Skip to main content

Current Affairs - நடப்பு நிகழ்வுகள் (ஜனவரி 2019)



                நடப்பு நிகழ்வுகள் (ஜனவரி 2019)


ஜனவரி 1


  • ஜனவரி-1-ம் தேதி உலகிலேயே அதிக அளவில் குழந்தைகள் பிறந்த நாடு இந்தியா என்று யூனிசெஃப் தெரிவித்துள்ளது (69,944 குழந்தைகள்)
  • 2018ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனை என ஸ்மிருதி மந்தனாவை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது
  • 12-வது உலகளாவிய உடல் நல சுகாதார மாநாடு  (GHS-Global Health Care Summit-2018) மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது


ஜனவரி 2


  • பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதில் சென்னை முதலிடத்தில் உள்ளது
  • பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து முதல்வர் பழனிசாமி 2018, ஜூன் 5-ம் தேதி, சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். தமிழ்நாட்டில் இந்த தடை ஜனவரி- 1 முதல் அமலுக்கு வந்தது
  • நம் நாட்டில் முதன்முறையாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த மாநிலம்- சிக்கிம்
  • இந்தியா சிமெண்ட்ஸ்-ன் துணைத் தலைவர் N. சீனிவாசனைப் பற்றிய 'Defying the paradigm N.Srinivasan:Fifty years of an extraordinary journey' என்ற புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் டிசம்பர் 28, 2018 அன்று வெளியிட்டார்
  • 'Early Indians: The story of our ancestors and where we came from' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்


    ஜனவரி 3


    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ஸ்வட்ச் சர்வேக்ஷன் விருதில் மாநில அளவில் திடக்கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள குடிசைகளை மேம்படுத்த 'வாழ்விட மேம்பாட்டு திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • இந்திய அறிவியல் மாநாடு -2019, ஜனவரி -3 -ல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிரதமர் தொடங்கிவைத்தார். இதன் கருப்பொருள் எதிர்கால இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • இந்தியாவில் நுழைவதற்கு அல்லது வெளியேறுவதற்கு வசதியாக ஒரு அதிகாரபூர்வமான குடியேற்றத்திற்கான சோதனைச் சாவடியாக போர்ட்பிளேயர் விமான நிலையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
    • சூரியனை மிக நீண்ட தொலைவில் சுற்றி வரும் அல்ட்டிமா துலே என்ற நுண்கோளின் அருகே அமெரிக்காவில் நியூ ஹொரைசன் என்ற விண்கலம் சென்றுள்ளது
    • கதக் எனும் நடனத்தை உலகளவில் பரப்பியதற்காக அமெரிக்க கதக் நடனக் கலைஞரான, அனின்தித்தா அனாம் என்பவருக்கு தேசிய நிருத்ய சிரோமணி - 2019 என்னும் விருது வழங்கப்பட்டது
    • ஹைதராபாத்தில் பெண்கள் பாதுகாப்பு கருதி women on wheels போலிஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது
    • பிரதான் மந்திரி உஜ்ஜவ்லா யோஜனா திட்டத்தின் கீழ் ஆறு கோடி பயனாளிகள் இலவச எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர்
    • சென்னை மியூசிக் அகாடமியில் 13 - வது ஆண்டு விழா ஜனவரி 3-ல் தொடங்கியது. இதில் பிரபல நாட்டிய கலைஞரான சாந்தா தனஞ்செயனுக்கு நிருத்ய கலாநிதி விருது வழங்கப்பட்டது


    ஜனவரி 4


    • விபத்தில்லாத ரயில் பயணத்தை இலக்காகக் கொண்ட இந்திய ரயில்வேயின் திட்டம் 'Missions Zero Accident' திட்டம்
    • மதுரை -சென்னை இடையே தேஜஸ் என்ற அதிவேக ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது
    • நிலவின் இருண்ட பகுதியில் சீனாவின்  Chang e-4 என்ற விண்கலம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இது டிசம்பர் 8ல் விண்ணில் ஏவப்பட்டது


    ஜனவரி 5


    • தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் துணைத் தலைவராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்
    • ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப்  பண்ட்


    ஜனவரி 6


    • டாட்டா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
    • ஹாஃப்மேன் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் - பெலிண்டா ஜோடி பட்டம் வென்றது
    • ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2019,UAE- ல் நடைபெற்றது
    • புரோ கபடி லீக் ஆறாவது சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி
    • 27 வது உலக புத்தக கண்காட்சி புதுடெல்லியில், பிரகதி மைதானத்தில் நடைபெற்றது


    ஜனவரி 7


    • உலகளாவிய ஆன்லைன் தொகை செலுத்தும் இணைய தளமாகிய 'Remit 2 India' - விற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
    • பழமையான முத்திரைகள் மற்றும் கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்ட ஒடிசாவில் உள்ள பழமையான புத்த மத குடியேற்றப் பகுதியான லலித்கிரி தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது
    • திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்த உயரிய விருதான கோல்டன் குளோப் விருது போஹேமியன் ராப்சோடி (Bohemian Rhapsody) என்ற திரைப்படத்துக்கு கிடைத்தது


    ஜனவரி 8


    • ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆற்றில் மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் போலாவரம் திட்டத்தின் கீழ் அணையில் 10,872 சதுர அடி பரப்பளவில் 24 மணி நேரத்தில் கான்கிரீட் பணிகள் செய்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது
    • மகாராஷ்டிராவில் ஆர்யமான் தாத்ரா (13 வயது)  எழுதிய 'ஸ்னோ பிளேக்ஸ்' கவிதை தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது


    ஜனவரி 9


    • தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டது.இது விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது
    • உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது. தற்போதைய உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், ஆஸ்திரேலியா


    ஜனவரி 10


    • 13 ஆவது சர்வதேச சுகாதார உச்சி மாநாடு -2019 ,ஹைதராபாத்தில் நடைபெற்றது
    • ஜி எம் எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணராக மைசூரைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார் (இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மற்றும் இரண்டாவது இந்தியர்)
    • டிஜிட்டல் பரிவர்த்தனையை கண்காணிக்க நந்தன் நிலேகனி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது


    ஜனவரி 11


    • இந்தியாவின் மிக நீண்ட ஒற்றை பாதை கேபிள் பாலமான பியொருங் பாலம்(BYORUNG bridge), அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் நதியின் குறுக்கே கட்டப்பட்டு, அம்மாநில முதல்வர் பீமா காண்ட்-ல் திறந்து வைக்கப்பட்டது


    ஜனவரி 12


    • ஜனவரி 12, தேசிய இளைஞர் தினம்
    • 'We are displaced' என்ற புத்தகம் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்-ல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது


    ஜனவரி 13


    • 'சங்கீத சாம்ராட் விருது' கர்நாடக இசைக்கலைஞர் பிரமிளா குருமூர்த்திக்கு வழங்கப்பட்டது
    • ராஜஸ்தான் மாநிலம் பீகானீரில் சர்வதேச ஒட்டக விழா நடைபெற்றது
    • பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அமெரிக்காவின் சிகாகோவில் ஜூலை 4 முதல் ஜூலை 7 வரை நடக்கவிருக்கிறது
    • சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி 2019-ல் செக்குடியரசின் பெட்ரா குவிடோவா சாம்பியன் பட்டம் வென்றார்
    • நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2019-ல் உலகில் காண வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில், கர்நாடகாவில் உள்ள ஹம்பி நகரம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது (52 இடங்களில் இந்தியாவில் இடம் பிடித்த ஒரே இடம் இதுவாகும்)


    ஜனவரி 14


    • தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுற்றது.1969 ஜனவரி 14 சென்னை மாகாணம், தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
    • உலக வங்கி வெளியிட்டுள்ள தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியல் 2019-ல் இந்தியா 77 வது இடம் பிடித்துள்ளது
    • சந்திரிகா சுப்பிரமணியம் எழுதிய 'இணைய குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்' என்ற நூல் டாக்டர் அப்துல்கலாம் தொழில்நுட்ப விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது
    • விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூருக்கு அருகே உள்ள வீர சோழ புரத்தில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது
    • நூரம்பர்க் சுற்றில் நடந்த FIA ஃபார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் இந்தியர் சஹாரா போர்ஸ் இந்தியா அகாடமியை சேர்ந்த ஜெகன் தர்வாலா


    ஜனவரி 15


    • இந்திய ராணுவத்திற்கு இந்தியரே முதல் இந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரியப்பா பதவி ஏற்ற ஜனவரி 15 இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது
    • 'நாஞ்சில்நாடன்' விருது தமிழில் இயல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு வழங்கப்பட்டது
    • பிலிப்கோட்லர் விருது' பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது
    • நவீன கால சந்தைப்படுத்துதலின் தந்தை பிலிப்கோட்லர்
    • நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்கத் தொடங்கி உள்ளது
    • கேலோ இந்தியா யூத் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தமிழக வீராங்கனை ஜி.வர்ஷா தங்கப்பதக்கம் வென்றார்
    • கேரள பிரவாசி பாரதீய திவாஸ் அமைப்பு நடப்பாண்டில் சிறந்த மனிதருக்கான விருதுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. க. ஸ்டாலினை தேர்வு செய்துள்ளது


    ஜனவரி 16


    • Beti Bachao Beti Padhao (பெண் குழந்தைகளை பாது காப்போம் கற்பிப்போம்) என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
    • 2019 ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கப் ஆப் நேஷன்ஸ் போட்டிகளை எகிப்து நடத்த உள்ளது என்று ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் அஹமத் தெரிவித்துள்ளார்
    • ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அஜித் மோகன் முகநூல்(Facebook) இந்தியா நிறுவனத்தின் புதிய துணை தலைவராகவும், மேலாண் இயக்குனராகவும் பதவி ஏற்றுள்ளார்


    ஜனவரி 17


    • டெல்லியில் நடைபெற்ற 17-வது டெல்லி சர்வதேச ஓபன் செஸ் போட்டியில், சென்னையைச் சேர்ந்த சிறுவன் குகேஷ் (வயது 12) சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் உலகின் 2-ம்இளம்செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்
    • கடந்த 100 ஆண்டுகளில், 2018 மிகவும் வெப்பமான ஆண்டு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


    ஜனவரி 18


    • தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை நெல் ஆய்வு நிலையத்தில் ஆடுதுறை - 53 (ADT-53) என்ற புதிய நெல் ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது


    ஜனவரி 19


    • தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது
    • புனேயில் நடைபெற்ற கேலோ இந்தியா யூத் கேம்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் குமார் மணிஷ் தங்கம் வென்றார்
    • புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில்  1353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது
    • அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் குரிந்தர் சிங் கால்சாவுக்கு, 'ரோசா பார்க்ஸ் டிரைல்பிளேசர்' என்ற விருது வழங்கப்பட்டது


    ஜனவரி 20


    • இந்தியாவின் இரண்டாவது பாதுகாப்பு தளவாடங்கள் கண்டுபிடிப்பு மையம் நாசிக் (மஹாராஷ்டிரா) நகரில் அமைய உள்ளது
    • இரண்டாவது உலக ஆரஞ்சு திருவிழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது


    ஜனவரி 21


    • ஆசியா மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், லாரெஸ் world sports awards-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்
    • சீனாவில் தடுப்புக்காவலில் உள்ள சீன வழக்கறிஞர் யூ வென்செங், 2019ம் ஆண்டில் 'பிராங்கோ- ஜெர்மன் மனித உரிமைகள்' விருதை பெற்றுள்ளார்
    • 'தந்தைபெரியார்' விருது அதிமுக அமைப்பு செயலாளர் சி. பொன்னையன் அவர்களுக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது
    • அயர்லாந்தில் நடைபெற்ற குதிரைப் பந்தய போட்டியில் மைக்கேல் ஸ்வீனே முதலிடத்தை பெற்றார்
    • சர்வதேச முகவாண்மை நிறுவனமான பி.டபிள்யூ.சி வெளியிட்டுள்ள பட்டியலில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது
    • சர்வதேச உரிமை குழுவான ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் வீடுகளில் பார்க்கும் வேலையிலன் மதிப்பு,ஆப்பிள் நிறுவன ஆண்டு வருமானத்தை விட  43 மடங்கு அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது


    ஜனவரி 22


    • ஐசிசி 2018-ன் சிறந்த டெஸ்ட் வீரர், ஐசிசி 2018-ன் சிறந்த ஒரு நாள் வீரர், ஆண்டின் சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருது ஆகிய மூன்று விருதுகளுக்கும் விராட் கோலி தேர்வாகியுள்ளார்


    ஜனவரி 23


    • புனே (மகாராஷ்டிரா) நகரில் நடைபெற்ற இரண்டாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் மகாராஷ்டிர மாநிலம் 85 தங்கம் உட்பட மொத்தம் 228 பதக்கங்கள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது
    • நகர்ப்புற சூழலில் கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும் நகரம் குறித்த ஆய்வு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கட்டிடக்கலையின் உலக தலைநகராக யுனெஸ்கோ அறிவித்துள்ளது
    • 'சன்சத் ரத்னா' விருது பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அனுராக் தாகூருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்
    • Line on Fire:Cease Fire Violation and India- Pakistan Escalation Dynamics என்ற புத்தகம் ஹேப்பிமேன் ஜேகப் என்பவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது


    ஜனவரி 24


    • ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்
    • பயங்கரவாதியாக இருந்து மனம் திருந்தி சரணடைந்த பின் ராணுவத்தில் சேர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உயிர்நீத்த நசீர் வானிக்கு 'அசோக் சக்ரா' விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


    ஜனவரி 25


    • ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினம்
    • 'சுபாஷ் சந்திரபோஸ் அப்தா பிரபந்தன் புரஸ்கார்' என்ற வருடாந்திர விருதை அரசு ஏற்படுத்தி உள்ளது


    ஜனவரி 26


    • ஜனவரி 26 சர்வதேச சுங்க தினம்
    • டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தினத்தின் ஆண்கள் பிரிவில் அணிவகுப்புக்கு முதன்முறையாக பாவனா கஸ்தூரி என்ற பெண் தலைமை தாங்கினார்
    • இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் பட்டம் வென்றார்
    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நயோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்
    • வீர தீர செயல் புரிந்த சூரியகுமார், ஸ்ரீதர், ரஞ்சித் குமார் ஆகிய மூன்று இளைஞர்களுக்கும் 'அண்ணா விருது' தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது
    • அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட இந்திய கவிஞர் ரஞ்சனா முரளிக்கு 'மகளிருக்கான குரல்' விருது வழங்கப்பட்டது
    • புகழ்பெற்ற இந்திய அறிவியலாளரான CNR.ராவ் ஐக்கிய அரபு அமீரகத்தின் மேம்படுத்தப்பட்ட பொருட்களுக்கான மையத்தின் 'முதலாவது ஷேக் சாத் மூலப்பொருட்கள் மீதான ஆராய்ச்சிக்கான சர்வதேச விருதுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


    ஜனவரி 27


    • 1264 ரூபாய் கோடியில் கட்டப்பட்டுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ் மருத்துவமனைக்கு) பிரதமர் அடிக்கல் நாட்டினார்
    • டெல்லி -  வாரணாசி இடையிலான அதிவேக ரயிலுக்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என பெயரிடப்பட்டுள்ளது
    • டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் இசைப்பதற்காக சங்நாதம் என்ற பெயரில் புதிய கீதம் உருவாக்கப்பட்டது
    • பூமியின் பழமையான பாறை நிலவில் கண்டுபிடிக்கப்பட்டது
    • யோகாவில் 14 உலக சாதனைகளை படைத்துள்ள நெல்லையை சேர்ந்த பிரியா(9 வயது)-க்கு ஜெருசலேம் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது


    ஜனவரி 28


    • குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ஊர்திகளில் சிறப்பான காட்சியமைப்புக்கான முதல் பரிசு திரிபுராவிற்கு கிடைத்தது
    • பிரான்ஸ் நாட்டின் யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்ற மொழிகள் மற்றும் பண்பாடுகள் அழிவதை தடுப்பதற்கான உலகளாவிய கருத்தரங்கில், 2019ஆம் ஆண்டு 'உள்நாட்டு மொழி ஆண்டாக' அறிவித்துள்ளது
    • சர்வதேச அளவில் பயணிகள் வருகை அதிகம் உள்ள விமான நிலையங்களில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது
    • இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் பிரான்ஸ் நாட்டு வீரர் செபாஸ்டியன் ஓஜிர் வெற்றி பெற்றார்


    ஜனவரி 29


    • உலக சுகாதார அமைப்பின் (WHO) , தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனராக டாக்டர்.பூனம் கெத்ரபால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
    • Transparency International என்ற அமைப்பு வெளியிட்டுள்ள உலகம் முழுவதும் ஊழல் மிகுந்த 170 நாடுகள் பட்டியலில் இந்தியா 78 -வது இடத்தில் உள்ளது
    • டெல்லியில் இந்திய அளவிலான ஆரோக்கிய பாரத பயணம் நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கு சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டது
    • பாகிஸ்தானில் சிவில் கோர்ட்டு நீதிபதியாக முதல்முறையாக இந்து மதத்தை சேர்ந்த சுமன் குமாரி என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்
    • அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் உயரிய 'கர்நாட் விருது' ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது
    • ரஷ்யாவின் ஜிஎம் மேக்சிம்  லுகோவ்ஸ்காய்-ஐ தோற்கடித்து, ஜார்ஜியாவின் லெவன் பன்சுலையா, 11-வது சென்னை ஓபன் சர்வதேச சதுரங்க போட்டித் தொடரை வென்றார்


    ஜனவரி 30


    • 70 ஆவது குடியரசு தினத்தில் பாதுகாப்பு அமைச்சகம் 'RDP இந்தியா - 2019' என்னும் கைபேசி சேவை தொடங்கி உள்ளது
    • 552 காரட் எடை கொண்ட உலகில் பெரிய வைரங்களில் ஒன்றான மஞ்சள் வைரம் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
    • பாகிஸ்தானில் கரும்புச்சாற்றை தேசிய பானமாக அறிவித்துள்ளது
    • போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சென்னையை அடுத்து சேலத்தில் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • தமிழகத்தின் முதல் பிபா சர்வதேச தரத்திலான செயற்கை புல்தரை கால்பந்து மைதானத்தை சென்னை துரைப்பாக்கத்தில் எப்.சி.மெட்ராஸ் கிளப் அமைத்துள்ளது
    • சீனாவில் ஸ்வாட்  (SWAT) எனப்படும் தீவிரவாத எதிர்ப்பு கமாண்டோ படையில் பெண்கள் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 'பால்கன் கமாண்டோ யூனிட்' என்று பெயரிடப்பட்டுள்ளது


    ஜனவரி 31


    • 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளன
    • 2018ம் ஆண்டின் 'தெற்காசிய இலக்கியத்திற்கான DSC விருது' ஜெயிந்த் கய்கினி எழுதிய புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'No Presents Please' என்ற நாவலுக்கு கிடைத்துள்ளது
    • உலகின் நீளமான முப்பரிமான முறையில் அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம் சீனாவில் திறப்பு பட்டு உள்ளது. இது ஷாங்காய் நகரில் உள்ள வென்சாபேங்க் நதியின் மீது அமைந்துள்ளது. இதனை சீனாவிலுள்ள ஷிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சீ வெய்கு என்பவர் வடிவமைத்தார்
    • மலேசியாவின் 16-வது அரசராக, சுல்தான் அப்துல்லா இப்னி சுல்தான் அகமது ஷா- வை அறிவித்துள்ளது
    • கைவினைஞர்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்து உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக நாட்டின் முதல் புவியியல் குறியீடு (GI) நிலையத்தை,கோவாவின் டபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது



    Comments

    Popular posts from this blog

    6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

            Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

    6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                                Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...

    6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

    6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...