Skip to main content

6 - ம் வகுப்பு தமிழ் - கண்ணெனத்தகும்



    6 - ம் வகுப்பு தமிழ் - கண்ணெனத்தகும்



மூதுரை


மூதுரையை இயற்றியவர் - ஔவையார்
இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். இந்நூலில் 31 பாடல்கள் உள்ளன


துன்பம் வெல்லும் கல்வி

துன்பம் வெல்லும் கல்வி பாடலை இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இவர் எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்


கல்விக்கண் திறந்தவர்

கல்விக் கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் பாராட்டப் பெற்றவர் காமராசர்

காமராசரின் சிறப்புப் பெயர்கள்
பெருந்தலைவர்
படிக்காத மேதை
கர்மவீரர்
கறுப்புக் காந்தி
ஏழைப்பங்காளர்
தலைவர்களை உருவாக்குபவர்

காமராசரின் கல்விப் பணிகள்

காமராசர் முதலமைச்சராக பதவி ஏற்ற நேரத்தில் ஏறக்குறைய 6000 தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாக திறக்க ஆணையிட்டார். மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப் படுத்தினார். மாணவர்கள் பசியின்றி படிக்க மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்க சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். பள்ளிகளின் வசதிகளைப் பெருக்க பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார். மாணவர்கள் உயர்கல்வி பெற பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாக தொடங்கினார். இவ்வாறு கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் காமராசரே ஆவார்

காமராசருக்குத் தமிழக அரசு செய்த சிறப்புகள்


  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது
  • நடுவண் அரசு 1976 ல் பாரத ரத்னா விருது வழங்கியது
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன
  • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 2 - 10 - 2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது




நூலகம் நோக்கி

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் -  அண்ணா நூற்றாண்டு நூலகம்
ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் சீனாவில் உள்ளது
இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - முனைவர் இரா.அரங்கநாதன். இவர்தான் நூலக விதிகளை உருவாக்கியவர்

சிறந்த நூலகர்களுக்கு டாக்டர். எஸ். ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது




இன எழுத்துக்கள்

சில எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் இன எழுத்துகள் ஆகும்.ஆறு வல்லின மெய் எழுத்துகளும், ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துக்கள் ஆகும். உயிரெழுத்துக்களில் குறிலுக்கு நெடிலும்,நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துக்கள் ஆகும்











Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...