Water Resources
நீர்வளம்
நீர்வளம்
- புவியின் மேற்பரப்பில் 97% நீர் கடலாகவும்,3% நீர் பனிப்பாறைகளாகவும், பனி முகடுகளாகவும், ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களாகவும், நிலத்தடி நீராகவும், காற்றில் நீராவியாகவும் உள்ளது
- ஆயிரம் ஏரிகளின் நிலம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு 1,87,888 ஏரிகள் காணப்படுகின்றன
- வட அரைக்கோளம் 61% நிலப்பரப்பையும்,தென் அரைக்கோளம் 81% நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது
- வட அரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன
- கடலின் அடியில் பல்வேறு நிலத்தோற்றங்கள் காணப்படுகின்றன. அவை
- கண்டத் திட்டு
- கண்டச் சரிவு
- கண்ட உயர்ச்சி
- கடலடி சமவெளிகள் அல்லது அபிசல் சமவெளி
- கடல் பள்ளம் அல்லது அகழிகள்
- கடலடி மலைத் தொடர்கள்
1.கண்டத் திட்டு
- நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படும்
- கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கிறது. இது கடற்புழுக்கள், கடற்பாசி, பிளாங்டன் போன்றவை வளர்வதற்கு சாதகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களுள் ஒன்றாக உள்ளது
- கண்டத் திட்டுகள் மிக அதிக அளவு கனிமங்களையும், எரிசக்தி கனிமங்களையும் கொண்டுள்ளது
- ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எண்ணெய் எடுப்பதற்கும், சுரங்க நடவடிக்கைகள் மேற் கொள்வதற்கும் சிறந்த இடமாக உள்ளது
- இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வுகளையும், உற்பத்தியையும் மேற்கொண்டு வரும் மிகப் பெரிய நிறுவனம் ஓ.என்.ஜி.சி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆகும்
2.கண்டச் சரிவு
- கண்டத்தட்டின் விளிம்பிலிருந்து வன்சரிவுடன் ஆழ்கடலை நோக்கி சரிந்து காணப்படும் பகுதி கண்டச் சரிவு ஆகும்
- இதை கண்ட மேலோட்டிற்கும், கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகின்றது
- கடலடி பள்ளத்தாக்குகள், அகழிகள் காணப்படுகின்றன
3.கண்ட உயர்ச்சி
- கண்டச் சரிவிற்கும், கடலடி சமவெளிக்கும் இடையில் காணப்படும் நிலத்தோற்றம் கண்ட உயர்ச்சி எனப்படும்
4.அபிசல் சமவெளி
- இது ஆழ் கடலில் காணப்படும கடலடி சமவெளி ஆகும்
- அபிசல் குன்றுகள், கடல் குன்றுகள், கடல்மட்ட குன்றுகள், பவளப்பாறைகள், வட்டப்பவளத்திட்டுகள் காணப்படுகின்றன
5.அகழிகள்
- பெருங்கடலின் மிக ஆழமான பகுதி அகழி ஆகும்
- நில அதிர்வுகளின் நிலநடுக்க மேல் மையப்புள்ளி இங்கு காணப்படுகிறது
- கடலின் அடியில் காணப்படும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கடலடி மலைத் தொடர்கள் எனப்படும்
- இவை இளம் பசால்ட் பாறைகளால் ஆனது
- எடுத்துக்காட்டு மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர்,கிழக்கு பசிபிக் மலைத்தொடர்
பெருங்கடலின் வெப்பநிலை
- நிலநடுக்கோட்டுப் பகுதியில் கடலின் ஆண்டு சராசரி வெப்பநிலை 21° செல்ஷியஸ் ஆக இருக்கும்
- துருவப் பகுதியில் உறைவெப்பநிலைக்கும் குறைவாகவே இருக்கும்
- உவர்ப்பியத்தின் அளவு வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாகவும்,நிலநடுக்கோடு மற்றும் துருவப் பகுதிகளில் குறைவாகவும் உள்ளது
i)அலைகள்
i)அலைகள்
- காற்று கடலின் மேற்பரப்பில் வீசும்போது சிற்றலைகள் உருவாகின்றன
- காற்றின் வேகம், அது நீடிக்கும் காலம் மற்றும் அதன் திசையைப் பொறுத்து அலைகளின் உயரம் அமைகின்றது
- நில அதிர்வுகளாலும் அலைகள் உருவாகின்றன
- அலை நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறிஉருளை(hydroturbines) கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது
- இந்தியாவில் கேரளக்கடற்கரையில் உள்ள விழிஞ்ஞம் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் அலை ஆற்றல் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன
ii)ஓதங்கள்
- சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல் நீர் உயர்ந்து தாழ்வது ஓதங்கள் எனப்படும்
ii)தாழ் ஓதங்கள்
- பூமி சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையானது கடலின் மேற்பரப்பு அலைகளை வலுவடையச் செய்து உயர் அலைகளை ஏற்படுத்துகின்றன. இவை உயர் ஓதங்கள் எனப்படும்
- இவை அமாவாசை,பௌர்ணமி தினங்களில் ஏற்படும்
- பூமி சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்து கோணத்தில் வரும்போது இவற்றின் ஈர்ப்பு விசை ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதால் உயரம் குறைவான அலைகள் ஏற்படுகின்றன. இவை தாழ் ஓதங்கள் எனப்படும்
- இரண்டு உயர் ஓதங்களுக்கு இடையே தாழ் ஓதங்கள் ஏற்படுகின்றன
iii)கடல் நீரோட்டங்கள்
- பெருங்கடல்களின் மேற்பரப்பிலும் அதன் அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்று அழைக்கிறோம்
- வட அரைக்கோளத்தில் கடிகார திசையிலும், தென் அரைக்கோளத்தில் எதிர் கடிகார திசையிலும் நகருகின்றன
- கடல் நீரோட்டங்களை உருவாக்கும் காரணிகள்
- புவியின் சுழற்சி
- வீசும் காற்று
- கடல் நீரின் வெப்பம் மற்றும் உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு
கடல் வளங்கள்
1.உயிரியல் வளங்கள்
- எடுத்துக்காட்டு மீன்கள்,பிளாங்டன்,கடற்புற்கள், பவளப்பாறைகள்
2.கனிம வளங்கள்
- எடுத்துக்காட்டு பெட்ரோலியம்,இயற்கை எரிவாயு, உலோகத் தாதுக்கள்,மணல், சரளைக் கற்கள்
3.ஆற்றல் வளங்கள்
- எடுத்துக்காட்டு எரிசக்தி கனிமங்கள்,ஓதஆற்றல், அலை ஆற்றல்
Comments
Post a Comment