Skip to main content

இயற்பியல் - அண்டம்



             Nature of Universe
             இயற்பியல் - அண்டம்
  • கிரேக்க வானியலாளர் தாலமி (இரண்டாம் நூற்றாண்டு) மற்றும் இந்திய வானியலாளர் ஆரியபட்டர் (இரண்டாம் நூற்றாண்டு) உள்ளிட்ட பல வானியலாளர்களும் அண்டத்தில் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் பூமியே மையமாக உள்ளது என்று கருதினர்
  • போலந்து நாட்டைச் சேர்ந்த வானியலாளர் நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் சூரிய மண்டலத்தின் மையத்தில் சூரியன் அமைந்துள்ளது என்று கண்டறிந்தார்
  • 1608 - ம் ஆண்டு நெதர்லாந்தில் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டது


1.அண்டத்தின் கட்டுறுப்புகள்
  • புவி, கோள்கள், விண்மீன்கள், வான்வெளி மற்றும் விண்மீன் திரள்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பு அண்டம் எனப்படும்
  • அண்டம் 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் அளவு கொண்டது
  • 1 ஒளி ஆண்டு = 9.4607×1012கிலோமீட்டர்

அண்டத்தின் வயது
  • ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரு வெடிப்பு ஏற்பட்டு, விண்மீன் திரள்களின் வடிவில் அனைத்துப் பொருள்களும், அனைத்து திசைகளிலும் வெடித்துச் சிதறின
  • அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பெரு வெடிப்பின்போது தோன்றிய அடிப்படை தனிமங்களான ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றால் ஆனது
  • நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன், நம் உடலில் உள்ள கார்பன், கால்சியம், இரும்பு மற்றும் கணிணிச் சில்லுகளில்(chip) பயன்படும் சிலிக்கான் உள்ளிட்ட ஏனைய தனிமங்கள் அனைத்தும் விண்மீன்களின் உள்ளடக்கத்தில் உள்ளன
  • இந்த விண்மீன்கள் வெடித்துச் சிதறும் போது அவற்றின் உள்ளே இருக்கும் தனிமங்கள் வெளியிடப்படுகின்றன


விண்மீன் திரள்கள்
  • வாயு,தூசு, கோடிக்கணக்கான விண்மீன்கள் மற்றும் அவற்றில் உள்ள சூரிய மண்டலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய திரண்டதொரு அமைப்பு விண்மீன்திரள் எனப்படும்
  • அண்டத்தில் சுமார் 100 பில்லியன் விண்மீன் திரள்கள் உள்ளன
  • அண்டத்தின் அளவானது, 100 மில்லியன் முதல் 100 டிரில்லியன் வரையிலான விண்மீன்களைக் கொண்ட அளவை உடையது
  • சூரியன் மற்றும் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் பால்வெளி வீதி விண்மீன் திரளில் உள்ளன
  • வானில் ஒரு பால்வண்ணப் பட்டை போன்று காணப்படுவதால் பால்வெளி வீதி என அழைக்கப்படுகிறது
  • பால்வெளி வீதியில் சுமார் 100 பில்லியன் விண்மீன்கள் உள்ளன
  • பால்வெளி வீதியின் விட்டம் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும்
  • பால்வெளி வீதியின் மையத்தில் இருந்து சுமார் 25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரிய மண்டலம் உள்ளது
  • பால்வெளி வீதியைத் தவிர பல விண்மீன் திரள்களும் உள்ளன
  • நமக்கு அருகில் உள்ள விண்மீன் திரளின் பெயர் அண்டிரோமீடா விண்மீன் திரள் ஆகும்.இதன் தொலைவு 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள்
  • பால்வெளி வீதி விண்மீன்திரள் சுருள் வடிவைக் கொண்டது
  • சூரியன், விண்மீன் திரளின் மையத்தைச் சுற்றி வர 250 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது
  • பூமி இயங்கும் வேகம் 30 கிலோமீட்டர்/ வினாடி


விண்மீன்கள்
  • வெப்பம், ஒளி, புற ஊதாக் கதிர்கள், X- கதிர்கள் உள்ளிட்ட பல கதிர்வீச்சுகளை விண்மீன்கள் உருவாக்குகின்றன.அவை வாயு மற்றும் பிளாஸ்மா (அதிக சூடேற்றப்பட்ட பருப்பொருள் நிலை) ஆகியவற்றை அதிகமாக உள்ளடக்கியவை ஆகும்
  • விண்மீன்கள் அனைத்தும் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பியுள்ளன
  • ஹைட்ரஜன் அணுக்கள் யாவும் இணைந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும் போது மிக அதிக அளவில் வெப்பம் வெளியாகின்றது
  • ஒரு இருண்ட இரவில் சுமார் 3000 விண்மீன்கள் நமது கண்களால் காணமுடியும்
  • வெப்பமான விண்மீன்கள் வெண்மையாகவோ அல்லது நீளமாகவோ தோன்றும்
  • குளிர்வான விண்மீன்கள் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறமாகத் தோன்றும்


2.சூரிய மண்டலம்
  • சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் வான்பொருள்கள் (கோள்கள்,வால் விண்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள்) அனைத்தும் சேர்ந்ததே சூரிய மண்டலம் ஆகும்


சூரியன்
  • இலத்தீன் மொழியில் ஸோல்(sol) என்றும், கிரேக்க மொழியில் ஹீலியோஸ் (Helios) என்றும் அழைக்கப்படுகிறது
  • சூரியனின் விட்டம் ஏறத்தாழ 1,392,000 கிலோமீட்டர் (ஒரு மில்லியன் 392 ஆயிரம் கிலோமீட்டர்)
  • பூமியைப்போல 1.3 மில்லியன் மடங்கு பருமன் உள்ளது
  • பூமியில் இருந்து ஏறத்தாழ 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
  • சூரியனின் ஈர்ப்பு விசை பூமியை போல் 28 மடங்கு அதிகமாகும்
  • புறப் பரப்பு வெப்பநிலை: 5500° செல்சியஸ் முதல் 6000° செல்சியஸ் வரை
  • உள்ளக வெப்பநிலை: 1.5 மில்லியன்° செல்சியஸ்
  • 75% ஹைட்ரஜனும், 25% ஹீலியமும், 70 தனிமங்களும் காணப்படுகின்றன
  • சூரியன் ஒரு வாயுக்கோளம் என்பதால், நடுவரைப்பகுதி 25.4 நாள்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதி 36 நாட்களுக்கு ஒருமுறையும் சுழல்கின்றது
  • பால்வெளி வீதியின் மொத்த சுற்றளவு 1,00,000 ஒளி ஆண்டு தொலைவைக் கடக்க சூரியனுக்கு 200 மில்லியன் ஆண்டுகள் ஆகும்
  • வட துருவத்தில் 186 நாட்களுக்கு சூரியனை நம்மால் காண இயலாது
  • சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சில் அனைத்து நிறங்களும் உள்ளன. ஆனால் அவை அனைத்திலும் மஞ்சள் நிறமே அதிக செறிவுடன் காணப்படுகிறது
  • புவியின் வளிமண்டலத்தின் வழியே சூரிய ஒளி செல்லும் போது நீலம் மற்றும் ஊதா நிறங்கள் அதிகமாகவும், சிவப்பு நிறம் குறைவாகவும் அதிலுள்ள மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகிறது


கோள்கள்
  • நீள் வட்ட வடிவிலான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன
  • சனிக்கோளிற்கும், யுரேனஸ் கோளிற்கும் இடையே உள்ள தொலைவு, பூமிக்கும் செவ்வாய் கோளிற்கும் இடையே உள்ள தொலைவை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது
  • புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் உட்புற கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் புறப்பரப்பு திண்மப்பாறை மேலோட்டினால் அமைந்துள்ளதால் அவை நிலம்சார் கோள்கள் அல்லது பாறைக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன
  • வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வெளிப்புற கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன.அவை ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட பிற வாயுக்களால் நிரம்பிய அடர்வுமிகு வளிமண்டலத்தைக் கொண்டுள்ளதால் வாயுப் பெருங்கோள்கள் அல்லது வாயுக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு வெளிப்புற கோள்களுக்கும் வளையங்கள் உள்ளன


புதன்
  • இது சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்
  • பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிக குளிருடனும் காணப்படும்
  • சுற்றுக்காலம் 87.97 புவிநாட்கள் ஆகும் (சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்)
  • சுழற்சிக்காலம் 58.65 புவி நாட்களாகும் (தன்னைத்தானே சுற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் சுழற்சிக்காலம் எனப்படும்)
  • எப்போதும் கிழக்கு அல்லது மேற்கு திசையின் கீழ்வானத்தில் மட்டுமே காண இயலும்


வெள்ளி
  • சூரிய மண்டலத்தில் காணப்படும் கோள்களில் அதிக வெப்ப நிலை கொண்டது
  • ஒரு நாள் என்பது 243 புவிநாட்கள் ஆகும்
  • ஒரு ஆண்டு என்பது 224.7 புவிநாள்களாகும்
  • எதிர்த்திசையில் சுழல்வதால், சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது


பூமி
  • சுற்றுக்காலம் 365.25 நாட்கள்
  • சுழற்சிக்காலம் 23.93 மணி
  • பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப்பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதனால் விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்
  • பூமியில் 60 கிலோ கிராம் எடை கொண்ட ஒருவர் சூரியனின் மீது 1680 கிலோ கிராம் எடையைக் கொண்டிருப்பார்
  • நிலையாக அமைந்துள்ள புவியின் சுழல் அச்சிற்கு நேராக துருவ விண்மீன் அமைந்திருப்பதால் நகராமல் ஒரே இடத்தில் உள்ளது போல் தோன்றுகிறது. மற்ற அனைத்து விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வது போல் தோன்றுகிறது
  • புவியின் தெற்கு அரைக்கோளத்திலிருந்து துருவ விண்மீன் தெரிவதில்லை


செவ்வாய்
  • பூமியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள்
  • இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால் சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுகிறது
  • ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடம் 22 வினாடி
  • ஒரு வருடம் என்பது 686.96 புவி நாட்கள்


வியாழன்
  • புவியை விட 11 மடங்கு பெரியதாகவும், 318 மடங்கு எடை கொண்டதாகவும் இருப்பதால் பெருங்கோள் என அழைக்கப்படுகிறது
  • ஒரு நாள் என்பது 9 மணி 55 நிமிடங்கள் 30 வினாடி
  • ஒரு வருடம் என்பது 11.862  புவிவருடங்கள்
  • 3 வளையங்களும்,65 துணைக்கோள்களும் உள்ளன
  • கானிமீடு என்ற துணைக்கோள் தான் சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரியதாகும்


சனி
  • மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது
  • வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய வாயுக்கோள் ஆகும்
  • சுழற்சிக்காலம் 10.7 மணி
  • சுற்றுக்காலம் 29.46 புவிஆண்டுகள்
  • 60 துணைக்கோள்கள் உள்ளன (பெரியது - டைட்டன்)
  • புவியை விட 30 மடங்கு அடர்த்தி குறைவாக உள்ளதால் கனமற்றதாக உள்ளது


யுரேனஸ்
  • இது ஒரு குளிர்மிகு வாயுப்பெருங்கோள் ஆகும்
  • சுற்றுக்காலம் 84 புவி ஆண்டுகள்
  • சுழற்சிக்காலம் 17.2 மணி நேரம்
  • மிகவும் சாய்ந்த சுழல் அச்சைக் கொண்டுள்ளதால் உருண்டோடுவது போல் தோன்றும்
  • அசாதாரண சாய்வின் காரணமாக, கோடைக்காலம் 42 ஆண்டுகளும், குளிர்காலம் 42 ஆண்டுகளுமாக இருக்கும்


நெப்டியூன்
  • பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும்
  • மிகவும் காற்று வீசக்கூடிய கோள்
  • 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளூட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது
  • 13 துணைக்கோள்கள் உள்ளன (பெரியது - டிரைட்டான்)
  • சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே துணைக்கோள் டிரைட்டான் ஆகும்


சூரிய மண்டலத்தில் உள்ள பிற பொருள்கள்

சிறு கோள்கள்(Asteroids)
  • செவ்வாயின் சுற்றுப்பாதைக்கும், வியாழனின் சுற்றுப்பாதைக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியில், கோள்கள் தோன்றிய போது உருவான லட்சக்கணக்கான பாறைத்துண்டுகள் சுற்றிவருகின்றன. இவையே சிறுகோள்கள் எனப்படும்
  • மிகப்பெரியது - செரஸ் (விட்டம் 946 கிலோமீட்டர்)


வால் விண்மீன்கள்(Comets)
  • அதிநீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருளே வால்விண்மீன்கள் எனப்படும்
  • இவை சூரியனை நெருங்கும்போது ஆவியாகி, தலை மற்றும் வால் உருவாகின்றன
  • 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியும் வால் விண்மீன் ஹாலி வால்விண்மீன். இது கடைசியாக 1986 - ல் பார்க்கப்பட்டது. மீண்டும் 2062 - ல் தெரியும்


விண்கற்கள் மற்றும் விண்வீழ்கற்கள்(Meteors and Meteorites)
  • சூரிய மண்டலம் முழுவதும் பரவலாக சிதறிக்கிடக்கும் சிறு பாறைத்துண்டுகள் விண்கற்கள் எனப்படும்.அவை வளிமண்டலத்தை நெருங்கும் போது, அதன் ஈர்ப்பு விசையால் கவரப்படுகின்றன. வரும் வழியில், வளிமண்டல உராய்வினால் உருவாகும் வெப்பத்தின் காரணமாக இவை எரிந்து விடுகின்றன 
  • ஒரு சில பெரிய அளவிலான விண்கற்கள் முழுவதுமாக எரியாமல் கற்களாக பூமியில் விழுகின்றன. அவை விண்வீழ்கற்கள் எனப்படும்


துணைக்கோள்கள்
  • ஒரு சுற்றுப்பாதையில் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைச் சுற்றி வரும் பொருள் துணைக்கோள் எனப்படும்
  • நிலவு பூமியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 27.3 நாள்கள்
  • சுற்றுப்பாதையின் ஆரம் 3.85 × 105 கிலோமீட்டர்
  • வினாடிக்கு 250 கிலோ மீட்டர் (மணிக்கு 9 லட்சம் கிலோ மீட்டர்) வேகத்தில் பால்வெளி வீதியைச் சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் காலம் காஸ்மிக் ஆண்டு எனப்படும். இது 225 மில்லியன் புவிஆண்டுகளுக்குச் சமம்



சுற்றியக்கத் திசைவேகம்
  • கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில், செயற்கைக்கோள் ஒரு வட்டப்பாதையில் சுற்றி வருவதற்கு அதற்கு அளிக்கப்படும் கிடைமட்டத் திசைவேகம் சுற்றியக்கத் திசைவேகம் எனப்படும்
  • 1956 - ல் செலுத்தப்பட்ட ஸ்புட்னிக் என்ற செயற்கைக்கோளே முதன்முறையாக செலுத்தப்பட்ட செயற்கையான துணைக்கோள் ஆகும்
  • இந்தியா, முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை ஏப்ரல் 19, 1975 - ல் செலுத்தியது
  • சுற்றியக்கத் கசைவேகம் v=√GM/(R+h)
  • G என்பது ஈர்ப்பியல் மாறிலி = 6.67× 10-11 நிமீ2/கி.கி2
  • M என்பது புவியின் நிறை=5.972×1024 கி.கி
  • R என்பது புவியின் ஆரம்=6371 கிலோமீட்டர்
  • h என்பது புவிப்பரப்பில் இருந்து செயற்கைக்கோளின் உயரம்



செயற்கைக்கோள்களின் சுற்றுக்காலம்
  • புவியை ஒரு முறை முழுமையாக சுற்றி வர ஒரு செயற்கைக்கோள் எடுத்துக்கொள்ளும் காலம் சுற்றுக்காலம் எனப்படும்
  • சுற்றுக்காலம் T= கடந்த தொலைவு/ சுற்றியக்கத் திசைவேகம்
  • T=2πr/v      ;v=√GM/(R+h)
  • T=2π(R+h)/√GM/(R+h)


5.கெப்ளரின் விதிகள்
  • 1600 களின் தொடக்கத்தில் ஜோகனஸ் கெப்ளர் கோள்களின் இயக்கத்திற்கான மூன்று விதிகளை வெளியிட்டார்


i)நீள்வட்டங்களின் விதி
  • சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு நீள்வட்டப்பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன


ii)சமபரப்புகளின் விதி
  • கோளின் மையத்தையும், சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சமகாலங்களில் சமபரப்புகளைக் கடக்கிறது


iii)ஒத்திசைவுகளின் விதி
  • எந்த இரு கோள்களுக்கும், சுற்றுக் காலங்களின் இரு மடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதி அளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்குச் சமம்


6.பன்னாட்டு விண்வெளி மையம்
  • விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான ஒரு பெரிய விண்வெளிக்கலமே பன்னாட்டு விண்வெளி மையம் ஆகும்
  • பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு மனிதர்கள் முதன்முதலாக சென்ற ஆண்டு - 2000
  • நிறை / திறன் : 4,20,000 கி.கி/75 கி.வாட் முதல் 90 கி.வாட் வரை
  • நீளம் / அகலம் / உயரம் : 73 மீ/108 மீ/31மீ
  • செயல்படும் உயரம் : 407 கி.மீ
  • சுற்றியக்கத் திசைவேகம் / சுற்றுக்காலம் : 7.67 கி.மீ/விளையாட்டு(27600 கி.மீ/மணி)/93நி
  • இதுவரை சென்றுள்ள மனிதர்களின் எண்ணிக்கை : 227 ( ஜூலை 2018 வரை)
  • மூன்று மனிதர்களுக்கு ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவு : 3630 கிலோ கிராம்
  • மின்னிணைப்புக்காக தேவைப்பட்ட இணைப்புக்கம்பிகளின் மொத்த நீளம் : 13 கிலோமீட்டர்
  • பன்னாட்டு விண்வெளி மையத்தில் அதிக நாட்கள் இருந்தவர் - பெக்கி வில்சன் (665 நாட்கள்)


பயன்கள்
  • 1.நீர் சுத்திகரிக்கும் முறைகள்
  • 2.கண்ணைத் தொடரும் தொழில்நுட்பம்
  • 3.தானியங்கி கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள்



Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...