Skip to main content

புவியியல் - சூரிய குடும்பம்


                   
                          SOLAR SYSTEM

                          சூரிய குடும்பம்

  • சூரிய குடும்பத்தில் சூரியன் 99.9% மற்றும்  கோள்கள் .1% உள்ளன
  • சூரிய குடும்பம் சூரியனை சுற்றி வரும் எட்டு கோள்களையும்  ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது
  • சூரியனின் எடை புவியின் எடையை விட 20 ஆயிரம் மடங்கு அதிகம்
  • சூரியனின் ஈர்ப்புவிசை புவியீர்ப்பு விசையை விட 28 மடங்கு அதிகம்


கோள்கள்

  1. புதன்
  2. வெள்ளி
  3. பூமி
  4. செவ்வாய்
  5. வியாழன்
  6. சனி
  7. யுரேனஸ்
  8. நெப்டியூன்

குறுங்கோள்கள்

  1. சியரீசு
  2. புளூட்டோ
  3. ஏரிசு
  4. மக்கேமக்கே
  5. அவுமியா    

    புதன்
  • தன்னைத்தானே சுற்றுவதற்கு 59 நாட்கள் ஆகும்
  • சூரியனை சுற்றுவதற்கு 88 நாட்கள் ஆகும்
  •  துணைக்கோள் இல்லை


வெள்ளி

  • தன்னைத்தானே சுற்றுவதற்கு 243 நாட்கள் ஆகும்
  • சூரியனை சுற்றுவதற்கு 224.5 நாட்களாகும்
  •  துணைக்கோள் இல்லை
  • காலை நட்சத்திரம், மாலை நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது

புவி

  • தன்னைத்தானே சுற்றுவதற்கு 23 மணி 56 நிமிடம் 49 வினாடி ஆகும்
  • சூரியனை சுற்றுவதற்கு 365.25 நாட்கள் ஆகும்
  • துணைக்கோள் 1: நிலா
  • புவியில் நீர் உள்ளதால் நீர்க்கோள் அல்லது நீலக்கோள் என அழைக்கப்படுகிறது

செவ்வாய்

  • தன்னைத்தானே சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகும்
  • சூரியனை சுற்றுவதற்கு 687 நாட்களாகும்
  • துணைக்கோள் 2(டைமோஸ்,போபாஸ்)
  • இதில் இரும்பு ஆக்சைடு அதிகம் காணப்படுவதால் சிவப்பு நிற கோள் என அழைக்கப்படுகிறது

வியாழன்

  • தன்னைத்தானே சுற்றுவதற்கு 10 மணி நேரம் ஆகும்
  • சூரியனை சுற்றுவதற்கு 12 ஆண்டுகள் ஆகும்
  • துணைக்கோள் 63
  • சிவப்பு புள்ளி கோள்

சனி

  • தன்னைத்தானே சுற்றுவதற்கு 10.5 மணி நேரம் ஆகும்
  • சூரியனை சுற்றுவதற்கு 29.5 ஆண்டுகள் ஆகும்
  • துணைக்கோள் 60

யுரேனஸ்

  • தன்னைத்தானே சுற்றுவதற்கு 17 மணி நேரம் ஆகும்
  • சூரியனை சுற்றுவதற்கு 84 ஆண்டுகள் ஆகும்
  • துணைக்கோள் 27
  • இது உருளும் கோள் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் தன் அச்சில் 98° சாய்ந்து உள்ளதால் உருண்டு கொண்டே சூரியனைச் சுற்றும்

நெப்டியூன்

  • தன்னைத்தானே சுற்றுவதற்கு 16 மணி நேரம் ஆகும்
  • சூரியனை சுற்றுவதற்கு 165 ஆண்டுகளாகும்
  • துணைக்கோள் 14
  • கருப்புப்புள்ளி கோள்

 Notes:

  • புவி நிகர் கோள்கள்
           புதன்,வெள்ளி, பூமி, செவ்வாய்
  • பெருங்கோள்கள் (வியாழன் நிகர் கோள்கள்) 
           வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்
  • மிகப்பெரிய கோள்
            வியாழன்
  • மிகச் சிறிய கோள்
            புதன்
  • வளிம கோள்கள் (ஹைட்ரஜன், ஹீலியம்)
           வியாழன்,சனி
  • பனிப்பெருங்கோள்கள்(மீத்தேன், அம்மோனியா)
             யுரேனஸ்,நெப்டியூன்
  • சூரியன் மற்றும் புவி இடையே உள்ள தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும்
  • திரவ நீர் கோளம்
             புவி
  • செவ்வாயில் காணப்படும் எரிமலைகள்
             ஒலம்பஸ் மான்ஸ்
  • செவ்வாயில் காணப்படும் பள்ளத்தாக்குகள்
             வாலிஸ் மேரினாரிஸ்
  • பனி அரக்கர்கள்
             யுரேனஸ் நெப்டியூன்


நிலா

  • புவியின் துணைக்கோள்
  • கோள்களைச் சுற்றி வரும் விண் பொருட்கள் துணைக்கோள்கள் எனப்படும்
  • நிலவு புவியிலிருந்து 3,84,400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
  • நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமும் புவியைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரமும் ஏறக்குறைய ஒன்றாகும். அதாவது 27 நாட்கள் 8 மணிநேரம். இதனால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண முடியும்
  • நிலா ஒளி பூமியை வந்தடைய 1.3 வினாடி ஆகும்

பௌர்ணமி

  • பூமி சூரியனுக்கும், நிலாவிற்கும் நடுவில் வரும் போது நிலா வெளிச்சமாக தெரியும். இந்த நாளையே பௌர்ணமி என்று அழைக்கிறோம்

அமாவாசை

  • பூமி சூரியனுக்கும், நிலவிற்கும் அப்பால் செல்லும் போது நிலா இருட்டாக தெரியும். இந்த நாளையே அமாவாசை என்று அழைக்கிறோம்.

சந்திரகிரகணம்

  • பௌர்ணமி இரவில் சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்

சூரிய கிரகணம்

  • அமாவாசை பகலில் சூரியன், நிலா, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்

சிறு கோள்கள்

  • சூரியனைச் சுற்றிவரும் சிறிய திடப்பொருட்கள் சிறுகோள்கள் எனப்படும்
  • செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் காணப்படுகிறது
  • பறக்கும் மலைகள் என்று அழைக்கப்படுகிறது

வால்விண்மீன்கள்

  • திடப்பொருட்களால் ஆன தலைப்பகுதியை பனிக்கட்டியால் பிணைக்கப்பட்டுள்ளது. வால்பகுதி வாயுக்களால் ஆனது
  • புளுட்டோக்கு அப்பாலிலிருந்து வியாழனின் ஈர்ப்பு விசையால் சூரியனை நோக்கி வரும்
  • எ.கா. ஹேலி வால் விண்மீன்

விண்கற்கள்

  • சூரிய குடும்பத்தில் உள்ள சிறு கற்கள் மற்றும் உலோக பாறைகளாலான விண்பொருட்கள் விண்கற்கள் எனப்படும்
  • புவியின் வளிமண்டலத்தை அடையும்போது உராய்வின் காரணமாக எரிந்து ஒளிர்வதால் எரிநட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது

விண் வீழ்கற்கள்

  • வளிமண்டலத்தை தாண்டி புவியின் மேற்பரப்பை தாக்கும் விண்கற்கள் விண்வீழ்கற்கள் என்று அழைக்கப்படுகின்றன





Comments

Popular posts from this blog

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம்

6 - ம் வகுப்பு கணிதம் - விகிதம் மற்றும் விகித சமம் ஓர் அளவினை மற்றோர் அளவின் மடங்காக வெளிப்படுத்தி ஒப்பிடுவது விகிதம் எனப்படும் விகிதத்தைப் பின்னமாகவும் எழுதலாம். விகிதத்தைப் பெரும்பாலும் எளிய வடிவத்தில் எழுத வேண்டும் விகிதங்களின் பண்புகள் விகிதங்களுக்கு அலகு இல்லை. இது ஓர் எண் மதிப்பு. எடுத்துக்காட்டு: 8 கிலோமீட்டர்க்கும் 4 கிலோ மீட்டருக்கும் உள்ள விகிதம் 2 : 1 ஆகும் மற்றும் 2 கி. மீ : 1 கி.மீ அல்ல விகிதங்களின் இரு அளவுகளும் ஒரே அலகுடையதாக இருக்க வேண்டும்.எடுத்துக்காட்டு 4 கிலோ மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகியவற்றிற்கான விகிதம் காணும் போது அவற்றை (4×1000):400 = 4000:400=10:1 எனக் குறிப்பிடலாம் விகிதத்தில் ஒவ்வோர் எண்ணும் உறுப்பு என அழைக்கப்படும் விகிதத்தின் உறுப்புகளின் வரிசையை மாற்றி எழுத முடியாது 20:5 என்ற விகிதத்தை எளிய வடிவில் காண்க 20/5 = 4/1 =4:1 500கி மற்றும் 250 கி க்கும் உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க 500/250 = 2/1 =1 மாதவியும், அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900 க்கு வாங்குகின்றனர். அன்புவும், மாத...

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல்

6 - ம் வகுப்பு தமிழ் - பாடறிந்து ஒழுகுதல் ஆசாரக்கோவை ஆசாரக்கோவை நூலை எழுதியவர் - பெருவாயின் முள்ளியார் இவர் பிறந்த ஊர் கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது தமிழர் பெருவிழா பொங்கல் விழா தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்பு செய்யும் விழா பொங்கல் விழா. உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர். தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர். தைத் திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர். எனவே இத்திருவிழாவை அறுவடைத் திருவிழா என்றும் அழைப்பர். உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர். போகித் திருநாள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது ஆன்றோர் மொழி. வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும் வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிப...

6 - ம் வகுப்பு கணிதம் - இயல் எண்கள், முழு எண்கள்

        Natural and Whole numbers         இயல் எண்கள், முழு எண்கள் இயல் எண்கள் அல்லது எண்ணும் எண்கள் அல்லது மிகை முழு எண்கள் N = {1,2,3,4,......} முழு எண்கள் அல்லது நிறைவெண்கள் W = {0,1,2,3,4......} எல்லா முழு எண்களுக்கும் தொடரி உண்டு பூஜ்ஜியத்தைத் தவிர எல்லா முழு எண்களுக்கும் முன்னி உண்டு எல்லா முழு எண்களையும் கூட்டவும், பெருக்கவும் முடியும் இயல் எண்ணினை அதைவிட சிறிய இயல் எண் அல்லது அதே எண்ணைக் கொண்டு கழிக்க முடியும் ஒரு பெரிய எண்ணை சிறிய எண்ணால் வகுக்க முடியும் அதிக இலக்கங்கள் உடைய எண்கள் நம் நாட்டில் 10,000            = பத்தாயிரம் 1,00,000         = ஒரு லட்சம் 10,00,000        = பத்து லட்சம் 1,00,00,000     =ஒரு கோடி 1,00,00,00,000 = நூறு கோடி உலகளவில் 10,000             = பத்தாயிரம் 100,000           = நூறாயிரம் 1,000,000        = ஒ...