Skip to main content

6 - ம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்



6 - ம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்


  • திண்ம, திரவ மற்றும் வாயு நிலைகளைத் தவிர மேலும் இரண்டு நிலைகள் உள்ளன. அவை பிளாஸ்மா மற்றும் போஸ் - ஐன்ஸ்டீன் சுருக்கம் ஆகும்
  • பிளாஸ்மா நிலை என்பது பூமியில் உள்ள பருப்பொருளின் பொதுவான நிலை அல்ல. ஆனால், அது அண்டத்தில் கூடுதலாகக் காணப்படும் ஒரு பொதுவான நிலையாகும். எடுத்துக்காட்டாக சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு பிளாஸ்மா நிலை ஆகும்
  • போஸ் - ஐன்ஸ்டீன் சுருக்கம் என்பது மிகக் குறைவான தட்பவெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை ஆகும். இது 1925 ல் கணிக்கப்பட்டு 1995 ல் உறுதி செய்யப்பட்டது.  இவ்வகை கடுங்குளிர் முறையில் எந்திரங்களில் பயன்படுகிறது


பருப்பொருளின் இயற்பியல் தன்மை

  • நிறையுள்ள மற்றும் இடத்தை அடைத்துக் கொள்பவை பருப்பொருள் ஆகும்
  • எல்லாப் பருப்பொருளும் மிகச்சிறிய துகள்களால் ஆனவை
  • பருப்பொருளில் உள்ள இத்தகைய மிகச் சிறிய துகள்கள் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் என அழைக்கப்படுகிறது


பருப்பொருளின் சிறப்புப் பண்புகள்

  • பருப்பொருளின் துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளது. இது வெவ்வேறு பருப்பொருளுக்கு வெவ்வேறாக இருக்கும்


பருப்பொருள்களை வகைப்படுத்தல்

  • இயற்பியல் நிலை அடிப்படையில் பருப்பொருள்களை திண்மம், திரவம், வாயு என மூன்று வகையாகப் பிரிக்கலாம்

  • திண்ம, திரவ மற்றும் வாயுக்களின் நிறை, வடிவம் மற்றும் பருமன்
  • செங்கல் மற்றும் கதவு போன்ற வலுவானவை திண்மங்களாகும்
  • பாயும் தன்மையுள்ளவை திரவங்கள் ஆகும்
  • எளிதில் பாயும் தன்மையுள்ள பொருட்கள் வாயுக்கள் ஆகும்



விரவுதல்


  • விரவுதல் என்பது கிடைக்கும் இடத்தை நிரப்பப் பரவும் துகள்களின் தன்மை ஆகும்.



தூய பொருட்கள்

  • ஒரு தூய பொருள் என்பது ஒரே தன்மையான துகள்களால் மட்டுமே ஆனது
  • தூய பொருள்கள் தனிமங்களாகவோ அல்லது சேர்மங்களாகவோ இருக்கலாம்
  • ஒரு தனிமம் என்பது சிறிய துகள்களாலான அணுக்களால் ஆனது. ஒரு மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் சேர்க்கையாகும். ஒரு சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் இணையும் வேதியியல் சேர்க்கையாகும்

  • தங்கத்தின் தூய்மை காரட் என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. 24 காரட் தங்கம் என்பது தூய நிலையில் உள்ள தங்கமாகக் கருதப்படுகிறது



கலவைகள்


  • ஒரு கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையான துகள்களைக் கொண்ட தூய்மையற்ற பொருளாகும்
  • கலவையின் பகுதிப் பொருட்கள் எந்த விகிதத்திலும் கலக்கப்பட்டு இருக்கும்



  • கலவைகள் உருவாவது என்பது பின்வரும் இயற்பியல் சேர்க்கை
  • இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்களை இணைத்தல்
  • எடுத்துக்காட்டு: 22 காரட் தங்கத்தில் உள்ள தங்கம் மற்றும் தாமிரம், தங்கம் மற்றும் காட்மியம் கலவைகள்
  • இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சேர்மங்களை இணைத்தல்
  • எடுத்துக்காட்டு: சோடாவில் உள்ள நீர், கார்பன் டை ஆக்சைடு, நிறமூட்டி, இனிப்பு
  • ஒரு தனிமம் மற்றும் ஒரு சேர்மத்தினை இணைத்தல், அயோடின் டிஞ்சரில் காணப்படும் ஆல்கஹாலில் உள்ள அயோடின்


பொருட்களைப் பிரித்தல்

  • ஒரு கலவையிலிருந்து அவற்றின் பல பகுதிப் பொருட்களைத் தனித்தனியே பிரித்து எடுக்கும் முறைக்கு பிரித்தெடுத்தல் என்று பெயர்


கலவைகளை பிரிப்பதன் அவசியம்


  • கலவைகளில் உள்ள மாசுக்களையும், தீங்குவிளைவிக்கும் பகுதி பொருள்களையும் நீக்குதல்
  • எடுத்துக்காட்டு: அரிசியில் உள்ள கற்களை நீக்குதல்
  • பயனளிக்கும் ஒரு பகுதிப் பொருளினை அதன் மற்ற பகுதிப் பொருட்களிலிருந்து தனித்தெடுத்தல்
  • எடுத்துக்காட்டு: பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோல் பெறுதல்
  • ஒரு பொருளை மிகுந்த தூய நிலையில் பெறுதல்
  • எடுத்துக்காட்டு: தங்கச் சுரங்கத்தில் இருந்து தங்கம் பெறுதல்


சலித்தல்

  • வெவ்வேறு அளவுடைய திடப்பொருள்களை பிரித்தெடுக்கும் முறைக்கு சலித்தல் என்று பெயர்
  • எடுத்துக்காட்டு: மாவிலிருந்து தவிடு நீக்குதல், மணலிலிருந்து சரளைக் கல்லை நீக்குதல்



கடைதல்

  • மிகச்சிறிய அளவிலான கரையாத திடப்பொருள்களை திரவத்தில் இருந்து பிரித்தெடுக்க கடைதல் முறை பயன்படுகிறது
  • எடுத்துக்காட்டு: தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்தல்


பிற முறைகள்

  • தூற்றுதல்
  • கைகளால் தெரிந்தெடுத்தல்
  • காந்தப் பிரிப்பு முறை
  • தெளிய வைத்து இறுத்தல்
  • வடிகட்டுதல்



உணவுக் கலப்படம்

  • உணவுப் பொருட்களில் தேவையற்ற பொருட்களோ அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களோ காணப்படுவது உணவுக் கலப்படம் எனப்படும்













Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...