Skip to main content

7 - ம் வகுப்பு அறிவியல் - பருப்பொருள்கள் மற்றும் அதன் தன்மைகள்



பருப்பொருள்கள் மற்றும் அதன் தன்மைகள்


இயற்பியல் மாற்றங்கள்

  • ஒரு பருப்பொருளின் இயற்பியல் பண்புகளான வடிவம், அளவு, நிறம் ஆகியவற்றில் மட்டும் மாற்றம் நிகழ்வது இயற்பியல் மாற்றம் எனப்படும்
  • திண்மப் பொருளை வெப்பப்படுத்தும் போது திரவமாக மாறாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது பதங்கமாதல் எனப்படும்
  • திண்மப் பொருளை வெப்பப்படுத்தும் போது திரவமாக மாறுவது உருகுதல் எனப்படும்
  • எடுத்துக்காட்டு
  • பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் போது நீராக மாறுவது
  • நீரைத் தொடர்ந்து வெப்பப்படுத்தும் போது நீர் கொதித்து நீராவியாக மாறுவது ஆவியாதல் எனப்படும்
  • நீராவியை குளிரச் செய்தால் அது மீண்டும் நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும்
  • நீரை மீண்டும் குளிர்விக்கும் போது பனிக்கட்டியாக மாறுவது உறைதல் எனப்படும்

வேதி மாற்றங்கள்

  • வினைபடு பொருள்கள் வினைபுரிந்து ஒன்றுக்கு மேற்பட்ட வினை விளைப் பொருட்களைத் தருவது வேதி மாற்றம் எனப்படும்
  • வேதி மாற்றங்கள் நடைபெறும் பொழுது, வெப்பத்தையும் ஒளியையும் வெளிவிடும் அல்லது உள்ளிழுக்கும்
  • ஒலியை உண்டாக்கும்
  • நிறம் மாறும்
  • மணம் மாறும்
  • காய்கறிகள் மற்றும் பழங்களின் மணம், நிறம், சுவை ஆகியவற்றிற்கு அவற்றில் உள்ள ஃபினாலிக் சேர்மங்களே காரணமாகும்.ஃபினா லிக் சேர்மங்கள் இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களையும் தடுக்கிறது
  • காய் மற்றும் பழங்களில் உள்ள ஃபினாலிக் சேர்மம் என்ற வேதிப்பொருள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து மெலானின் என்ற பழுப்பு நிறப் பொருளாக மாறுகிறது
அமிலங்கள்

  • அமிலங்கள் இருவகைப்படும்
1. கரிம அமிலங்கள்
2. கனிம அமிலங்கள்
1.கரிம அமிலங்கள்

  • தாவரங்களிலிருந்தும், விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் எனப்படும்
  • ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது
  • தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது
  • குளிர்பானங்களில் கார்போனிக் அமிலம் உள்ளது
  • ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது
  • உணவு செரிப்பதற்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் இரைப்பையில் சுரக்கப்படுகிறது
2.கனிம அமிலங்கள்

  • தாதுப் பொருட்களில் இருந்து பெறப்படும் அமிலம் கனிம அமிலம் எனப்படும்
  • எடுத்துக்காட்டு
  • ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCl),கந்தக அமிலம் (H2SO4),நைட்ரிக் அமிலம்,(HNO3)
  • மனித உடலில் உள்ள செல்களில் (DNA) டி ஆக்ஸி ரிபோ நியூக்ளிக் அமிலம் உள்ளது
  • இது செல்களின் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது
  • எடுத்துக்காட்டு
  • இந்த செல்கள் மனிதனின் உடலமைப்பு மற்றும் உயரத்திற்கு காரணமாக அமைகிறது புரதங்கள் உடல் கட்டமைப்புக்கு உதவுகிறது புரதத்தில் அமினோ அமிலங்கள் உள்ளது கொழுப்பில் கொழுப்பு அமிலம் உள்ளது
  • ஹைட்ராஞ்ஜியா மேக்ரோபைலா செடி  அமிலத் தன்மையுள்ள மண்ணில் வளரும் போது நீல நிறத்திலும், காரத் தன்மையுள்ள மண்ணில் வளரும் போது ஊதா நிறத்திலும், நடுநிலைத் தன்மையுள்ள மண்ணில் வளரும் போது வெள்ளை நிறத்திலும் பூக்கும்

அமிலங்களின் பண்புகள்

  • புளிப்புச் சுவை உடையவை
  • அரிக்கும் தன்மை உடையவை
  • பொதுவாக எல்லா அமிலங்களிலும் ஹைட்ரஜன் காணப்படும். இருப்பினும் ஹைட்ரஜன் உள்ள அனைத்துச் சேர்மங்களும் அமிலங்கள் அல்ல. எடுத்துக்காட்டு மீத்தேன்(CH4), அம்மோனியா(NH3), குளுக்கோஸ்(C6H12O6)
  • அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகின்றன
  • உலோகம் + அமிலம —> உப்பு + ஹைட்ரஜன்
  • அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றும்
  • அமிலங்கள் ஃபினாப்தலின் நிறங்காட்டியுடன் எந்தவித நிறமும் தருவதில்லை
  • அமிலங்கள் மெத்தில் ஆரஞ்சு நிறங்காட்டியுடன் சிவப்பு நிறம் தருகின்றன
  • அமிலங்கள் மின்சாரத்தை கடத்தக் கூடியவை

அமிலங்களின் பயன்கள்
கனிம அமிலங்களின் பயன்கள்

  • வேதியியல் ஆய்வு கூடங்களில் பயன்படுகின்றன
  • சாயம், மருந்து, உரம், வெடிபொருள் மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது
  • உலோகங்களைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பதற்கும் மற்றும் எலும்புகளிலிருந்து பிசினைப் பிரிப்பதற்கும் பயன்படுகிறது
  • அமிலங்கள், கரியமில வாயு, ஹைட்ரஜன் சல்ஃபைடு, ஹைட்ரஜன், சல்ஃபர் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றன
  • பெட்ரோலியம் சுத்திகரிப்பதற்கு பயன்படுகிறது
கரிம அமிலங்களின் பயன்கள்
  • உணவைப் பதப்படுத்த பயன்படுகிறது
  • வைட்டமின் C தயாரிக்க பயன்படுகிறது
  • சமையல் சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
  • உணவு மற்றும் குளிர்பானங்களின் சுவையைக் கூட்ட பயன்படுகிறது

காரங்கள்

  • உலோக ஆக்சைடு மற்றும் ஹைட்ராக்சைடு சேர்மங்கள் காரங்கள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு
  • சோடியம் ஹைட்ராக்சைடு (எரிசோடா), பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (எரி பொட்டாசு)
  • காரங்கள் நீருடன் சேரும்போது ஹைட்ராக்சைடு அயனியைத் தருகிறது
  • நீரில் கரையும் காரங்கள் அல்கலிஸ் எனப்படும்
  • சுட்ட சுண்ணாம்பு - இதன் வேறு பெயர் கால்சியம் ஆக்சைடு
  • பொட்டாசியம் ஹைட்ராக்சைடு - இதன் வேறு பெயர் காஸ்டிக் பொட்டாஷ்
  • கால்சியம் ஹைட்ராக்ஸைடு - இதன் வேறு பெயர் நீற்றுச் சுண்ணாம்பு
  • சோடியம் ஹைட்ராக்சைடு - இதன் வேறு பெயர் காஸ்டிக் சோடா
  • மெக்னீசியம் ஹைட்ராக்சைடு - இதன் வேறு பெயர் மெக்னீசியம் பால்மம்
  • இயற்கையில் காணப்படும் நிறங்காட்டிகள்
  • லிட்மஸ் - ஓர் இயற்கைச் சாயம்
  • இது லைக்கன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது
  • நீரில் இதன் நிறம் ஊதாவாக இருக்கும் அமிலத்தில் சேர்க்கும்போது இதன் நிறம் சிவப்பாக மாறும்
  • காரங்கள் லிட்மஸ் தாளை நீல நிறமாக மாறுகின்றன

காரங்களின் பண்புகள்

  • கசப்பு சுவை உடையவை
  • வலிமை மிக்க காரங்கள் அரிக்கும் தன்மை வாய்ந்தது
  • இவை சிறந்த மின் கடத்திகள்
  • சோப்பு மற்றும் எண்ணெய் போன்று தொடுவதற்கு வழவழப்பாக இருக்கும்
  • சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும்
  • ஹைட்ராக்சில் தொகுதியை உடையவை
  காரங்களின் பயன்கள்

  • வேதியியல் ஆய்வகங்களில் பயன்படுகிறது
  • சோப்பு, துணி மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது
  • பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுகிறது
  • காகிதம், மருந்து தயாரிப்பதற்கு பயன்படுகிறது
  • ஆடைகளில் படிந்துள்ள கறை,எண்ணெய் பிசுக்குகளை அகற்றப் பயன்படுகிறது

நடுநிலையாக்கல்

  • காரத் தன்மை வாய்ந்த கரைசலை அமிலத்தன்மை கொண்ட கரைசலுடன் சேர்க்கும்போது நடுநிலையாக்கல் வினை நடைபெறுகிறது
  • கந்தக அமிலம் வேதிப்பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் பல்வேறு வேதிப் பொருட்களை தயாரிக்க கந்தக அமிலம் அடிப்படை மூலப் பொருள் ஆகும்
  • உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் (HFSO3)ஆகும்

செரிமானமின்மை

  • நமது வயிற்றில் உணவை செரிப்பதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது
  • அதிக அமிலம் சுரந்தால் செரிமானமின்மையை ஏற்படுத்தும்
  • செரிமானமின்மையை சரிசெய்ய மெக்னீசியா பால்மம் பயன்படுத்தப்படுகிறது

எறும்பு கடித்தல்

  • எறும்பு கடிக்கும் போது பார்மிக் அமிலத்தை தோலினுள் செலுத்துகிறது
  • கடிவாயில் துத்தநாக கார்பனேட் (காலமைன்) கொண்டு தேய்ப்பதன் மூலம் தோலினுள் செலுத்தப்பட்ட அமிலம் நடுநிலையாக்கப்படுகிறது

தொழிற்சாலை கழிவுகள்

  • சில தொழிற்சாலைக் கழிவுகளில் அமிலங்கள் உள்ளது. இவை ஆறு,கடல்களில் கலக்கும் போது மீன் மற்றும் அவற்றில் வாழும் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன
  • எனவே இவ்வகைக் கழிவுகள் காரங்களை வைத்து நடுநிலையாக்கப்படுகின்றன

மண்ணை செம்மைப்படுத்துதல்

  • விவசாய நிலங்களில் அதிகமான உரங்கள் பயன்படுத்துவதால் மண் அமிலத்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது. எனவே இந்த மண் காரத்தை பயன்படுத்தி நடுநிலையாக்கப்படுகிறது
  • மண் காரத் தன்மை உடையதாக இருந்தால் கரிம பொருட்களில் உள்ள அமிலத்தால் மண்ணின் காரத்தன்மை நடுநிலையாக்கப்படுகிறது

உப்பு

  • ஒரு அமிலமும், காரமும் நடுநிலையாக்கல் வினையில் ஈடுபடும் போது உருவாகும் அயனிச் சேர்மங்கள் உப்பு எனப்படும்

சோடியம் ஹைட்ராக்சைடு + ஹைட்ரோக்ளோரிக் அமிலம் —>  சோடியம் குளோரைடு + நீர் + வெப்பம்
உப்பின் பயன்கள்

  • கால்சியம் பாஸ்பேட், கால்சியம் லாக்டேட், ஃபெரஸ் சல்பேட், சோடியம் குளோரைடு ஆகியவை மனித உடல் சீராக இயங்க பயன்படுகிறது
  • சோடியம் குளோரைடு உணவைக் கெடாமல் பாதுகாக்கவும், சுவையைக் கூட்டவும் பயன்படுகிறது
  • சோடியம் பை கார்பனேட் குளிர்பானம், ரொட்டி தயாரிப்பில் பயன்படுகிறது
  • நீரேற்றப்பட்ட பொட்டாசியம் அலுமினியம் சல்பேட் தண்ணீரைத் தூய்மைப்படுத்த பயன்படுகிறது
  • சோடியம் கார்பனேட் சலவை சோடா தயாரிக்கப் பயன்படுகிறது
  • காப்பர் சல்ஃபேட் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுகிறது
  • பொட்டாசியம் நைட்ரேட் வெடி மருந்து தயாரிக்க பயன்படுகிறது









Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...