Skip to main content

புவியியல் - நிலக்கோளம்,நீர்க்கோளம்,வளிக்கோளம்



      Lithosphere,Hydrosphere,Atmosphere

      நிலக்கோளம்,நீர்க்கோளம்,வளிக்கோளம்

புவி

  • புவி தன் அச்சில் 23 1/2° சாய்ந்து தன்னைத் தானே சுற்றிக் கொண்டு நீள்வட்டப்பாதையில் சூரியனையும் சுற்றி வருகிறது
  • புவியின் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை புவியின் மையம் வழியாக செல்லும் ஒரு கற்பனைக் கோடு புவியின் அச்சு எனப்படும்.
  •  23 1/2° சாய்வு  புவியின் சுற்று வட்டப்பாதைக்கு 66 1/2° கோணத்தை ஏற்படுத்துகிறது
  • புவி தன்னைத்தானே சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கி. மீ/மணியாகவும்,60 ° வடக்கு அட்சரேகையில் 845 கி.மீ /மணியாகவும் துருவப்பகுதியில் சுழியமாகவும் இருக்கும்
  • புவி சூரியனை வினாடிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது
  • புவி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் ஆகும்
  • புவி சுழலுவதால் இரவு, பகல் ஏற்படுகிறது
  • புவி சூரியனைச் சுற்றி வருவதால் பருவ காலங்கள் ஏற்படுகின்றன
  • புவி உயிர்க்கோளம் என அழைக்கப்படுகிறது

நிலக் கோளம் அல்லது பாறைக்கோளம்


  • புவியின் திடமான மேற்பரப்பு நிலக்கோளம் எனப்படும்
  • புவி நிகர் கோள்கள் அனைத்தும் பாறைக்கோளத்தைக் கொண்டுள்ளன

புவியின் உள்ளமைப்பு

புவியின் உள்ளமைப்பு மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது

  1. மேலோடு
  2. கவசம்
  3. கருவம்

1.மேலோடு


  • இது புவியின் மேல் அடுக்கு ஆகும்
  • இது 5 முதல் 30 கி. மீ வரை பரவியுள்ளது
  • சிலிக்கா மற்றும் அலுமினியம் அதிகம் காணப்படுவதால் சியால் என்று அழைக்கப்படுகிறது

2.கவசம்


  • புவி மேலோட்டிற்கு கீழே உள்ள பகுதி கவசமாகும்
  • இதன் தடிமன் சுமார் 2900 கி.மீ
  • சிலிக்கா மற்றும் மெக்னீசியம் அதிகமாக காணப்படுவதால் சிமா என அழைக்கப்படுகிறது
  • புவியின் உட்புறத்தில் உருகிய நிலையில் உள்ள பாறைக் குழம்பு மாக்மா என அழைக்கப்படுகிறது

3.கருவம்


  • இது புவியின் மையம் ஆகும்
  • நிக்கல் மற்றும் இரும்பு அதிகமாக காணப்படுவதால் நைஃப் என்று அழைக்கப்படுகிறது
  • இரும்பு அதிகமாக காணப்படுவதே புவியீர்ப்பு விசைக்கு காரணம்
  • உட்கருவம் திடநிலையிலும், வெளிக்கருவம் திரவ நிலையிலும் உள்ளது
  • புவி தன் அச்சில் சுழலும் போது திட நிலையில் உள்ள உட்கருவத்தின் மேல் திரவ நிலையிலுள்ள வெளிக்கருவம் சுழல்வதால் காந்தப்புலம் உருவாகிறது

பாறைகள்


  • புவி மேலோடு பாறைகளால் ஆனது
  • தாதுக்களின் கலவையே பாறை எனப்படும்
  • பாறைகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

  1. தீப்பாறைகள்
  2. படிவப் பாறைகள்
  3. உருமாறிய பாறைகள்

தீப்பாறைகள்


  • பாறைக் குழம்பு புவியின் மேலோட்டில் வெளிப்படுவது லாவா எனப்படும்
  • பாறைக் குழம்பு வெப்பம் தணிந்து குளிர்வதால்  தீப்பாறைகள் உருவாகின
  • தக்காண பீடபூமி பாறைகளால் உருவானது
  • முதன்மைப் பாறைகள் என்றும் தாய் பாறைகள் என்றும் தீப்பாறைகள் அழைக்கப்படுகின்றன எடுத்துக்காட்டு: கருங்கல், பசால்ட்

படிவுப் பாறைகள்


  • பாறைகள் சிதைவுற்று துகள்களாகி ஆறுகள்,பனியாறுகள்,காற்று ஆகியவற்றால் அடுக்கடுக்காக படிய வைக்கப் பட்டு உருவானது
  • எடுத்துக்காட்டு: மணற்பாறை,சுண்ணாம்புப் பாறை, சுண்ணாம்பு ,ஜிப்சம் ,நிலக்கரி கூட்டுப் பாறைகள்
  • ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட நகரம் ஆகும்
  • இந்தியாவில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கட்டிடங்கள்
    மகாராஷ்டிரா -அஜந்தா மற்றும் எல்லோரா        குகைகள்
     கர்நாடகா -ஐஹோல் பதாமி கோவில்கள்
     ஒடிசா -கோனார்க் கோயில்
     தமிழ்நாடு -மாமல்லபுரம் கோயில்

உருமாறிய பாறைகள்


  • தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் அதிக வெப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் உட்பட்டு உருவானது
  • கிரானைட் நீஸ் ஆகவும், பசால்ட் சிஸ்ட் ஆகவும், சுண்ணாம்புப்பாறை சலவைக்கல் ஆகவும், மணற்பாறை குவார்சைட் ஆகவும் உருமாறுகிறது

மலைகள்


  • நிலப் பகுதியை விட 500 மீட்டருக்கு மேல் காணப்படுவது மலைகள் எனப்படும் 
  • எ.கா: 
 ஆசியா- இமயமலைத்தொடர்
வட அமெரிக்கா -ராக்கி மலைத்தொடர்            தென்அமெரிக்கா- ஆண்டிஸ் மலைத் தொடர்

பீடபூமிகள்


  • சமமான மேற்பரப்பை கொண்ட உயர்த்தப்பட்ட நிலப்பரப்பு பீடபூமிகள் எனப்படும்
  • உலகிலேயே உயர்ந்த பீடபூமி திபெத் பீடபூமி. இது உலகத்தின் கூரை அல்லது மேசை நிலம் என்றும் அழைக்கப்படுகிறது
  •  இந்தியாவில் கனிமங்கள் நிறைந்த பீடபூமி சோட்டா நாகபுரி பீடபூமி ஆகும்

சமவெளிகள்


  • சமமான மற்றும் தாழ்நிலத்தோற்றம் சமவெளிகள் எனப்படும்
  •  வளமான மண்ணும், நீர் பாசனமும் உள்ளதால் வேளாண்மைக்கு சமவெளிகள் உகந்ததாக உள்ளது
  •  உலகின் பெரிய சமவெளி கங்கை சமவெளி ஆகும் 

நீர்க்கோளம்

  • பெருங்கடல்கள், கடல்கள் ,ஆறுகள், ஏரிகள் மலை உச்சிகளில் காணப்படும் பனியுறைகள், வளிமண்டலத்தில் காணப்படும் நீராவி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது  நீர்க்கோளம் ஆகும்
  • உலகில் 5 பெருங்கடல்கள் உள்ளன

  1.  பசுபிக் பெருங்கடல்
  2.  அட்லாண்டிக் பெருங்கடல் 
  3. இந்தியப் பெருங்கடல்
  4.  அட்லாண்டிக் பெருங்கடல்
  5.  ஆர்டிக் பெருங்கடல் 

பசிபிக் பெருங்கடல் 


  • இது புவியின் மிகப் பெரிய மற்றும் ஆழமான பெருங்கடல் ஆகும்
  •  இது முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது முக்கோண வடிவத்தின் மேற்பகுதியில் காணப்படும்நீர்ச்சந்தி பெரிங் நீர்ச்சந்திஆகும் 
  • பசிபிக் பெருங்கடலையும்,ஆர்டிக் பெருங்கடலையும் இணைக்கும் பகுதி பெரிங்  நீர்ச்சந்தி ஆகும்
  • புவியின் ஆழமான பகுதி மரியானா அகழி பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது

அட்லாண்டிக் பெருங்கடல்


  • இது புவியின் இரண்டாவது பெருங்கடல் ஆகும்
  • இது s வடிவத்தைப் போன்று உள்ளது அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைப்பது ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி ஆகும்
  • அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி போர்ட்டோ ரிக்கோ அகழியில்  உள்ள மில்வாக்கி அகழி ஆகும்

இந்தியப் பெருங்கடல்


  • இது முக்கோண வடிவத்தில் உள்ளது
  • இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலை இணைப்பது மலாக்கா நீர்ச்சந்தி ஆகும்
  • இந்தியப் பெருங்கடலில் ஆழமான பகுதி ஜாவா அகழி ஆகும்
  • வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைப்பது பாக் நீர்ச்சந்தி ஆகும்

அண்டார்டிக் பெருங்கடல்


  • 60°தெற்கு அட்சத்தால் சூழப்பட்டுள்ளது
  • அண்டார்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி தென் சான்ட்விச் அகழி ஆகும்

ஆர்டிக் பெருங்கடல்


  • இது மிகச்சிறிய பெருங்கடல் ஆகும்
  • வடதுருவப்  ஆர்க்டிக் பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ளது
  • ஆர்க்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதி யுரேசியன் தாழ்நிலம் ஆகும்

வளிக்கோளம்


  • புவியைச் சுற்றி காணப்படும் காற்று தொகுதி எனப்படும்
  •  நைட்ரஜன் 78%, ஆக்ஸிஜன் 21% முதன்மை வ வாயுக்கள்கள் என அழைக்கப்படுகின்றன

வளிமண்டல அடுக்குகள்


  1. அடிவளிமண்டலம் 
  2. படை மண்டலம் 
  3. அயன மண்டலம் 
  4. வெப்ப வெளி மண்டலம் 
  5. புற வளிமண்டலம் 


  • வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லை 100 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள கர்மான்கோடு ஆகும்

மேகங்கள்

மேகங்கள் ஐந்தாக பிரிக்கப்பட்டுள்ளது 


  1. உயர்மட்ட மேகம்
  2.  இடைமட்டமேகம் 
  3. தாழ்மட்ட மேகம்
  4. கார்மேகம்
  5. செங்குத்து மேகம்

Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...