Skip to main content

6 - ம் வகுப்பு அறிவியல் - ஆற்றலின் வகைகள்





          6 - ம் வகுப்பு அறிவியல் 
         ஆற்றலின் வகைகள்

  • வேலை செய்யத் தேவையான திறமையே ஆற்றல் எனப்படும்
  • ஆற்றலின் அலகு ஜூல்
ஆற்றலின் வகைகள்
  • இயந்திர ஆற்றல், வேதி ஆற்றல்,ஒளி ஆற்றல், ஒலி ஆற்றல், மின்னாற்றல், வெப்ப ஆற்றல், காற்றாற்றல் ஆகியவை ஆற்றலின் பல்வேறு வகைகள் ஆகும்
    இயந்திர ஆற்றல்
    • உயரமான இடத்தில் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் நீர் அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும். அணையில் இருந்து கீழே விழும் நீரின் ஆற்றலைக் கொண்டு, மின்னாக்கியின் (generator) கம்பிச்சுருளை (turbine) சுழற்றுவதன் மூலம் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது

    இயந்திர ஆற்றலின் வகைகள்

          1.நிலை ஆற்றல்
          2.இயக்க ஆற்றல்

    1. நிலை ஆற்றல்
    • ஒரு பொருள் அதன் நிலையை பொறுத்தோ அல்லது வடிவத்தை பொறுத்தோ பெற்றுள்ள ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும்
    • அணைக்கட்டில் உள்ள நீர், மேல்நிலைத் தொட்டியில் உள்ள நீர்  போன்றவை சற்று உயரத்தில் நிலையாக இருப்பதனால், அவை நிலை ஆற்றலைப் பெற்றுள்ளன

    2. இயக்க ஆற்றல்
    • இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல் எனப்படும்
    • நகரும் பேருந்து, ஓடும் குதிரை, பாயும் நீர் போன்றவை இயக்கத்தில் உள்ளதனால், அவை இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன

    இயந்திர ஆற்றலின் பயன்கள்
    • இயந்திர ஆற்றல் மூலமாக நிலையாக உள்ள பொருளை இயங்கச் செய்யவும், இயங்கும் பொருளை ஓய்வு நிலைக்கு கொண்டு வரவும் முடியும்
    • காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு, காற்றாலைகள் மூலம் மின் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும்

    வேதி ஆற்றல்
    • வேதிவினையின் போது வெளிப்படும் ஆற்றல் வேதி ஆற்றல் எனப்படும்
    • மரம், நிலக்கரி, பெட்ரோல் போன்றவை எரிக்கப்படும் போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது வேதிஆற்றல் ஆகும்

    வேதி ஆற்றலின் பயன்கள்
    • தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளர்ச்சிக்கும், செயல்களுக்கும் அவற்றின் உணவில் உள்ள வேதி ஆற்றல் பயன்படுகிறது
    • மின்கலன்களில் உள்ள வேதி ஆற்றலில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது
    • எரிபொருள்களைப் பயன்படுத்தும்போது அதில் உள்ள வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும் மாற்றமடைகிறது

    மின்னாற்றல்
    • காற்றாலைகளில், காற்றின் இயக்க ஆற்றல் மூலம் மின்னாற்றல் பெறப்படுகிறது
    • மின் விளக்கில் மின் ஆற்றல் ஒளி ஆற்றலாகவும், மின்விசிறியில் மின்னாற்றல் இயக்க ஆற்றலாகவும் மாற்றமடைகிறது
    • தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள் - கயத்தாறு (திருநெல்வேலி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள்

    மின்னாற்றலின் வகைகள்
    • தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்கவும், தொலைத் தொடர்புத் துறையிலும் மின்னாற்றல் பயன்படுகிறது
    • பெருநகரங்களில், மின்சாரத் தொடர்வண்டியை இயக்கவும் மின்னாற்றல் பயன்படுகிறது

    வெப்ப ஆற்றல்
    • வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஜூல்
    • மேட்டூர், பவானிசாகர் ஆகிய இடங்களில் நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது
    • வேதி வினைகள் மற்றும் உராய்வின் மூலமாகவும் வெப்ப ஆற்றல் கிடைக்கிறது

    வெப்ப ஆற்றலின் பயன்கள்
    • சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் தான் மழை கிடைக்கிறது
    • அனல் மின் நிலையங்களில் நிலக்கரியை எரிப்பதால் கிடைக்கும் வெப்ப ஆற்றல் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது
    • மின்சார அடுப்பு, மின்சார சலவைப் பெட்டி ஆகியவற்றில் மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது

    சூரிய ஆற்றல்
    • சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றல் சூரிய ஆற்றல் எனப்படும்
    • கி.மு. 212 - ல் ஆர்க்கிமிடிஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞர், சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானியப் போர்க்கப்பல்களை எரித்தார்

    சூரிய ஆற்றலின் பயன்கள்
    • நீர் சூடேற்றும் கருவி, சூரிய அடுப்பு ஆகியவற்றில் சூரிய ஆற்றல் நேரடியாகப் பயன்படுகிறது
    • செயற்கைக்கோள்களிலும், கணக்கீட்டுக் கருவிகளிலும் சூரிய மின்கலன்கள் பயன்படுகின்றன
    • சூரிய ஆற்றல் வாகனங்களை இயக்கப் பயன்படுகிறது

    ஆற்றல் அழிவின்மை விதி
    • ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
    • ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்
    • எந்த ஓர் ஆற்றல் மாற்றத்திலும் மொத்த ஆற்றலின் அளவு மாறாமல் இருக்கும்














    Comments

    Popular posts from this blog

    6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

            Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

    6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

    6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

    6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                                Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...