Skip to main content

புவியியல் - புவி மற்றும் பிரபஞ்சம்




புவி மற்றும் பிரபஞ்சம்

பிரபஞ்சம்

 *பிரபஞ்சம் என்பது பூமி ,சூரியன், நிலா, வானம் ,சூரியனை சுற்றிவரும் கோள்கள், விண்மீன்கள், விண்துகள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்
 *13.73 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது

பூமி

 *பூமி 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது
 *பெருவெடிப்பு கொள்கை பூமியின் தோற்றம் பற்றிய கொள்கை ஆகும்

அட்சக்கோடுகள் ,தீர்க்கக் கோடுகள்

 *அட்சக்கோடுகள் அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது
 *தீர்க்க கோடுகள் தீர்க்க ரேகை என்று அழைக்கப்படுகிறது
 *அட்ச கோடுகளையும் தீர்க்கக்கோடு களையும் முதலில் வரைந்தவர் டாலமி
 *இவை ஓரிடத்தின் அமைவிடத்தை அறிந்து கொள்வதற்கு இடப்பட்ட கற்பனைக் கோடுகள்

அட்சக்கோடுகள்

 *பூமியின் மீது கற்பனையாக கிழக்கு மேற்காக வரையப்பட்ட கோடுகள் அட்சக்கோடுகள் என்று அழைக்கப்படுகின்றன
 *இது காலநிலை மாற்றத்தை அறிய பயன்படுத்தப்படுகிறது
 *மொத்த அட்சக்கோடுகள் 180
 *23 1/2°வடக்கு அட்ச ரேகை கடக ரேகை என்று அழைக்கப்படுகிறது
 *23 1/2°தெற்கு அட்ச ரேகை மகர ரேகை என்று அழைக்கப்படுகிறது
 *66 1/2° வடக்கு அட்ச ரேகை ஆர்டிக் வட்டம் என்று அழைக்கப்படுகிறது
 *66 1/2°தெற்கு அட்ச ரேகை அண்டார்டிக் வட்டம் என்று அழைக்கப்படுகிறது
 *90°வடக்கு அட்ச ரேகை வடதுருவம் என்று அழைக்கப்படுகிறது
 *90°தெற்கு அட்ச ரேகை தென்துருவம் என்று அழைக்கப்படுகிறது
 *ஒவ்வொரு டிகிரிக்கும் இடையே உள்ள வேறுபாடு 111 கிலோ மீட்டர்
 *பூமியின் சுற்றளவு 40 ஆயிரம் கிலோமீட்டர்

தீர்க்கக் கோடுகள்

 *பூமியின் மீது கற்பனையாக வடக்கு தெற்காக வரையப்பட்ட கோடுகள் தீர்க்க கோடுகள் என்று அழைக்கப்படுகின்றன
 *இது நேரத்தை அறிய பயன்படுத்தப்படுகிறது
 *மொத்த தீர்க்கக் கோடுகள் 360
 *0°தீர்க்கக் கோடு கிரீன்விச் கோடு என்று அழைக்கப்படுகிறது
 *180°தீர்க்கக் கோடு சர்வதேச நாள் கோடு என்று அழைக்கப்படுகிறது
 *இந்தியாவின் பரப்பளவு கிழக்கு மேற்காக சுமார் 29°தீர்க்கக்கோடு களைக் கொண்டுள்ளது
 *மேற்கு பகுதியை காட்டிலும் கிழக்குப் பகுதியில் 1மணி 56 நிமிடம் முன்னதாக சூரியன் உதிக்கவோ அல்லது மறையவோ செய்கிறது
 *இந்திய நாட்டின் நடுவில் செல்லும் 82°30'கிழக்கு தீர்க்க கோடை வைத்து நாடு முழுவதும் ஒரே நேரத்தை பயன்படுத்துகின்றனர்

கிரீன்விச் திட்ட நேரம் ( Greenwich mean time)

 *பூமி சுற்றுவதற்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது
24 hr = 360°
1 hr = 15°
60 min = 15°
4 min = 1°

Notes:

 *கடக ரேகை ,மகர ரேகை, பூமத்திய ரேகை ஆகிய மூன்று கோடுகளும் செல்லும் கண்டம்           ஆப்பிரிக்கா 
 *இந்தியாவில் செல்லும் அட்சக்கோடு                    கடகரேகை
 *இந்தியாவில் முதலில் சூரியன் தெரியும் மாநிலம்
       அருணாச்சல பிரதேசம்
 *நீண்ட பகல் கொண்ட நாள் அல்லது கடக ரேகையில் சூரியன் விழும் நாள் 
       ஜூன் 21
 *நீண்ட இரவு கொண்ட நாள் அல்லது மகர ரேகையில் சூரியன் விழும் நாள் 
       டிசம்பர் 22
 *சம பகல், இரவு கொண்ட நாட்கள் அல்லது பூமத்திய ரேகையில் சூரியன் விழும் நாட்கள்      மார்ச் 21 ,செப்டம்பர் 23













Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...