  • மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசத்தில் ஒரு பகுதி, ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை உள்ளடக்கிய தக்காண பீடபூமி ஆகிய பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது


3.செம்மண்

  • பழங்கால படிவுப் பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகள் சிதைவுற்று உருவானவை
  • இரும்புச்சத்து அதிகம் காணப்படுவதால் சிவப்பு நிறமாக உள்ளது
  • நுண்துகள்கள் காணப்படுவதால் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளாது
  • சுண்ணாம்புச்சத்து, நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகியவற்றை குறைவான அளவில் கொண்டுள்ளன
  • கோதுமை, நெல், பருத்தி, கரும்பு, பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன


4.சரளை மண்

  • வெப்பமண்டல பருவக்காற்று காலநிலையில் உருவாகிறது
  • இரும்பு ஆக்சைடு உள்ளதால் சிவப்பு நிறமாக காணப்படுகிறது
  • காபி, ரப்பர், முந்திரி, மரவள்ளி ஆகிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன
  • ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ,கிழக்கு தொடர்ச்சி மலையின் உச்சிகள், ஒடிசா ,கேரளா, அசாமின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது


5.மலை மண்

  • இலைச்சத்தும், சாம்பல்சத்தும் அதிகமாக காணப்படுகிறது
  • தேயிலை, காபி, ரப்பர் பயிரிடப்படுகிறது
  • கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை, இமாச்சல பிரதேசம்,சிவாலிக் மலைத்தொடர்களில் காணப்படுகிறது
  • தேயிலை பயிரிடுவதில் அஸ்ஸாமும் மேற்கு வங்காளமும் முதன்மை வகிக்கின்றன


6.வறண்ட பாலைவன மண்

  • இயற்கையாகவே மணலாகவும், காரச்சத்தை பெற்றதாகவும், நுண்துளைக் கொண்டதாகவும் உள்ளது
  • வளமில்லாத மண்ணாக இருந்தாலும் நீர்ப்பாசன வசதியுடன் சில பகுதிகளில் வேளாண்மை செய்யப்படுகிறது
  • கோதுமை, நெல், பார்லி, திராட்சை, தர்பூசணி போன்றவை விளைவிக்கப்படுகின்றன
  • வடமேற்கு இந்திய பகுதிகளான ராஜஸ்தான், குஜராத்(கட்ச்) மற்றும் தென் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது


2.புதுப்பிக்க இயலாத வளங்கள்

  • பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் கிடைக்க இயலாத வளங்கள் புதுப்பிக்க இயலாத வளங்கள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு: கனிமங்கள், படிம எரிபொருட்கள்


கனிம வளங்கள்



  • கனிம வளங்கள் இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன
       i)உலோகக் கனிமங்கள்
       ii)உலோகமல்லாத கனிமங்கள்


i)உலோகக் கனிமங்கள்



  • இரும்பு, செம்பு, மாங்கனிஸ், பாக்சைட், தங்கம் போன்ற உலோகங்களை கொண்டுள்ளன
  • உலோகக் கனிமங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன
      1.இரும்பு சார்ந்த கனிமங்கள்
      2.இரும்பு சாராத கனிமங்கள்


1. இரும்புசார்ந்த கனிமங்கள்


  • இரும்பு கலந்திருந்தால் அவை இரும்பு சார்ந்த கனிமங்கள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு: இரும்பு, மாங்கனீஸ், நிக்கல் ,கோபால்ட், டங்க்ஸ்டன்


2.இரும்பு சாராத கனிமங்கள்



  • இரும்பு கலக்காமல் இருந்தால் அவை இரும்பு சாராத கனிமங்கள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு: தங்கம், வெள்ளி, செம்பு ,பாக்சைட்


ii)உலோகமல்லாத கனிமங்கள்


  • மைக்கா, சுண்ணாம்புக்கல், ஜிப்சம் ,பொட்டாசியம், நிலக்கரி, பெட்ரோலியம்


சில முக்கிய கனிமங்கள்

இரும்புத் தாது


  • இரும்பு நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படுகிறது
  • உலகின் மொத்த இரும்புத்தாது இருப்பில் 20% இரும்புத்தாது இந்தியாவில் அமைந்துள்ளது
  • இந்தியாவில் சட்டீஸ்கர் மாநிலத்தில் துர்க் பகுதியும், ஜார்க்கண்டிலுள்ள சிங்பும் மாவட்டம் ,ஒடிசாவில் உள்ள சுந்தர்கார்க்,மாயூர்பஞ்ச்,கியோன்ஜார் மாவட்டங்களிலும், கோவா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளிலும் காணப்படுகிறது



மாங்கனீஸ்


  • கடினமான துருப்பிடிக்காத இரும்பு எஃகினை தயாரிக்க மாங்கனீஸ் தேவையாக இருப்பதால் இரும்பு எஃகு தொழிற்சாலைகளில் மாங்கனீஸ் முக்கிய பங்காற்றுகிறது
  • உலர் மின்கலன்கள் தயாரிக்க மாங்கனீசு-டை- ஆக்சைடு பயன்படுகிறது
  • பிளீச்சிங் தூள் மற்றும் வண்ணப் பூச்சுகள் தயாரிக்க பயன்படுகிறது
  • மத்தியப்பிரதேசத்தில் உள்ள பாலக்காட்டிலும் ,ஒடிசாவில் கியோஞ்சார்,போனைகார்க் பகுதிகளிலும், கர்நாடகத்தில் பெல்லாரி ,சித்ரதுர்க்கா சிமோகாவிலும், தமிழ்நாடு மகாராஷ்டிரா, குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் கிடைக்கின்றன


பாக்சைட்


  • பாக்சைட் அலுமினியத்தின் தாது ஆகும்
  • அலுமினியம் சிலிகேட் நிறைந்த பாறைகள் சிதைவுறுவதால் உருவாகும் இலேசான உலோகமே அலுமினியம் ஆகும்
  • இது ஒரு நல்ல எளிதில் கடத்தியாகவும், மிக வளையும் தன்மை கொண்டதாகவும்,மிக இலேசாக இருப்பதாலும் அதிக அளவில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுகின்றன
  • சட்டீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி, மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி, ராய்கர், ஒடிசா மாநிலத்தில் சம்பல்பூர் ,காலகந்தி மற்றும் கோவா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாட்டில் சேலம், மதுரை, நீலகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும்


தாமிரம்


  • சிறந்த வெப்பக் கடத்தியாகவும், மின்கடத்தி யாகவும் உள்ளது
  • மின்கருவிகள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் முக்கிய பங்காற்றுகிறது
  • தாமிரம் மற்ற உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகம் செய்யப் பயன்படுகிறது
  • ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிங்பும், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள குண்டூர், நெல்லூர், மத்தியப்பிரதேசத்தில் உள்ள பாலக்காட், ராஜஸ்தான், கர்நாடகா மாநிலங்களில் சில பகுதிகளிலும் தாமிரம் கிடைக்கிறது


மைக்கா


  • மைக்கா மின்சாரத்தை கடத்தாத பொருளாக இருப்பதால் மின்பொருட்கள் உற்பத்திக்கு பயன்படுகிறது
  • உலகில் மைக்கா உற்பத்தியில் இந்தியா 60% பங்களிக்கிறது
  • ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மைக்கா உற்பத்தி செய்கின்றன


எரிசக்தி வளங்கள்


  • நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சூரிய சக்தி, காற்று சக்தி போன்றவை சில எரிசக்தி வளங்களாகும்
  • எரிசக்தி வளங்களை இரண்டாகப் பிரிக்கலாம்

      i)புதுப்பிக்கத்தக்க வளங்கள்
      ii)புதுப்பிக்க இயலாத வளங்கள்

i)புதுப்பிக்கத்தக்க வளங்கள்

சூரிய சக்தி


  • இந்தியா அயன மண்டலத்தில் அமைந்திருப்பதால் அதிகமான சூரிய சக்தியைப் பெறுகின்றது
  • சூரிய ஒளியை நேரடியாக மின்சக்தியாக போட்டோவோல்டாயிக் தொழில்நுட்பம் மூலம் மாற்ற முடியும். இம்முறையின் மூலம் 20 மெகாவாட் சூரிய சக்தியை ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குள்  உற்பத்தி செய்ய முடியும்
  • பெரிய அளவில் சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றும் மையம் குஜராத்திலுள்ள பூஜ் அருகே மாதாபுரியில் அமைந்துள்ளது


காற்று சக்தி


  • காற்று சக்தி காற்றின் திசைவேகம் 30 நாட்களுக்கு மேல் இருந்தால் தான் உற்பத்தி செய்ய இயலும்
  • தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும், இலட்சத்தீவிலும் காற்றுசக்தி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன


உயிரி சக்தி


  • புதர்கள், பயிர்களிலிருந்து பெறும் கழிவு ,மனிதன் மற்றும் விலங்குகளின் கழிவு போன்றவற்றைப் பயன்படுத்தி உயிரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது


ஓத சக்தி


  • இந்தியா 8000 முதல் 9,000 மெகாவாட் ஓத சக்தி திறனைக் கொண்டுள்ளது
  • காம்பே வளைகுடா 7000 மெகாவாட், கட்ச் வளைகுடா 1000 மெகாவாட், சுந்தரவனப் பகுதிகளில் 100 மெகாவாட் ஓத சக்தியை உற்பத்தி செய்ய முடியும்


அலை சக்தி


  • இந்தியா 40,000 மெகாவாட் அலை சக்தி திறன் கொண்டது
  • திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞ்ஞம் என்ற இடத்தில் 150 மெகாவாட் அலை சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது


ii)புதுப்பிக்க இயலாத எரிசக்தி வளங்கள்

நிலக்கரி


  • நிலக்கரி கருப்புத் தங்கம் என அழைக்கப்படுகிறது
  • இரும்பு எஃகு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது
  • நிலக்கரியின் தரம் மற்றும் கார்பன் அளவின் அடிப்படையில் பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது .அவை ஆந்தரசைட்,பிட்டுமினஸ்,லிக்னைட், மரக்கரி
  • மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரி ஜார்க்கண்ட் ,மத்தியப் பிரதேசம் சட்டீஸ்கர் ஒடிசாவில் உற்பத்தியாகிறது
  • மீதமுள்ள ஒரு பங்கு நிலக்கரி ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம், உத்திரப் பிரதேசத்திலிருந்து கிடைக்கிறது
  • தமிழ்நாட்டில் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி(லிக்னைட்)  கிடைக்கிறது


பெட்ரோலியம்


  • கனிம எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது
  • படிவு பாறைகளிலிருந்து பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது
  • 63% மும்பை ஹையிலிருந்தும், 18% குஜராத்திலிருந்தும், 16 சதவீதம் அஸ்ஸாமிலிருந்தும், 3% அருணாச்சல பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து கிடைக்கிறது


இயற்கை எரிவாயு


  • இது புவியின் மேற்பரப்பில் தனியாகவோ அல்லது பெட்ரோலியத்துடன் சேர்ந்தோ
  • காணப்படுகிறது
  • ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம், அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் இயற்கை எரிவாயு காணப்படுகிறது


மின்சக்தி


  • மின்சக்தி மூன்று வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது

      1.அனல் மின்சக்தி
      2.நீர் மின்சக்தி
      3.அணுமின்சக்தி

1.அனல் மின்சக்தி


  • நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது
  • பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்கள் அனல் மின் சக்தியை உற்பத்தி செய்கின்றன


2.நீர்மின்சக்தி


  • இந்தியாவின் முதல் நீர்மின்நிலையம் 1897-ம் ஆண்டு டார்ஜிலிங்கில் நிறுவப்பட்டது. மற்றொரு நிலையம்  1902-ம் ஆண்டு காவேரி ஆற்றில் உள்ள சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியில் நிறுவப்பட்டது
  • இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது


3.அணு மின்சக்தி


  • யுரேனியம் மற்றும் தோரியம் கனிமத்திலிருந்து அணுமின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது
  • இக்கனிமங்கள் ஜார்க்கண்ட் மற்றும் ஆரவல்லி மலைத் தொடர்களில் ராஜஸ்தானிலிருந்து எடுக்கப்படுகிறது
  • கேரள கடற்கரையின் மண்ணில் உள்ள மோனசைட்டிலிருந்து யுரேனியம் பெறப்படுகிறது
  • தாராபூர்(மகாராஷ்டிரா), கல்பாக்கம், கூடங்குளம்(தமிழ்நாடு), ராவத்பட்டா, கோட்டா(ராஜஸ்தான்), நரோரா (உத்திரபிரதேசம்), காக்ரபரா(குஜராத் ), கைக்கா(கர்நாடகா) ஆகிய இடங்களில் அணுமின்சக்தி நிலையங்கள் உள்ளன



Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...