Skip to main content

6 - ம் வகுப்பு அறிவியல் - உணவு முறைகள்




                உணவு முறைகள்

  • உடலுக்கு ஊட்டத்தைத் தரும் பொருட்களை உணவு என்கிறோம்
  • தாவரங்களின் வேர், தண்டு, இலை, மலர், காய், கனி, விதை ஆகியவை உணவாக பயன்படுகிறது
  • விலங்குகளில் இருந்து பால், முட்டை, மாமிசம் ஆகியவை உணவாகக் கிடைக்கிறது

ஊட்டச்சத்துக்கள்(Nutrients)

  • உணவிலுள்ள, உடலுக்குத் தேவையான சத்துக்கள் ஊட்டச்சத்துக்கள் எனப்படும்

ஊட்டச்சத்துக்களின் வகைகள்

  • கார்போஹைட்ரேட்டுகள் (carbohydrates)- ஆற்றல் அளிக்கின்றன
  • புரதங்கள்(proteins) -வளர்ச்சி அளிக்கின்றன
  • கொழுப்புகள்(fats)-ஆற்றல் அளிக்கின்றன
  • வைட்டமின்கள்(vitamins)-உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
  • தாது உப்புக்கள்(minerals)-உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
  • நீர்(water)-உணவைக் கடத்துகிறது; உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகிறது

காய்கறிகள் பழங்கள் உணவுப் பொருட்களில் நீரின் அளவு

  • தர்பூசணி - 99%
  • வெள்ளரிக்காய் - 95%
  • காளான் - 92%
  • பால் - 87%
  • உருளைக்கிழங்கு - 75%
  • முட்டை - 73%
  • ஒரு துண்டு ரொட்டி - 25%
  • காய்கறிகள், பழங்களை நறுக்கிய பின் கழுவினால் அவற்றிலுள்ள வைட்டமின் சத்து இழக்கப்படுகிறது
  • பெரும்பாலான காய்கறிகள், பழங்களின் தோலில் தான் அதிக அளவில் வைட்டமின்களும், தாது உப்புகளும் காணப்படுகின்றன
  • தானியங்கள், பயறு வகைகளைப் பலமுறை கழுவுவதால் அதிலுள்ள வைட்டமின்களும், தாது உப்புகளும் இழக்கப்படுகிறது

ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள்

  • நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக் குறைவதால் ஏற்படும் நோய் ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய் எனப்படும்

ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்களும், அறிகுறிகளும்

புரதம்


உணவுப் பொருட்கள்


  • மீன், இறைச்சி, முட்டை (வெள்ளைக்கரு), பால், பட்டாணி, தானியங்கள்

குறைபாட்டு நோய்

1.குவாஷியோர்கர்(1-5 வயது குழந்தைகள்)

அறிகுறிகள்: வளர்ச்சி தடைபடுதல், உப்பிய வயிறு, கை மற்றும் கால்களில் வீக்கம்

2.மராஸ்மஸ்

அறிகுறிகள்: குச்சி போன்ற கை கால்கள், மெலிந்த தோற்றம், பெரிய தலை, எடை குறைவு, உடல் மற்றும் மூளை வளர்ச்சி குறைதல்


வைட்டமின்கள்

வைட்டமின் A

உணவுப் பொருட்கள்

மீன் எண்ணெய், முட்டை, பால், நெய், வெண்ணெய், கேரட், மக்காச்சோளம், மஞ்சள் நிற பழங்கள், கீரைகள்

குறைபாட்டு நோய்

மாலைக்கண் நோய்

அறிகுறிகள்: பார்வை குறைபாடு,மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடியாமை

வைட்டமின் B

உணவுப் பொருட்கள்


முழு தானியங்கள், பருப்பு, தீட்டப்படாத அரிசி, பால், மீன், இறைச்சி, பட்டாணி, பயறு வகைகள், பச்சைக் காய்கறிகள்

குறைபாட்டு நோய்

பெரி-பெரி

அறிகுறிகள்: ஆரோக்கியமற்ற நரம்பு, தசைச் சோர்வு

வைட்டமின் C

உணவுப் பொருட்கள்


ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், பச்சை மிளகாய், தக்காளி

குறைபாட்டு நோய்

ஸ்கர்வி

அறிகுறிகள்: பல் ஈறுகளில் ரத்தம் வடிதல்

வைட்டமின் D

உணவுப் பொருட்கள்

 மீன் எண்ணெய், பால், முட்டை மற்றும் சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது

குறைபாட்டு நோய்

ரிக்கட்ஸ்

அறிகுறிகள்: வலிமையற்ற, வளைந்த எலும்பு

வைட்டமின் E

உணவுப் பொருட்கள்


தாவர எண்ணெய், பச்சை காய்கறிகள், முழு கோதுமை, மாம்பழம், ஆப்பிள், கீரை

குறைபாட்டு நோய்கள்

மலட்டுத்தன்மை

அறிகுறிகள்: குழந்தையின்மை, நோய் எதிர்ப்பு தன்மை குறைதல்

வைட்டமின் K

உணவுப் பொருட்கள்


பச்சைக் காய்கறிகள், தக்காளி, முட்டைக்கோஸ், முட்டை, பால் பொருட்கள்

குறைபாட்டு நோய்கள்

இரத்தம் உறையாமை

அறிகுறிகள்:சிறிய காயம் ஏற்படும் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல்

தாது உப்புகள்

கால்சியம்


உணவுப் பொருட்கள்


பால், மீன், பச்சைப்பயறு, கோதுமை

குறைபாட்டு நோய்கள்

எலும்பு மற்றும் பல் சிதைவு

அறிகுறிகள்: எலும்பு, பற்களின் வலிமை குறைதல்

இரும்பு

உணவுப் பொருட்கள்


இறைச்சி,ஆப்பிள், கீரை, பேரீச்சம்பழம்

குறைபாட்டு நோய்கள்

இரத்த சோகை

அறிகுறிகள்: மயக்கம் வருதல், உடல் சோர்வு

அயோடின்

உணவுப் பொருட்கள்


பால், அயோடின் கலந்த உப்பு, இறால், நண்டு

குறைபாட்டு நோய்கள்

முன்கழுத்துக் கழலை

அறிகுறிகள்: கழுத்துப் பகுதியில் வீக்கம்


சரிவிகித உணவு(Balanced diet)

  • அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவே சரிவிகித உணவு எனப்படும்

தானிய வகைகள்

அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு,
சோளம், மக்காச்சோளம், பார்லி, தினை

ஊட்டச்சத்துக்கள்

அதிக கார்போஹைட்ரேட், சிறிதளவு புரதம், கொழுப்பு, வைட்டமின் B, ஃபோலிக் அமிலம், இரும்புச் சத்து, நார்ச்சத்து

பருப்பு வகைகள்

துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு பயறு, கடலைப் பருப்பு, சோயா பீன்ஸ், மொச்சை

ஊட்டச்சத்துக்கள்

அதிக புரதம், சிறிதளவு கொழுப்பு,
வைட்டமின் B, ஃபோலிக் அமிலம், இரும்புச் சத்து, நார்ச்சத்து

பால், மாமிசப் பொருட்கள்

1.பால், தயிர், நெய், பாலாடைக்கட்டி, கொழுப்பு நீக்கப்பட்ட பால்

ஊட்டச்சத்துக்கள்

புரதம், கொழுப்பு, வைட்டமின் B, கால்சியம்

2.கோழி இறைச்சி, ஈரல், மீன், முட்டை, ஆட்டு இறைச்சி

ஊட்டச்சத்துக்கள்

புரதம், கொழுப்பு, வைட்டமின் B


பழங்கள், காய்கறிகள்

1.மாம்பழம், கொய்யா, தக்காளி, பப்பாளி, ஆரஞ்சு, தர்பூசணி, சாத்துக்குடி, திராட்சை

ஊட்டச்சத்துக்கள்

கரோட்டினாய்டு, வைட்டமின் A, வைட்டமின் B, இரும்புச்சத்து, கால்சியம்

2.நெல்லிக்காய், கீரைகள், முருங்கைக் கீரை, கொத்தமல்லி தழை, முள்ளங்கி இலை, வெங்காயத்தாள்

ஊட்டச்சத்துக்கள்

கரோட்டினாய்டு, வைட்டமின் A, வைட்டமின் B,ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து

3.கேரட், கத்தரிக்காய், வெண்டைக்காய், குடைமிளகாய், அவரைக்காய், வெங்காயம், முருங்கைக்காய், காலிஃப்ளவர்

ஊட்டச்சத்துக்கள்

கரோட்டினாய்டு, ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து

நெய், எண்ணெய் வகைகள்

வெண்ணெய், நெய், வனஸ்பதி, சமையல் எண்ணெய்களான கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்

ஊட்டச்சத்துக்கள்

கொழுப்பு, அவசியமான கொழுப்பு அமிலங்கள்

சர்க்கரை, வெல்லம்

ஊட்டச்சத்துக்கள்

கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து


உணவூட்டம்

  • உணவூட்டம் என்பது உணவை உட்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாக்குதல் என பல நிலைகளை உடையது
  • உயிரினங்கள் திண்ம மற்றும் நீர்ம நிலையிலுள்ள உணவுப் பொருட்களை வெவ்வேறு முறைகளில் உட்கொள்கின்றன

உணவூட்டத்தின் வகைகள்

1.தற்சார்பு ஊட்ட முறை


  • தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்ளுதல் தற்சார்பு ஊட்ட முறை எனப்படும்
  • எடுத்துக்காட்டு: பசுந்தாவரங்கள், யூக்ளினா. இவை ஒளிச்சேர்க்கை மூலமாக உணவைத் தாமே தயாரிக்கின்றன
  • சூரிய ஒளி, கரியமில வாயு, நீர், பச்சையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாவரங்கள் ஸ்டார்ச் (சர்க்கரை) தயாரிப்பது ஒளிச்சேர்க்கை எனப்படும்

2.பிறசார்பு ஊட்ட முறை
  • தானே உணவைத் தயாரிக்க இயலாததால், உணவுக்காக பிற உயிரினங்களை சார்ந்து வாழ்வது பிற சார்பு ஊட்ட முறை எனப்படும்

பிற சார்பு ஊட்ட முறையின் வகைகள்

ஒட்டுண்ணி உணவூட்டம்


  • பிற உயிரினங்களை பாதிப்பிற்குள்ளாக்கி அவற்றிலிருந்து தமக்கு தேவையான உணவை பெறுவது ஒட்டுண்ணி உணவூட்டம் எனப்படும்
  • எடுத்துக்காட்டு:கஸ்க்யூட்டா தாவரம். இதன் அறிவியல் பெயர் கஸ்க்யூட்டா ரிஃளெக்ஸா. ஊர்களில் அழைக்கப்படும் பெயர் அம்மையார் கூந்தல், சடதாரி, தங்கக் கொடி

ஒட்டுண்ணியின் வகைகள்

புற ஒட்டுண்ணிகள்


  • பிற உயிரினங்களின் உடலின் வெளிப்பரப்பில் ஒட்டிக்கொண்டு, அவற்றிலிருந்து உணவை உறிஞ்சுவது புற ஒட்டுண்ணிகள் ஆகும்
  • எடுத்துக்காட்டு:பேன், அட்டைப்பூச்சி

அக ஒட்டுண்ணிகள்

  • உடலின் உட்பகுதியில் (குடலில்) வாழ்ந்து அங்கிருந்து உணவைப் பெறுவது அக ஒட்டுண்ணிகள் ஆகும்
  • எடுத்துக்காட்டு: உருளைப்புழு

சாறுண்ணி உணவூட்டம்
  • இறந்துபோன தாவர, விலங்குப் பொருட்களை மக்கச்செய்து, எளிய மூலக்கூறுகளாக மாற்றி அவற்றை உடல் சுவர் வழியாக உறிஞ்சுவது சாறுண்ணி உணவூட்டம் எனப்படும்
  • எடுத்துக்காட்டு: காளான்


3. சிறப்பு வகை உணவூட்டம்
  • நெப்பந்தஸ், டிரோசீரா,யுட்ரிகுலேரியா போன்ற தாவரங்கள் பசுமையானதாகவும், தற்சார்பு ஊட்ட முறையைக் கொண்டதாகவும் இருக்கின்றன. அவை நைட்ரஜன் சத்துக் குறைந்த மண்ணில் வளர்வதால் பூச்சிகளைப் பிடித்துக் கொன்று அவற்றிலிருந்து நைட்ரஜனைப் பெறுகின்றன. எனவே அவை பூச்சி உண்ணும் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன

உணவூட்ட முறையின் அடிப்படையில் விலங்குகள்

தாவர உண்ணிகள்
  • தாவரங்களை மட்டும் உண்பது தாவர உண்ணிகள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு: ஆடு, மாடு
மாமிச உண்ணிகள்
  • விலங்குகளை மட்டும் உண்பது மாமிச உண்ணிகள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு: புலி
அனைத்துண்ணிகள்
  • தாவரங்களையும், விலங்குகளையும் உண்பது அனைத்துண்ணிகள் எனப்படும்
  • எடுத்துக்காட்டு: காகம்









Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு கணிதம் - வகுத்திகள், காரணிகள்

                            Divisors and Factors                வகுத்திகள், காரணிகள் கணித மேதைகளின் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் காஸ்(Gauss) வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் எனப்படும் 1 மற்றும் அதே எண்ணால் மட்டும் வகுபடும் எண்கள் பகா எண்கள் எனப்படும் பகா எண்களில் ஒரே ஒரு இரட்டைப்படை எண் மட்டுமே உண்டு. அது 2 பகா எண்கள் = 1,2,3,5,7,11,13,....... காரணிகள் ஓர் எண்ணின் வகுத்திகளில், 1 மற்றும் அதே எண்ணைத் தவிர பிற வகுத்திகள் அனைத்தும் காரணிகள் எனப்படும் பகா எண்களுக்கு காரணிகள் இல்லை இரண்டுக்கு மேற்பட்ட வகுத்திகள் கொண்ட எண்கள் பகு எண்கள் எனப்படும் வகுபடுந்தன்மை 2 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் 0,2,4,6,8 என்ற இரட்டைப் படை எண்ணாக இருந்தால் மட்டுமே 2 - ஆல் வகுபடும் 5 - ஆல் வகுபடுந்தன்மை 1 - ம் இலக்க எண் பூஜ்ஜியம் அல்லது 5 ஆக இருப்பின் அது 5 ஆல் வகுபடும் 10 - ஆல் வகுபடு...